TNPSC Current Affairs – English & Tamil – May 19, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(19th May, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – May 19, 2021


1. Tamil writer Ki Rajanarayanan passed away at the age of 98 in Puducherry

  • Tamil writer Ki. Rajanarayanan died in Puducherry at the age of 98. He was fondly known as KiRa. He was admired as a folklorist and known as ‘Father of Karisal Literature’ (black soil land).
  • He was a recipient of Sahitya Akademy award for his novel ‘Gopalapurathu Makkal’ in the year 1991. His first short story ‘Mayamaan’ was published in 1959 in the magazine Saraswathi.
  • His novel ‘Kidai’ was converted into a film and was screened at the International Film Festival of India in 2003.

 

1. தமிழ் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் புதுச்சேரியில் தனது 98வது வயதில் காலமானார்

  • தமிழ் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் தனது 98வது வயதில் புதுச்சேரியில் காலமானார். அவர் கிரா என்று அன்புடன் அழைக்கப்பட்டார். அவர் ஒரு நாட்டுப்புறவியலாளர் என்றும் கரிசல் இலக்கியத்தின் தந்தை (கரிசல் நிலம்) என்றும் அழைக்கப்பட்டார்.
  • 1991ஆம் ஆண்டில் கோபாலபுரத்து மக்கள் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். அவரது முதல் சிறுகதை ‘மாயமான் 1959இல் சரஸ்வதி இதழில் வெளியிடப்பட்டது.
  • அவரது ‘கிடாய்‘ நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டு 2003ஆம் ஆண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

2. Chandigarh startup develops world’s first private digital court

  • Jupitice Justice Technologies, a Chandigarh-based startup has developed the world’s first private digital court under the Private Justice System (Alternative Dispute Resolution or ADR Mechanism). ADR mechanisms are quick, cost-effective mutual settlement.
  • Jupitice’s Private Digital Court is the world’s first end-to-end digital justice delivery platform on a single platform. Jupitice has also aggregated ADR professionals across the world to form its ‘Marketplace’ which makes it even easier for justice seekers to connect with justice providers to resolve cross-border disputes without any jurisdiction barrier.
  • Online arbitration award received on the Jupitice platform is as legally enforceable as a court decree like any other arbitration award.

 

2. சண்டிகர் தொடக்க நிறுவனம் உலகின் முதல் தனியார் மின்னணு நீதிமன்றத்தை உருவாக்குகிறது

  • சண்டிகரை தளமாகக் கொண்ட ஜூபிடிஸ் ஜஸ்டிஸ் டெக்னாலஜிஸ் என்ற தொடக்க நிறுவனம் தனியார் நீதி அமைப்பின் (மாற்று தீர்வு அல்லது ADR மெக்கானிசம்) கீழ் உலகின் முதல் தனியார் மின்னணு நீதிமன்றத்தை உருவாக்கியுள்ளது. ATA வழிமுறைகள் விரைவான, செலவு குறைந்த பரஸ்பர தீர்வுகளை அளிக்கும்.
  • ஜூபிட்டிஸின் தனியார் மின்னணு நீதிமன்றம் உலகின் முதல் ஒரே தளத்தின் இயங்கும் முழு மின்னணு நீதி விநியோக கலவையாகும். ஜூபிடிஸ் உலகெங்கிலும் உள்ள ADR தொழில்வல்லுநர்களின் ‘சந்தை’ உருவாக்கி ஒருங்கிணைத்துள்ளது. இது நீதி கோருபவர்கள் எந்த அதிகார வரம்பு தடையும் இல்லாமல் எல்லை தாண்டிய பிரச்சினைகளைத் தீர்ப்பதை இன்னும் எளிதாக்குகிறது.
  • ஜூபிடிஸ் தளத்தில் பெறப்பட்ட ஆன்லைன் நடுவர் தீர்ப்பு மற்ற நடுவர் தீர்ப்பு மற்றும் நீதிமன்ற ஆணையைப் போலவே சட்டபூர்வமாக செயல்படுத்தக்கூடியது.

3. Government brings changes in existing Customs Rules, IGCR 2017 to boost trade

  • The Government has brought changes in IGCR 2017 through the Customs (Import of Goods at Concessional Rate of Duty) Amendment Rules, 2021 to boost trade facilitation.
  • The IGCR, 2017 lay down the procedures and way an importer can avail the benefit of a concessional Customs duty on import of goods required for domestic production of goods or providing services. However, some sectors such as gold, jewellery, precious stones and metals have been excluded.
IGCR, 2017 IGCR Amendment Rules, 2021
Importers with manufacturing facilities only can avail the benefits. Importers without manufacturing facilities can also avail the benefits.
Imported capital goods at a concessional customs cannot be sold in the domestic market. Imported capital goods at a concessional customs can be sold in the domestic market on payment of duty and interest, at a depreciated value.
The final goods cannot be manufactured entirely on job work basis. The final goods can be manufactured entirely on job work basis so MSMEs can be benefitted.

