TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 29 , 2018

சாகித்ய அகாடமியால் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலுக்கு விருது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 29,2018

  • இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் ‘கள்ளிக் காட்டு இதிகாசம்’ நாவலுக்கு இந்திய தொழில் வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) விருது வழங்கியுள்ளது.‘இந்தியாவின் சிறந்த புத்தகம்’ என ‘ஃபிக்கி’ கவுரவம் அளித்தது.
  • கவிஞர் வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவல் கடந்த 2003-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. சாகித்ய அகாடமி இந்த நாவலை 23 மொழிகளில் மொழிபெயர்த்து வருகிறது.
  • முதலாவதாக, இந்தியில் ‘நாகபனீ வன் கா இதிஹாஸ்’ என்ற பெயரில் இந்த நாவலை மொழியறிஞர் எச்.பாலசுப்பிரமணியன் மொழி பெயர்த்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் மன்ஜித் சிங்;

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 29,2018

  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் மன்ஜித் சிங் தங்கப் பதக்கமும், ஜின்சன் ஜான்சன் வெள்ளி பதக்கமும் வென்றனர்.
  • பாட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.

குராஷ்

  • மகளிருக்கான குராஷ் போட்டி யில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பிங்கி பல்ஹரா வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் பிங்கி 0-10 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் குல்னர் சுலைமனோவாவிடம் தோல்வியடைந்தார். மற்றொரு இந்திய வீராங்கனையான மலபிரபா யாலப்பா ஜாதவ் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

தேசிய விளையாட்டு தினம் ஆகஸ்டு 29

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 29,2018

  • தேசிய விளையாட்டு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 29 ம் தேதி புகழ்பெற்ற ஹாக்கி வீரர் தியான் சந்த் பிறந்தநாள் அன்று கொண்டாடப்படுகிறது

மனிதர்களுடன் ககன்யான் விண்கலம் அடுத்த 30 மாதத்தில் விண்ணில் பாயும் :

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 29,2018

  • விண்வெளிக்கு மனிதர்களை சுமந்து செல்லும் ககன்யான் விண்கலத்தை அடுத்த 30 மாதங்களில் ஏவுவதற்கான முயற்சியில் இஸ்ரோ முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.
  • விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவும் 2004ல் இந்த திட்டத்தை தொடங்கியது.
  • இதற்காக, ‘ககன்யான்’ என்ற பெயரில் விண்கலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதை விண்வெளியில் ஏவ, ‘ஜிஎஸ்எல்வி எம்கே 3’ என்ற ராக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • ‘‘ககன்யான் விண்கலத்தின் முழுமையான திட்டம் 2022க்குள் முடிக்கப்படும் என்று மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் நேற்று கூறினார்.

.நா. துணை பொது செயலாளராக இந்தியாவின் சத்யா திரிபாதி நியமனம்

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 29,2018

  • .நா.வின் (United Nations Environment Programme (UNEP)) துணை பொதுச் செயலாளராக இந்தியாவின் பிரபல பொருளாதார நிபுணர் சத்யா எஸ் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அவர் எலியட் ஹாரிஸ் இடத்தை நிரப்புகின்றார். மேலும் நியூயார்க் ஐ.நா. சுற்றுச்சூழல் மையத்தின் தலைவராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்நிலையில், இந்தியாவின் சத்யா திரிபாதியை ஐ.நா. துணை பொது செயலாளராகவும், நியூயார்க் சுற்றுச்சூழல் அலுவலகத்தின் தலைவராகவும் நியமித்து, .நா. சபை தலைவர் அன்டோனியோ கட்டர்ஸ் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிய விளையாட்டு 2018: 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார் டூட்டி சந்த்

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 29,2018

  • ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் டூட்டி சந்த் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
  • பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் டூட்டி சந்த் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

ஆசிய விளையாட்டு 2018: கலப்பு 4×400 மீ. ஓட்டத்தில் வெள்ளி

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 29,2018

  • ஆசிய விளையாட்டு போட்டியில் பேட்மின்டன், டேபிள் டென்னிஸ், வில்வித்தையில் பதக்கங்கள் வென்ற நமது வீரர், வீராங்கனைகள், கலப்பு 4*400 மீ. ஓட்டப்பிரிவிலும் அசத்தினர்.
  • இதில் முகமது அனாஸ், தமிழக வீரர் ஆரோக்கிய ராஜீவ், ஹிமா தாஸ், பூவம்மா ஆகியோர் கொண்ட இந்திய அணி பங்கேற்றது. போட்டி தூரத்தை 3 நிமிடம் 15.71 வினாடிகளில் கடந்த நமது அணி வெள்ளி வென்று சாதித்தது.
  • 3 நிமிடம் 11.89 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்த பக்ரைன் அணி தங்கமும், 3 நிமிடம் 19.52 நிமிடத்தில் கஜகஸ்தான் வெண்கலமும் வென்றன

Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here 



TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 28, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 27, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 23, 2018