TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 3, 2018

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம்(NUCLEAR DEAL) வியன்னாவில் ஈரான், வல்லரசு நாடுகள் கூட்டம்:

  • அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.
  • தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.
  • இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகினாலும் நாங்கள் தொடர்ந்து கடைபிடிப்போம் என இதில் கையொப்பமிட்டுள்ள இதர வல்லரசு நாடுகள் தெரிவித்துள்ளன.
  • பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி முஹம்மது ஜாவத் ஸரிப் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது

பிலிப்பைன்சின் தெற்கு மணிலாவின் மேயர் ஆன்டினோ ஹாலாலி மரணமடைந்தார்:

  • பிலிப்பைன்சில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மேயரை மர்ம நபர் சுட்டுக்கொன்றனர் .
  • பிலிப்பைன்சின் தெற்கு மணிலாவின் டினாவுவான் நகர மேயர் ஆன்டினோ ஹாலாலி போதை மருந்து கடத்தல் கும்பலை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையில் தீவிரம் காட்டிவந்தார்.

முத்தரப்பு தொடர் பைனலில் இந்தியா சாம்பியன்:

  • இங்கிலாந்தில் 50 ஓவர் முத்தரப்பு தொடர் நடந்தது .இதன் பைனலில் இந்தியா ‘ , இங்கிலாந்து அணிகள் மோதின.
  • முத்தரப்பு தொடர் பைனலில் இளம் இந்திய அணி ,5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் கோப்பை வென்றது .

ஐடிஎப் டென்னிஸ்(ITFtennis) போட்டியில் தமிழக வீரர்கள் சாம்பியன்:

  • பிரசிடென்சி கிளப் சார்பில் ஐ.டி.எப். சர்வதேச சீனியர் டென்னிஸ் போட்டி (ITF International Senior Tennis Competition)சென்னையில் உள்ள அந்த கிளப் வளாகத்தில் நடந்தது.
  • 35 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் வினோத் ஸ்ரீதர் 6-4, 7-5 என்ற கணக்கில் சேது கண்ணனையும் (தமிழ்நாடு), ராஜேஷ் கணபதி 6-3, 6-1 என்ற கணக்கில் பினுமணியையும் (கேரளா) தோற்கடித்தனர்.
  • சி.பி.சி.எல். நிறுவன செயல்பாடு இயக்குனர் அரவிந்தன்கோபால் பரிசுகளை வழங்கினார். போட்டி அமைப்பு குழு தலைவர் சிவராம் செல்வகுமார் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

விம்பிள்டன் முதல் சுற்று பெடரர், சிலிச் முன்னேற்றம்:

  • முன்னணி வீராங்கனைகள் கரோலினா பிளிஸ்கோவா (செக்.), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), கேமிலா ஜார்ஜி (இத்தாலி), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நேற்று களமிறங்கிய நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் (சுவிஸ்) 6-1, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் துசான் லஜோவிச்சை (குரோஷியா) எளிதில் வீழ்த்தினார்.
  • குரோஷிய வீரர் மரின் சிலிச் தனது முதல் சுற்றில் 6-1, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் யோஷிஹிடோ நிஷியோகாவை (ஜப்பான்) வென்றார். அமெரிக்காவின் சாம் குவெரி, பிலிப் கோல்ஸ்கிரைபர் (ஜெர்மனி), கில்லஸ் முல்லர் (லக்சம்பர்க்) ஆகியோரும் 2வது சுற்றுக்கு தகுது பெற்றுள்ளனர்.

Other Important Links

TNPSC CURRENT AFFAIRS – TAMIL – JULY 2, 2018