 

3. வர்த்தகத்தை அதிகரிக்க தற்போதுள்ள சுங்க விதிகள், IGCR, 2017இல் அரசு மாற்றங்களைக் கொண்டு வருகிறது

  • வர்த்தக வசதியை அதிகரிக்க சுங்க (சலுகை வரி விகிதத்தில் பொருட்களை இறக்குமதி செய்தல்) திருத்த விதிகள் 2021 மூலம் IGCR 2017இல் அரசு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
  • IGCR, 2017 நடைமுறைகள் மூலம் ஒரு இறக்குமதியாளர் உள்நாட்டு உற்பத்தி அல்லது சேவைகளை வழங்குவதற்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சலுகை சுங்க வரியின் நன்மையைப் பெற முடியும். இருப்பினும், தங்கம், நகைகள், விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் உலோகங்கள் போன்ற சில பொருட்கள் இதிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.
IGCR, 2017 IGCR திருத்த விதிகள், 2021
உற்பத்தி வசதி கொண்ட இறக்குமதியாளர்கள் மட்டுமே நன்மைகளைப் பெற முடியும். உற்பத்தி வசதி இல்லாத இறக்குமதியாளர்களும் நன்மைகளைப் பெறலாம்.
சலுகை சுங்கத்தில் இறக்குமதி செய்யப்படும் மூலதனப் பொருட்களை உள்நாட்டுச் சந்தையில் விற்க முடியாது. இறக்குமதி செய்யப்படும் மூலதனப் பொருட்களை சலுகைசுங்கத்தில் உள்நாட்டுச் சந்தையில் தீர்வை மற்றும் வட்டிசெலுத்துகையின் பேரில், மதிப்பிழந்த பெறுமதியில் விற்க முடியும்.
இறுதி/நுகர்வோர் பொருட்களை முற்றிலும் வேலை அடிப்படையில் உற்பத்தி செய்ய முடியாது. இறுதி/ நுகர்வோர் பொருட்களை முற்றிலும் வேலை அடிப்படையில் உற்பத்தி செய்யலாம், இதனால் சிறு, குறு தொழிலாளர்கள் பயனடைவர்.

 


4. Amphotericin-B to provide relief to patients suffering from Mucormycosis

  • The Central Government has increased the production of Amphotericin B to provide relief to the patients suffering from Mucormycosis.
  • Mucormycosis is also known as Black Fungus that affects people who are suffering from diabetes. The fungal infection Mucormycosis mainly affects people who are on medication that reduces their ability to fight environmental pathogens.

4. முகார்மைகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நிவாரணம் வழங்கும் ஆம்போடெரிசின்பி

  • மத்திய அரசு, முகார்மைகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ஆம்போடெரிசின் பி உற்பத்தியை அதிகரித்துள்ளது.
  • நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களை பாதிக்கும் கருப்பு பூஞ்சை முகோர்மைகோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. பூஞ்சை தொற்றான முகோர்மைகோசிஸ் முக்கியமாக சுற்றுச்சூழல் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறனைக் குறைத்து மருந்துகளை உட்கொண்டவர்களை பாதிக்கிறது.

5. Shiv Sunder Das appointed as the batting coach of the Indian women’s cricket team

  • Former Test opener Shiv Sunder Das has been appointed as the batting coach of the Indian women’s cricket team only for the upcoming seven-match tour of England.
  • Former Indian Railways player Abhay Sharma has been appointed as the fielding coach.
  • Ramesh Powar has already been appointed as the Chief coach of the Indian women’s cricket team.

5. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஷிவ் சுந்தர் தாஸ் நியமனம்

  • முன்னாள் டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரர் ஷிவ் சுந்தர் தாஸ், வரவிருக்கும் ஏழு போட்டிகள் கொண்ட இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு மட்டுமே இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ரயில்வேயின் முன்னாள் வீரர் அபய் சர்மா பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ரமேஷ் பவார் ஏற்கனவே இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. Manipur launches mobile app “MOMA Market” for home delivering vegetables

  • Chief Minister of Manipur N Biren Singh launched a mobile application, “MOMA Market” for home delivery of fresh vegetables. The mobile application can be downloaded from momamarket.com and it will also be available on Google Play Store.

6. வீட்டில் காய்கறிகளை விநியோகிக்கும் மொபைல் பயன்பாட்டைமோமா மார்கெட்மணிப்பூர் அறிமுகப்படுத்தியது

  • மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங் புதிய காய்கறிகளை வீட்டில் விநியோகிக்க மோமா சந்தை என்ற மொபைல் பயன்பாட்டைத் தொடங்கி வைத்தார். மொபைல் பயன்பாட்டை momamarket.com என்னும் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் இது கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கும்.

7. Iran develops its first completely self-developed supercomputer “Simorgh”

  • Iran’s new supercomputer “Simorgh” will provide large-scale data processing services for a range of state-run and private scientific research.
  • It will also be used for artificial intelligence analysis, traffic and weather data, and image processing, among other things.
  • The supercomputer was developed indigenously by Tehran’s Amirkabir University of Technology (AUT). The supercomputer has a performance capacity of 56 petaflops.

