TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 28,2018
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 28 , 2018
இந்தியா – கென்யா கூட்டு வர்த்தகக் குழுவின் கூட்டம் நைரோபியில் நடைபெற்றது:
- கென்யாவில் உள்ள நைரோபியில் இந்தியா – கென்யா கூட்டு வர்த்தகக் குழுவின் 8-வது கூட்டம் ஆகஸ்ட் 22 முதல் 25 வரை நடைபெற்றது.
- உணவுப் பாதுகாப்பு, குறைந்த செலவில் வீட்டுவசதி, அனைவருக்கும் சுகாதாரம், தொழில்துறை உற்பத்தி எனும் கென்யாவின் நான்கு பெரிய திட்டங்களை செயல்படுத்துவதில், இந்தியாவின் பங்களிப்பு பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
- இந்தக் கூட்டத்திற்கு மத்திய தொழில், வர்த்தகத் துறை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபுவும், கென்யா அரசின் தொழில், வர்த்தகம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. பீட்டர் முன்யா–வும் தலைமை வகித்தனர்.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் இணையப் பக்கத்தைத் தொடங்கிவைத்தார்:
- இந்திய எரிவாயு ஆணைய நிறுவனத்தின் குழாய்கள் வழியாக இயற்கை எரிவாயுவை கொண்டு செல்லும் சேவையின்கீழ் எளிதாக, முறையாக, வெளிப்படையாக எரிவாயுவை பதிவு செய்வதற்கான இணையப் பக்கத்தை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் தொடங்கிவைத்தார்.
- www.gailonline.com என்ற இந்த இணையப் பக்கம், நாட்டின் இயற்கை எரிவாயுத் துறையில் முதலாவதாகும்.
DRDO அமைப்பின் தலைவராக டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி பொறுப்பேற்றார்:
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (ஆர் & டி) செயலராகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ)-ன் தலைவராகவும் டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி புதுதில்லியில் பொறுப்பேற்றார்.
- பிரபல ஏவுகணை விஞ்ஞானியான டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி, உள்நாட்டு வடிவமைப்பு, பல வகையான ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கருவிகளைப் படைப்பிரிவில் சேர்ப்பது, இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஆயுதங்கள் மற்றும் வான் பயண மின்னணுவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளுக்கு முக்கிய பங்களிப்பை அளித்துள்ளார்.
ஆசிய விளையாட்டு பாட்மிண்டனில் வெள்ளி வென்றார் பி.வி.சிந்து:
- ஜகார்த்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், பாட்மிண்டன் பிரிவில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.
- மேலும், வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையையும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற 2-வது வீராங்கனை என்ற பெயரையும் சிந்து பெற்றார்.
ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா:
- ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.
- இந்தோனேஷியாவில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான ஈட்டி எறி தலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.06 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.
- இதன் மூலம் அவர், ஆசிய விளையாட்டில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
தடகளத்தில் தமிழகத்தின் தருண் உட்பட 3 பேர் வெள்ளி வென்று அசத்தல்:
- ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் தருண் அய்யாசாமி பந்தய தூரத்தை 48.96 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- தருண் அய்யா சாமி தமிழகத்தில் உள்ள திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வெள்ளிப் பதக்கம் வென்ற அவர், தனது சொந்த தேசிய சாதனையையும் முறியடித்தார்.
- மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீ பிள்சேஸ் போட்டியில் இந்தியாவின் சுதா சிங் பந்தய தூரத்தை 9 நிமிடம் 40.03 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். பஹ்ரைனின் வின்பிரட் யவி 9:36.52 விநாடிகளில் இலக்கை கடந்து தங்கப் பதக்கமும், வியட்நாமின் நெகுயன் (9:43.83) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ் போட்டி: இந்திய அணிக்கு வெண்கல பதக்கம்
- ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது.
- ஆசிய விளையாட்டு போட்டியில் 8 தங்கம், 15 வெள்ளி, 21 வெண்கலம் என 44 பதக்கங்களுடன் 9-வது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டு போட்டி: ஆடவர் குழு வில்வித்தையில் இந்திய அணி வெள்ளி பதக்கம்
- ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவர் குழு வில்வித்தையில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் 8 தங்கம், 15 வெள்ளி, 20 வெண்கலம் என 43 பதக்கங்களுடன் 9-வது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் குழு வில்வித்தையில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.
நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை நீனா வராகில் வெள்ளிப் பதக்கம்:
- மகளிர் நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை நீனா வராகில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிச் சுற்றில் அவர் 6.51 மீட்டர் தாண்டி 2வது இடம் பிடித்தார்.
- வியட்னாம் வீராங்கனை புயி தி து தவோ (6.55 மீ.) தங்கப் பதக்கமும், சீனாவின் ஸு ஸியோலிங் (6.50 மீ.) வெண்கலமும் வென்றனர்.
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 28 , 2018
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 27, 2018
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 23, 2018