TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 6, 2018

பொது அறிவு நிகழ்வுகள்

சர்வதேச துப்பாக்கிச் சூடுதல் ஜூனியர் பிரிவு சாம்பியன்ஷிஃப் போட்டியில் தங்கம் வென்றார் சவுரப் சவுத்ரி:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 6, 2018

 • சர்வதேச துப்பாக்கிச் சூடுதல் ஜூனியர் பிரிவுக்கான சாம்பியன்ஷிஃப் போட்டியில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றார்.
 • சர்வதேச துப்பாக்கிச் சூடுதல் ஜூனியர் பிரிவுக்கான சாம்பியன்ஷிஃப் போட்டிகள் தென்கொரியாவின் சாங்வோன் நகரில் நடைபெற்றது. இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றார்.
 • 16 வயதான சவுரப் இப்போட்டியில் 245. 5 புள்ளிக்களை பெற்று  தனது முந்தைய சாதனையை முறியடித்திருக்கிறார்.
 • இப்போட்டியில் கொரியாவின் ஒஜின் லிம் வெள்ளிப் பதக்கமும், இந்தியாவின் அர்ஜூன் சிங் சீமா வெண்கலப் பதக்கம் வென்றனர்.

இந்திய அணி முன்னாள் வேகம் ஆர்.பி.சிங் ஓய்வு பெற்றார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 6, 2018

 • இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ருத்ர பிரதாப் சிங், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
 • உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்த ஆர்.பி.சிங் (32 வயது), இந்திய அணிக்காக 14 டெஸ்ட், 58 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

ஜப்பானை புரட்டிப் போட்டது ‘ஜெபி’ புயல்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 6, 2018

 • ஜப்பான் நாட்டில் நேற்று முன்தினம் ‘ஜெபி’ என்ற புயல் மையம் கொண்டு இருந்தது. ‘ஜெபி’ என்றால் கொரிய மொழியில் ‘விழுங்கு’ என்று பொருளாம். இந்தப் புயல் மிகக்கடுமையான புயலாக வகைப்படுத்தப்பட்டு இருந்தது.
 • இந்தப் புயல் நேற்று முன்தினம் ஜப்பானின் மேற்கு பகுதியில் கரையைக் கடந்தது. பின்னர் இந்தப் புயல் ஜப்பானின் மிகப்பெரிய தீவான ஹான்சூவை தாக்கியது .

துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ஜூனியர் அணிக்கு வெண்கலம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 6, 2018

 • ISSF துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஜூனியர் 10 மீ ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது .
 • தென் கொரியாவின் சங்வோன் நகரில் நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டியின் இப்பிரிவில் இந்தியாவின் திவ்யான்ஷ் சிங் பன்வார்ஷ்ரேயா அகர்வால் பங்கேற்றனர் .
 • இந்த அணி 3 –ஆம் இடம் பிடித்து வெண்கலம் வென்றன .இப்பிரிவில் இத்தாலி தங்கமும் ,ஈரான் வெள்ளியும் வென்றன .

FEAR: Trump in the white house – டொனால்ட் டிரம்ப்

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 6, 2018

 • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிணை பற்றிய FEAR: Trump in the white house எனும் புத்தகத்தினை பாப் வுட்வர்ட் வெளியிடவுள்ளார்.

ஜன் தன் யோஜனா’ திட்டம் காலவரையின்றி நீடிக்கும் :

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 6, 2018

 • பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா’ திட்டம், கடந்த 2014–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்டது. சாதாரண மக்களுக்கும் வங்கி கணக்கு, காப்பீடு, ஓய்வூதியம் போன்ற நிதி சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.
 • 4 ஆண்டுகளுக்கு மட்டும் இத்திட்டம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 4 ஆண்டுகள் முடிந்த நிலையில், இப்போது காலவரையின்றி நீட்டிப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
 • நேற்று டெல்லியில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இத்தகவலை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்தார்.
 • இதில், வங்கி கணக்கு தொடங்குவதை ஊக்கப்படுத்துவதற்காக, கூடுதல் சலுகைகள் வழங்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, இதுவரை ரூ.5 ஆயிரமாக இருந்த ‘ஓவர்டிராப்ட்’ வசதி, ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.

இந்தியாஅமெரிக்க இடையே COMCASA ஒப்பந்தத்தில் கையொப்பம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 6, 2018

 • இந்திய அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்களிடையேயான 2+2 பேச்சுவார்த்தை டெல்லியில் துவகியது.இந்தியா மற்றும் யு.எஸ். கம்யூனிகேஷன்ஸ் இணக்கம் மற்றும் செக்யூரிட்டி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது (Communications Compatibility and Security Agreement (COMCASA)).
 • இது அமெரிக்காவிலிருந்து முக்கியமான பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு எடுத்துச்செல்லும், மேலும் அமெரிக்கா மற்றும் இந்திய ஆயுதப்படைகளுக்கு இடையே உள்ள ஒருங்கிணைப்பு உறுதிப்படுத்துவதற்கு முக்கியமான தொடர்பு வலையமைப்பை அணுகவும் உதவுகிறது.
 • அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்போவும் அமெரிக்க பாதுகாப்பு மந்திரி ஜேம்ஸ் மாட்டிஸ் இரு நாடுகளும் இந்தியஅமெரிக்க உறவை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படுவதாக உறுதி அளித்துள்ளனர்.

TNPSC CURRENT AFFAIRS & QUIZ IN TAMIL – SEPTEMBER 6 ,2018


Click on the link given below to watch the TNPSC Current Affairs – September 5 , 2018Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here TNUSRB Police SI (Finger Print) 2018 Notification – 202 Posts

NABARD DEVELOPMENT ASSISTANT RECRUITMENT 2018 : NOTIFICATION RELEASED


RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 5 , 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL –SEPTEMBER 4, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 3 , 2018