7. ஈரான் அதன் முதல் முற்றிலும் சுய உருவாக்கம் செய்யப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர்சிமோர்க்”ஐ உருவாக்குகியுள்ளது

  • ஈரானின் புதிய சூப்பர் கம்ப்யூட்டர் சிமோர்க்” அரசு மற்றும் தனியார் நடத்தும் அறிவியல் ஆராய்ச்சிக்கு பெரிய அளவிலான தரவு செயலாக்க சேவைகளை வழங்கும்.
  • இது செயற்கை நுண்ணறிவு பகுப்பாய்வு, போக்குவரத்து மற்றும் வானிலை தரவு, மற்றும் பட செயலாக்கம், போன்றவற்றுடன் பயன்படுத்தப்படும்.
  • இந்த சூப்பர் கம்ப்யூட்டர் தெஹ்ரானின் அமீர்கபீர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் (AUT) உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது. இந்த சூப்பர் கம்ப்யூட்டர் 56 பெட்டாஃப்ளாப்ஸ் செயல்திறன் திறனைக் கொண்டுள்ளது.

8. India is the second largest insurance-technology market in Asia-Pacific, says S&P Global Market Intelligence report

  • According to S&P Global Market Intelligence report, India is the second-largest insurance technology market in Asia-Pacific and accounts for 35 per cent of the $3.66 billion insurtech-focused venture capital invested in the region.
  • The data showed that at least 335 private insurtechs are operating in Asia-Pacific

8. ஆசிய பசிபிக்கில் இந்தியா இரண்டாவது பெரிய காப்பீட்டு தொழில்நுட்ப சந்தையைக் கொண்டுள்ளது என எஸ் அண்ட் பி குளோபல் மார்கெட் இன்டலிஜென்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது

  • எஸ் அண்ட் பி குளோபல் மார்கெட் இன்டலிஜென்ஸ் அறிக்கையின்படி, ஆசியபசிபிக்கில் இரண்டாவது பெரிய காப்பீட்டு தொழில்நுட்ப சந்தையாக இந்தியா உள்ளது, மேலும் இப்பகுதியில் முதலீடு செய்யப்பட்ட 66 பில்லியன் டாலர் துணிகர மூலதனத்தில் 35 சதவீதத்தை காப்பீட்டு தொழில்நுட்பம் கொண்டுள்ளது.
  • ஆசிய-பசிபிக்கில் குறைந்தபட்சம் 335 தனியார் காப்பீட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுகின்றன என்று தரவு காட்டியது.

9. Former Union Minister Chaman Lal Gupta passed away at 87

  • Former Union Minister Chaman Lal Gupta passed away due to prolonged illness. He was a member of the J&K Legislative Assembly for the first time in 1972.
  • He served as a Union Minister of State, Union Ministry of Civil Aviation, Union Minister of State (independent charge), Union Ministry of Food Processing Industries and Union Minister of State for Defence.

9. முன்னாள் மத்திய அமைச்சர் சாமன் லால் குப்தா தனது 87 வயதில் காலமானார்

  • முன்னாள் மத்திய அமைச்சர் சமான் லால் குப்தா நீண்ட கால உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 1972இல் முதல் முறையாக ஜம்முகாஷ்மீர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
  • மத்திய இணையமைச்சர், மத்திய குடிமை விமானப் போக்குவரத்து அமைச்சகம், மத்திய இணையமைச்சர் (தனிப் பொறுப்பு), மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகம் மற்றும் மத்திய பாதுகாப்பு இணையமைச்சராக பணியாற்றினார்.

10. Novac Djokovic tops the ATP rankings

  • Novac Djokovic tops the ATP rankings with 11,063 points.
  • Russian Daniil Medvedev continues to be ranked No. 2. Rafael Nadal of Spain remains at 3rd

ATP (Association of Tennis Professionals) rankings

  • ATP (Association of Tennis Professionals) rankings rank the Tennis Professionals based on their singles and doubles performance.

10. ஏடிபி தரவரிசையில் நோவாக் ஜோகோவிச் முதலிடம்

  • நோவாக் ஜோகோவிச் 11,063 புள்ளிகளுடன் ஏடிபி தரவரிசையில் முதலிடம் வகிக்கிறார்.
  • ரஷ்ய டானில் மெட்வெடேவ் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ளார். ஸ்பெயினின் ரஃபேல் நடால் 3வது இடத்தில் உள்ளார்

ஏடிபி (டென்னிஸ் வல்லுநர் சங்கம்) தரவரிசை

  • ஏடிபி (டென்னிஸ் வல்லுநர் சங்கம்) தரவரிசை டென்னிஸ் வல்லுநர்களை ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டி செயல்திறனின் அடிப்படையில் பட்டியலிடும்.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – May 19, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
19th May, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – May Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – May 2021