TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 27, 2018

Dear TNPSC aspirants,

Since our group 2 exam is nearer its time for us to learn the current events in a crispy and detailed manner to come over all the upcoming Examinations.Here is the TNPSC Current Affairs in tamil which will be updated daily to stay updated with the current events daily.


உலக சுற்றுலா தினம் இன்று கொண்டாட்டம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 27, 2018

  • உலக சுற்றுலா தினம் இன்று ( செப்டம்பர் 27) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • இந்த ஆண்டு உலக சுற்றுலா தினத்தின் (WTD) கருப்பொருள் சுற்றுலா மற்றும் டிஜிட்டல் மாற்றம்“.

பிரதமர் மோடிக்கு ஐ.நா.வின் உயரிய சுற்றுச்சூழல் விருது :

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 27, 2018

 

  • பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரோன் ஆகியோர் இந்த ஆண்டின் ஐநா சுற்றுச்சூழல் சாம்பியன் ஆப் தி எர்த் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க முயற்சி எடுத்தல், சூரிய ஒளிமின்சாரத்தை பயன்படுத்த ஊக்கப்படுத்துதல், ஆகியவற்றுக்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஐக்கிய நாடுகள் சபை மிக உயரிய விருதான சுற்றுச்சூழல் விருது(சாம்பியன்ஸ் ஆப் எர்த்) வழங்கிக் கவுரவித்துள்ளது.

இந்தியா ராணுவத்துடன் ஐசிஐசிஐ வங்கி ஒப்பந்தம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 27, 2018

  • தனியார் வங்கிகளில் முதன்மை யானதாக திகழும் ஐசிஐசிஐ வங்கி இந்திய ராணுவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்ஓயு) செய்துள்ளது.
  • ராணுவத்தில் பணி புரியும் அனை வருக்கும், ஓய்வூதியதாரர்களுக் கும் வங்கிச் சேவையை ஐசிஐசிஐ வங்கி அளிக்கும். ஐசிஐசிஐ வங்கியில் ராணுவ சம்பள கணக்கு என தனி கணக்கு செயல்படுத்தப்படும்.
  • இவர்களுக்கு ரூ. 1 கோடி வரை காப்பீடு வசதி (விமான விபத்துக்கு), ரூ. 30லட்சம் வரை விபத்து காப்பீடு வசதி அளிக்கப் படும். இது ராணுவத்தினர் அனைவருக்கும் பொருந்தும்.

அஸ்ட்ராஏவுகணை சோதனை வெற்றி:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 27, 2018

  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வானில் பறந்துசென்று வானில் உள்ள மற்றொரு இலக்கைத் தாக்கும்அஸ்த்ரா ஏவுகணை” எஸ்.யு.30 ரக போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்டு DRDO வினால் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
  • ஒடிசாவின் பந்திப்பூர் அருகே நடத்தப்பட்ட அஸ்ட்ராஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

உலகிலேயே சக்திவாய்ந்த ரோபோவை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 27, 2018

  • உலகிலேயே சக்திவாய்ந்த ரோபோவை ஹாங்காங் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். புழுபோன்ற அமைப்புடன் செய்யப்பட்டுள்ள இது மில்லிரோபோ என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • ஒரு மில்லிமீட்டர் நீலமே கொண்ட இந்த ரோபோ மனித உடலுக்குள் செலுத்தப்பட்டு தேவைப்படும் இடத்தை ஆராய்ச்சி செய்யவும், முடிந்தால் அறுவை சிகிச்சை செய்யவும் பயன்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  • இதுதவிர அதிக அழுத்தத்தை இந்த ரோபோ தாங்குவதால், உலகில் சக்திவாய்ந்த ரோபோ என்ற சாதனையும் படைத்துள்ளது.

நேஷனல் டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் பாலிசி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 27, 2018

  • நேஷனல் டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் பாலிசி (NDCP)- 2018′ என பெயரிடப்பட்டுள்ள இந்திய அரசின் புதிய தொலைத்தொடர்புக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது, இதன் படி, 2022 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு குடிமகனுக்கும் 50 Mbps வேகத்தில் பிராட்பேண்ட் சேவை வழங்கப்பட உள்ளது.

TIMES உயர் கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசை 2019:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 27, 2018

TIMES உயர் கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசை 2019

  • முதல் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்,பிரிட்டன்
  • இரண்டாவது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்,பிரிட்டன்
  • மூன்றாம் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்கா

தேசிய ஓபன் தடகளம்: தமிழக வீராங்கனை கனிமொழி தங்கப்பதக்கம் வென்றார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 27, 2018

  • 58–வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.
  • இதில் 2–வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை சி.கனிமொழி (13.71 வினாடி) தங்கப்பதக்கத்தை வென்றார்.
  • சிறப்பு அழைப்பு மூலம் கலந்து கொண்ட ஜப்பான் வீராங்கனை சிமோரா (13.74 வினாடி) வெள்ளிப்பதக்கமும், தமிழக வீராங்கனை ஆர்.நித்யா (13.99 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

 TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 27, 2018


Click on the link given below to watch the TNPSC Current Affairs – September 26, 2018



Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here 



IBPS CLERK 2018 – PREFERENCE ORDER – TAMIL NADU

IBPS Clerk 2018 Notification : 7275 Vacancies


RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 26 , 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL –SEPTEMBER 25, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 24 , 2018