TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 23, 2018

ஜம்மு காஷ்மீரின் 13-வது கவர்னராக சத்யபால் மாலிக் பதவியேற்பு :

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 23, 2018

  • ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலுள்ள ராஜ் பவனில் உயர்நீதிமன்ற நீதிபதி கீதா மிட்டால் தலைமையில் சத்யபால் மாலிக் மாநிலத்தின் 13-வது கவர்னராக பதவி பொறுப்பேற்றார்.தற்போது கவர்னராக பொறுப்பேற்றுள்ள சத்யபால் மாலிக், பீகார் மாநிலத்தின் முன்னாள் கவர்னர் ஆவார்.
  • இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதல்மந்திரிகள் பரூக் அப்துல்லா, மெக்பூபா முப்தி உட்பட 400 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
  • இதற்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கவர்னராக பதவி புரிந்த நரேந்த்ர நாத் வோக்ரா, மாநிலத்தில் அதிக காலம் கவர்னராக பதவி புரிந்தவர்களில் இரண்டாவது நபர் என்னும் சிறப்பை பெற்றார்.

Kempegowda சர்வதேச விமான நிலையம் :உலகில் வேகமாக வளர்ந்து வரும் இரண்டாம் விமான நிலையம்

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 23, 2018

  • Routes Online வெளியிட்ட அறிக்கையின்படி 2018 ஆம் ஆண்டின் முதல் பகுதியில் உலகின் இரண்டாவது மிக வேகமாக வளர்ந்துவரும் விமான நிலையமாக Kempegowda International Airport (KIA) நியமிக்கப்பட்டுள்ளது.
  • பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை மூலமாக கொண்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது .இது 6 மாத காலத்தில் 1,58,50,352 பயணிகளை பதிவு செய்துள்ளது.

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் டேவிட் பெக்காம் UEFA ஜனாதிபதி விருது பெற்றார் :

  • கால்பந்துக்கு அவரது பங்களிப்புக்காக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் டேவிட் பெக்காம் UEFA ஜனாதிபதி விருது பெற்றார்.டேவிட் பெக்காம் UEFA(Union of European Football Associations) ஜனாதிபதி விருது பெற்ற மூன்றாவது ஆங்கிலேயர் ஆவார்.
  • சர் பாபி ராப்சன் (2002) மற்றும் சர் பாபி சார்ல்டன் (2008) முந்தைய ஆங்கில வெற்றியாளர்கள் ஆவர்.

ஜனாதிபதி கோவிந்த் புது தில்லியில் International Buddhist Conclave-தொடங்கி வைத்தார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 23, 2018

  • புதுடில்லியில் சர்வதேச பௌத்த சம்மேளனத்தை(International Buddhist Conclave) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். Buddha Path – The Living Heritage’ என்பதே இதன் கருப்பொருள் ஆகும்.
  • இது இந்தியாவிலுள்ள பெளத்த பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும் மற்றும் நாட்டின் பௌத்த தளங்களுக்கு சுற்றுலாவை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டு உள்ளது.

பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் காலமானார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 23, 2018

  • மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான குல்தீப் நய்யார் டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 95.
  • குல்தீப் நய்யார் 11 புத்தகங்களை எழுதியுள்ளார். நேருவுக்குப் பிறகு இந்தியா போன்றவை இவரது புகழ்பெற்ற புத்தகங்கள்.
  • எல்லைகளுக்கு இடையே என்ற இவரது சுய சரிதை மிகவும் பிரபல புத்தகம். இந்திய பாகிஸ்தான் நல்லுறவு குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் ஷர்துல் விகான் வெள்ளி வென்றார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 23, 2018

  • ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியில் டபுள் டிராப் பிரிவில் இந்திய வீரர் ஷர்துல் விகான் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
  • இதனையடுத்து ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 17-வது பதக்கத்தை வென்றுள்ளது. தற்போது வரை இந்தியா 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் அங்கிதா ரெய்னா வெண்கலம் வென்றார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 23, 2018

ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

சீனாவின் ஷாங்க் ஷூவிடம் அரையிறுதி போட்டியில் 4-6, 7-6 என்ற கணக்கில் தோற்றார் அங்கிதா ரெய்னா. எனினும் தற்போது மூன்றாவது இடம் பெற்று வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.


TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 23,2018


TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 22, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 21, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 13, 2018