TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 24, 2018

Dear TNPSC aspirants,

Since our group 2 exam is nearer its time for us to learn the current events in a crispy and detailed manner to come over all the upcoming Examinations.Here is the TNPSC Current Affairs in tamil which will be updated daily to stay updated with the current events daily.


பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 24, 2018

  • நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கும் வகையிலான ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாஆயுஷ்மான் பாரத்’ என்ற காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்தது.
  • இதன்படி, ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் மதிப்பில் 10 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 50 கோடி மக்கள் பலனடைவார்கள்.
  • இத்திட்டத்தின் கீழ் இதய நோய்கள், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு, நீரிழிவு உள்ளிட்ட 1,354 நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை பெறலாம்.
  • இத்திட்டத்தின் தொடக்க விழா ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று நடந்தது.

சிக்கிமின் முதல் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி:

 

  • சிக்கிம் மாநிலத்துக்கு புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
  • இந்த விமான நிலைய திறப்பு விழாவில் முதல்வர் பவான் சாம்லிங், மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோர் பங்கேற்றனர்.
  • சிக்கிம் மாநிலத்துக்கு இதுவரை விமான போக்குவரத்து இல்லாத நிலையை போக்க தலைநகர் காங்டாங் நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பாக்யாங் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 24, 2018

  • ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
  • பிடிவி (PDV) என சுருக்கமாகக் குறிப்பிடப்படும் இந்த பிரித்வி டிஃபென்ஸ் வெகிக்கிள், திட்டமிட்டபடி வானில் இலக்கை தாக்கி அழித்தது.
  • இந்த சோதனை வெற்றிகரமாக திட்டமிட்டபடி அமைந்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் ரஷ்யாவுடன் ஒப்பந்தம்: இந்தியா முடிவு

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 24, 2018

  • விண்வெளிக்கு வரும் 2022ல் 3 இந்தியர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி கடந்த சுதந்திரதின விழாவில் வெளியிட்டார்.
  • இதற்காக பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகளை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்த மாத தொடக்கத்தில் கையெழுத்திட்டார்.
  • இந்நிலையில், பாதுகாப்புத் துறை, அணுசக்தி மற்றும் விண்வெளி ஒத்துழைப்பு தொடர்பான கூட்டாளிகளாக பிரான்ஸ், அமெரிக்காவுடன் ரஷ்யாவும் உள்ளது.

போலிச் செயதிகளைச் கட்டுப்படுத்தவதற்காக இந்தியாவிற்கான குறை தீர்க்கும் அதிகாரி:கோமல் லஹிரி

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 24, 2018

  • போலிச் செயதிகளைச் கட்டுப்படுத்தவதற்காக இந்தியாவிற்கான குறை தீர்க்கும் அதிகாரியாக கோமல் லகிரி என்பவரை நியமித்துள்ளது.
  • பொய்யான செய்திகள் பரவுவது உள்ளிட்ட பல தவறான செயல்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வாட்ஸ் ஆப் பயனர்களின் குறைகளை கேட்டறிவதற்காகவும் இந்தியாவில் கோமல் லஹிரி என்ற குறைகேட்பு அதிகாரியை வாட்ஸ் ஆப் நிறுவனம் நியமித்துள்ளது.
  • இதன் மூலம் பயனர்கள் மொபைல் ஆப் மூலமாக உதவியை பெறலாம். மேலும், இமெயில் மற்றும் கடிதம் மூலமாக தங்கள் புகார்களை கோமல் லஹிரிக்கு தெரிவிக்கலாம்.

இராக், ஆப்கானிஸ்தானுக்கு அடுத்து தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 3-வது நாடு இந்தியா:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 24, 2018

  • உலகளவில் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில், தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்தியா 3-வது இடத்தில் இருக் கிறது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை புள்ளிவிவரத் தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உலகளவில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டிய லில் இராக் முதலிடத்திலும், ஆப்கானிஸ்தான் 2-வது இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் இந்தியா உள்ளது.
  • தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டிய லில் கடந்த ஆண்டும் இந்தியா 3-வது இடத்தில் இருந்தது. கடந்த 2015-ம் ஆண்டு வரை 3-வது இடத்தில் பாகிஸ்தான் இருந்தது.

இந்திய அரசு சைபர் ட்ரிவியாகுழந்தைகளுக்கான மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 24, 2018

  • குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுப்பதற்காக Cyber Trivia எனும் மொபைல் செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
  • இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட– Cyber Trivia ஒரு புதிய எனும் மொபைல் செயலி மூலம், குழந்தைகள் இப்போது வேடிக்கை, கல்வி முறையில் ஆன்லைன் ஆபத்துகளுக்கு எதிராக எச்சரிக்கப்படுவார்கள்.

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 24, 2018


Click on the link given below to watch the TNPSC Current Affairs – September 21, 2018



Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here 



IBPS CLERK 2018 – PREFERENCE ORDER – TAMIL NADU

IBPS Clerk 2018 Notification : 7275 Vacancies


RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 22 , 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL –SEPTEMBER 21, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 18 , 2018