TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 21, 2018

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய கைப்பந்து அணியின் கேப்டனாக தமிழக வீரர் உக்கரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 21, 2018

  • இந்தோனேசியாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய கைப்பந்து அணியின் கேப்டனாக தமிழக வீரர் உக்கரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன (ஆக.19 – 27).
  • இந்த தொடருக்கான இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் கைப்பந்து அணிகளை இந்திய கைப்பந்து கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ராமவதார் சிங் ஜாக்கர் அறிவித்துள்ளார்.

மகளிர் உலக கோப்பை ஹாக்கி லண்டனில் இன்று கோலாகல தொடக்கம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 21, 2018

  • மகளிர் உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடர் லண்டனில் இன்று தொடங்குகிறது. பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, தனது முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது.

ஆயுர்வேதத்திற்கு அறிவியல் மதிப்பீடு கொடுக்கும் வகையில் AIIA மற்றும் IIT Delhi-யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 21, 2018

  • IIT Delhi மற்றும் All India Institute of Ayurveda (AIIA) ஆகியோருக்கு இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • புராதன மருத்துவ விஞ்ஞானத்திற்கு விஞ்ஞான சரிபார்ப்பு” (“scientific validation”)மற்றும் தொழில்நுட்பத்துடன் அதை ஒருங்கிணைப்பதையும் இது இலக்காக கொண்டது.
  • இந்த திட்டங்களுக்கு ஆயுஷ் அமைச்சகம் நிதியுதவி அளிக்கிறது.

டர்பனில் நடைபெற்ற 8-வது பிரிக்ஸ் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் திரு. ஜே.பி. நட்டா உரையாற்றினார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 21, 2018

  • 2016-ல் தில்லியில் நடைபெற்ற 6-வது பிரிக்ஸ் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்திலும் ஐ.நா. பொதுச் சபையில் காச நோயை முடிவுக்கு கொண்டு வருவது பற்றிய முதலாவது உயர்நிலைக் கூட்டத்திலும் ஒப்புக் கொண்டபடி காசநோய் ஒத்துழைப்புத் திட்டத்திற்கு இந்தியா முழு ஆதரவு வழங்கும் என்று மத்திய சுகாதாரம் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.
  • பாரம்பரிய மற்றும் மாற்று மருத்துவ முறைகளான ஆயுர்வேதா, சீன பாரம்பரிய மருத்துவம் போன்றவற்றை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.

புதிய 100 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 21, 2018

  • பணமதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளில் அடுத்தடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. முதலில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும், பிறகு 200 ரூபாய், 500 ரூபாய், 50 ரூபாய், 10 ரூபாய் நோட்டுகளையும் வெளியிட்டது.
  • 100 ரூபாய் நோட்டின் முன்பக்கத்தில் மகாத்மா காந்தி படம் இடம்பெற்று இருக்கும். பின்பக்கத்தில், குஜராத் மாநிலத்தின் சரஸ்வதி ஆற்றங்கரையில் உள்ள ‘ராணி கி வாவ்’ என்ற கிணற்றின் படம் அமைந்துள்ளது

பிரதமர் நரேந்திர மோடி ருவாண்டா, உகண்டா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு வருகை தருகிறார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 21, 2018

  • ஜூலை 23 முதல் 27 வரை, பிரதமர் நரேந்திர மோடி ருவாண்டா, உகண்டா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு வருகை தருவார். அவர் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள BRICS உச்சிமாநாட்டின் 10 வது பதிப்பில் கலந்து கொள்வார்.
  • இந்த விஜயத்தின் போது பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • BRICS உச்சி மாநாட்டில், உலக சமாதானத்திற்கும் பாதுகாப்புக்கும் இடையிலான பூகோள பிரச்சினைகள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேள்விகள்

Q.1) 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் எங்கு நடைபெற உள்ளது ?

a) காபூல்

b) திறனா

c) அழகியேர்ஸ்

d) ஜகார்தா

e) ஏரேவன்

Click Here to View Answer
d) ஜகார்தா

Q.2) மகளிர் உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடர் எங்கு தொடங்குகிறது?

a) பஹ்ரைன்

b) லண்டன்

c) பங்களாதேஷ்

d) ஈராக்

e) மாலடிவ்ஸ்

Click Here to View Answer
b) லண்டன்

Q.3) 100 ரூபாய் நோட்டின் பின்பக்கத்தில் ______ மாநிலத்தின் சரஸ்வதி ஆற்றங்கரையில் உள்ள ‘ராணி கி வாவ்’ என்ற கிணற்றின் படம் அமைந்துள்ளது.

a) கேரளா

b) மகாராஷ்டிரா

c) ராஜஸ்தான்

d) டெல்லி

e) குஜராத்

Click Here to View Answer
e) குஜராத்

Q.4) பிரதமர் நரேந்திர மோடி ருவாண்டா, உகண்டா மற்றும் தென்னாப்பிரிக்காவின் பயணத்தின் போது ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள BRICS உச்சிமாநாட்டின்____ வது பதிப்பில் கலந்து கொள்கிறார்.

a) 8

b) 10

c) 11

d) 12

e) 9

Click Here to View Answer
b) 10

Q.5) புராதன மருத்துவ விஞ்ஞானத்திற்கு விஞ்ஞான சரிபார்ப்பு” (“scientific validation”)மற்றும் தொழில்நுட்பத்துடன் அதை ஒருங்கிணைப்பதையும் இலக்காக கொண்டு All India Institute of Ayurveda (AIIA) மற்றும் ______ ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது .

a) IIT கரக்பூர்

b) IIT ஹைதெராபாத்

c) IIT பாம்பே

d) IIT கான்பூர்

e) IIT டெல்லி

Click Here to View Answer
e) IIT டெல்லி

Other Important Links

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 20, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 19, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 18, 2018