TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 5, 2018

விண்ணிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் வெற்றிகரமாக சோதனை செய்தது இஸ்ரோ:

  • ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் பாட் அபாட் டெஸ்ட் என்ற சோதனை இன்று தொடங்கியது. விண்கலமானது 2.7 கிமீ தொலைவை அடையும்போது வங்காள விரிகுடா கடலில் விழும் வண்ணம் திருப்பிவிடப்பட்டது.
  • விண்வெளியில் இருந்து மனிதர்களை பூமிக்கு கொண்டு வர உதவும் கேப்ஸ்யூல் வசதியை இந்தியாவின் இஸ்ரோ சிறப்பாக செய்து முடித்துள்ளது.

ஹூண்டாய் குளோவிஸ் என்ஜிஓ ஆஷாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஜூலை 6 அன்று கையெழுத்திடும்:

  • அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவள்ளூர் மாவட்டத்தில் 60 அரசு பள்ளிகளுக்கு உதவுவதற்காக ஹூண்டாய் குளோவிஸ்(Hyundai Glovis) என்ஜிஓ ஆஷாவுடன்(NGO Asha) புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஜூலை 6 அன்று கையெழுத்திடுகிறது.
  • இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக குளோவிஸ் ரூ .4 கோடி வழங்குகிறது.

இந்தியாவின் விளையாட்டு ஆணையம்(SAI)விளையாட்டு இந்தியாபெயர் மாற்றம் செய்யப்பட்டது:


இந்தியாவின் விளையாட்டு ஆணையம்” (Sports Authority of India), “விளையாட்டு இந்தியா(sports india) என பெயர் மாற்றப்பட்டது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உறுதிப்படுத்தினார்.


உலகின் முதல் டிஜிட்டல் கலை அருங்காட்சியகம்(art museum) ஜப்பானில் திறக்கப்பட்டது:

  • ஜப்பானின் டோக்கியோவில் உள்ள MORI கட்டிடம் டிஜிட்டல் கலை அருங்காட்சியகத்தில்(Building Digital Art Museum) உலகின் முதல் டிஜிட்டல் கலை அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
  • இந்த இயக்கம் சென்சார்கள் மூலம் தூண்டப்பட்ட 50 கடலிடோஸ்கோபிக்(kaleidoscope) நிறுவல்கள் கொண்டுள்ளது.

ஏர்இந்தியா இணையதளத்தில் இருந்து ‘தைவானை’ நீக்கியது:

  • சீனாவின் நெருக்கடிக்கு பணிந்த ஏர்இந்தியா தன்னுடைய இணையதளத்தில் இருந்து ‘தைவானை’ நீக்கியது.
  • விமான நிறுவனங்கள் தங்களுடைய இணையதளங்களில் தைவான தனி தேசமாக குறிப்பிடக் கூடாது என்ற சீனாவின் நெருக்கடிக்கு பணிந்த விமான நிறுவனங்கள் பட்டியலில் இப்போது இந்தியாவின் ஏர்இந்தியா விமான நிறுவனமும் இணைந்துள்ளது.
  • சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஜப்பான் ஏர்லைன்ஸ், ஏர் கனடா மற்றும் பிற விமான நிறுவனங்கள் தங்களுடைய இணைதளங்களில் தைவான் என குறிப்பிடுவதை தவிர்த்துள்ளது.

ஆசிய விளையாட்டு(Asian Games) போட்டி இந்திய அணியில் 524 வீரர்–வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்:

  • 18–வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18–ந் தேதி முதல் செப்டம்பர் 2–ந் தேதி வரை நடக்கிறது.
  • இந்த போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பட்டியலை இந்திய ஒலிம்பிக் சங்கம்(Indian olympic Association) , மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு(Central Ministry of Sports) கடந்த ஜூன் மாதம் சமர்பித்தது.
  • ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் 524 வீரர்–வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

Other Important Links

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 4, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 3, 2018