TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 30, 2018
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 30, 2018
பிரிக்ஸ் வங்கிக்கு ஏஏ பிளஸ் தரச்சான்று:
- சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புதிய மேம்பாட்டு வங்கிக்கு (என்டிபி) ஏஏ பிளஸ் தரச்சான்று வழங்கப் பட்டுள்ளது.
- பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப் பிரிக்கா ஆகிய நாடுகள் (பிரிக்ஸ்) இணைந்து உருவாக் கிய வங்கிதான் என்டிபி எனப்படும் புதிய மேம்பாட்டு வங்கியாகும்.
- இதற்கு முதுபெரும் வங்கி யாளர் கே.வி. காமத் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
- சர்வதேச தரச்சான்று நிறு வனமான ஸ்டாண்டர்டு அண்ட் பூர் (எஸ் அண்ட் பி) நிறு வனம் இந்த வங் கிக்கு ஏஏ பிளஸ் தரச் சான்றை வழங்கியுள்ளது
ஜி.டி.பி 7.4 சதவீதமாக உயரும்:RBI
- நடப்பு நிதியாண்டில், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.4 சதவீதமாக வளர்ச்சி காணும் என, ரிசர்வ் வங்கி மதிப்பிட்டு உள்ளது. இது, கடந்த நிதியாண்டில், 6.7 சதவீதமாக இருந்தது.
- இது குறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில், சர்வதேச நிலவரங்கள், அன்னிய வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
- அதனால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும் என்றாலும், அதை, அன்னிய நேரடி முதலீடுகள் மூலம் சமாளிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது
‘டிரிபிள் ஜம்ப்’ பிரிவில் அர்பிந்தர் சிங்குக்கு தங்கம்:
- ஜகார்தாவில் 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று நடந்த ஆடவருக்கான டிரிபிள் ஜம்ப் தடகளப் போட்டியில், இந்திய வீரர் (Arpinder Singh) அர்பிந்தர் சிங் 16.77 மீட்டர் தொலைவு தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றார்.
- உஸ்பெகிஸ்தான் வீரர் ரஸ்லன் குர்பனோவ் 16.62 மீட்டர் தாண்டி வெள்ளிப்பதக்கத்தையும், சீன வீரர் ஷு காவோ 16.56 மீட்டர் தாண்டி வெண்கலத்தையும் கைப்பற்றினர்.
புவியியல் துறை அமைச்சகத்தின் குடைவரை திட்டம் ‘ஓ–ஸ்மார்ட்‘:
- புவி அறிவியல் அமைச்சகத்தினால் ஒரே குடையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டமான O-SMART (‘Ocean Services, Technology, Observations, Resources Modelling and Science) திட்டத்திற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய வெளியீட்டாளர்களுக்கான ‘நவலேகா’ என்ற பெயரில் கூகிள் புதிய தளத்தை அறிமுகப்படுத்தியது:
- டெல்லியில் நடந்த Google for India-வின் நான்காவது பதிப்பில், இந்திய வட்டார செய்தி வெளியீட்டாளர்கள் ஆன்லைனில் அவர்களின் உள்ளடக்கத்தை வெளியிட உதவுவதற்காக “ப்ராஜெக்ட் நாவலேகா”(Navlekha) எனும் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
- Navlekha இன் உத்தியோகபூர்வ இணையத்தளம் பயனர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். பயனர்கள் தங்கள் வெளியீட்டு வலைத்தளத்தை அமைத்து நிபுணர்களிடமிருந்து உதவி பெறலாம்.
ஸ்வப்னா பர்மான் : ஹெப்லதான் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை
- ஹெப்லதான் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையை ஸ்வப்னா பர்மான்(Swapna Barman) பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
- ஹெப்லத்தான் பிரிவில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.
- சீன வீராங்கனை குயிங்லிங் 5,954 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், ஜப்பான் வீராங்கனை யமாசகி 5,873 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலம்:
- ஆசிய விளையாட்டு போட்டியின் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு அரை இறுதியில் தோற்ற இந்திய அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.
- பைனலில் இரண்டு சீன அணிகள் மோதுவதால், தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் அந்த நாட்டுக்கே உறுதியாகி உள்ளது.