TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 5, 2018

ராஜஸ்தான் அரசு இலவச மொபைல் போன்களை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 5, 2018

 • ராஜஸ்தானில் ஆளும் பாஜக அரசின் முதல்வர் வசுந்தரா ராஜேறுமைக் கோட்டுக்கு கீழ் (Below Poverty Line) உள்ள ஏழைப் பெண்களுக்கு இலவச செல்போன் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார்.
 • பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியாபிரச்சாரத்தை செயல்படுத்தும் முயற்சியில் ராஜஸ்தான் அரசாங்கம் இறங்கியுள்ளது. அதன்படி விரைவில் பாமாஷா யோகாவின்(Bhamashah Yojana) கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு செல்போன்கள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
 • மாநிலத்தில் உள்ள 5 ஆயிரம் கிராம பஞ்சாயத்துக்களுக்கு இலவச வைஃபை வசதி செய்து தரப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 29 அன்று, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்காக ராஜே பாமாஷா வாலெட் செல்போன் ஒன்றை ஆகஸ்ட் 29ல் அறிமுகப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் புதிய அதிபராக ஆரிப் ரஹ்மான் ஆல்வி தேர்வு :

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 5, 2018

 • பாகிஸ்தானில் அதிபர் மம்னூன் ஹுசைனின் பதவிக் காலம் முடிவுக்கு வருவதையொட்டி புதிய அதிபருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.
 • இதில் ஆளும் பிடிஐ (பாகிஸ்தான் தெஹ்ரீக்இன்சாப்) கட்சி சார்பில் போட்டியிட்ட ஆரிப் ரஹ்மான் ஆல்வி வெற்றி பெற்றார்.இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளிட உள்ளது.

மனோஜ் சின்ஹா E-Mobility மாநாட்டை தொடங்கிவைத்தார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 5, 2018

 • NITI Aayog உடன் இணைந்து Institution of Railways Electrical Engineers (IREE) நிறுவனம் மூலம் இரயில்வே அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய இரயில்வேயில் மின்இயக்கம்”(E-Mobility in Indian Railways”) பற்றிய ஒரு மாநாடு புது டெல்லியில் முடிவடைந்தது .
 • தகவல் தொடர்புத்துறை(Minister of State of Communication (I/C) and Minister of State of Railways) மற்றும் ரயில்வே அமைச்சர், மனோஜ் சின்ஹா இந்த ஒரு நாள் மாநாட்டை தொடங்கிவைத்தார்.

நேபாளத்தில் சர்வதேச மகளிர் தொழில் முனைவோர் உச்சிமாநாடு 2018 ம் ஆண்டு நடைபெற்றது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 5, 2018

 • நேபாளத்தில் 2018-ம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தொழில் முனைவோர் உச்சிமாநாடு(The International Women Entrepreneurs Summit 2018) நடைபெற்றது.
 • நேபாள துணைத் தலைவர் நந்த பஹதூர் புன் உச்சி மாநாட்டை திறந்து வைத்தார்.Equality begins with Economic Empowerment” என்பதே இதன் கருப்பொருள் ஆகும்.

உலகளாவிய தொண்டு தினம் செப்டம்பர் 5:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 5, 2018

 • செப்டம்பர் 5- உலகளாவிய தொண்டு தினம்(The International Day of Charity) உலகளாவிய ரீதியில் அனுசரிக்கப்பட்டதுடன், நாடுகளுக்கிடையேயும் மனிதர்களிடமிருந்தும் மனித துன்பங்களை ஒழித்துக்கொள்வதோடு, தொண்டு நிறுவனங்கள் மற்றும் அன்னை தெரேசா போன்ற தனிநபர்களின் முயற்சியையும் அங்கீகரிபதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
 • .நா. பொதுச் சபை(The United Nations General Assembly) டிசம்பர் 17, 2012 அன்று அதன் A / RES / 67 / 105PDF தீர்மானத்தின் மூலம் செப்டம்பர் 5ம் தேதியை சர்வதேச தொண்டு தினமாக அறிவித்தது.2013 ஆம் ஆண்டு இந்த நாள் முதன்முதலாக கொண்டாடப்பட்டது.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் இந்தியாவின் மிதர்வால்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 5, 2018

 • உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் ஓம் பிரகாஷ் மிதர்வால் தங்கப் பதக்கம் வென் றார்.
 • தென் கொரியாவின் சாங்வான் நகரில் உலகக் கோப்பை துப் பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஓம் பிரகாஷ் மிதர்வால் 564 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். 23 வயதான மிதர்வால் உலகக் கோப்பை தொடரில் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.
 • செர்பியாவின் தமிர் மைக் 562 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், தென் கொரியாவின் டாம்யுங் லீ 560 புள்ளிகளுடன் வெண்கலப் பதக் கமும் கைப்பற்றினர்.

Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 5 ,2018


TNUSRB Police SI (Finger Print) 2018 Notification – 202 Posts

NABARD DEVELOPMENT ASSISTANT RECRUITMENT 2018 : NOTIFICATION RELEASED


RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL –SEPTEMBER 4, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 3 , 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 1 , 2018