TNPSC Current Affairs – English & Tamil – July 1, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(1st July, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – July 1, 2021


SCIENCE AND TECHNOLOGY


  1. Face mask developed by MIT, Harvard detects COVID-19 Infection
  • Corona face mask developed by the Massachusetts Institute of Technology (MIT), Harvard can diagnose if the wearer is infected with COVID-19 infection.
  • This mask contains tiny, disposable sensors to detect SARS-CoV-2 viruses within 90 minutes.

 

  1. எம்ஐடி, ஹார்வர்ட் உருவாக்கிய முககவசம் கோவிட்-19 தொற்றை கண்டறியும் திறன் கொண்டுள்ளது
  • ஹார்வர்டில் உள்ள மாசூட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்ஐடி) உருவாக்கிய கரோனா முககவசம் கோவிட்-19 தொற்றுநோயைக் கண்டறியும் திறன் கொண்டது.
  • இந்த முகமூடி 90 நிமிடங்களுக்குள் SARS-CoV-2 வைரஸைக் கண்டறிய சிறிய, மாற்றத்தக்க சென்சார்களைக் கொண்டுள்ளது.

  1. Grene Robotics develops India’s first indigenous digital drone defence system ‘Indrajaal’
  • Grene Robotics of Hyderabad has designed and developed India’s first indigenous digital drone defence system called ‘Indrajaal’.
  • It has the capability to autonomously protect an area of 1000-2000 sq km against aerial threats.

 

  1. கிரேனே ரோபாட்டிக்ஸ் இந்தியாவின் முதல் உள்நாட்டு டிஜிட்டல் ட்ரோன் பாதுகாப்பு அமைப்பானஇந்திரஜால் உருவாக்கியுள்ளது
  • ஹைதராபாத்தைச் சேர்ந்த கிரேனே ரோபாட்டிக்ஸ் இந்தியாவின் முதல் உள்நாட்டு டிஜிட்டல் ட்ரோன் பாதுகாப்பு அமைப்பானஇந்திரஜால் வடிவமைத்து உருவாக்கியுள்ளது.
  • இது வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக 1000-2000 சதுர கி.மீ பரப்பபரப்பை தன்னிச்சையாக பாதுகாக்கும் திறன் கொண்டுள்ளது.

INTERNATIONAL


  1. Chinese Communist Party celebrates its 100th anniversary
  • Chinese Communist Party celebrated its 100th anniversary on 1 July 2021. The celebrations took place at Tiananmen Square in Beijing under President Xi Jinping.

Chinese Communist Party:

  • The Chinese Communist Party was founded by Mao Zedong in 1921. It fought against the Japanese occupation and took over China in 1949 and formed the People’s Republic of China (PRC).
  • Deng Xiaoping replaced Mao’s hardline Marxism with the ideology of “socialism with chinese characteristics”. China is the second-largest economy of the world.

 

  1. சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது
  • சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது நூற்றாண்டு விழாவை 1 ஜூலை 2021 அன்று கொண்டாடிகிறது. ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் கீழ் பெய்ஜிங்கில் உள்ள தியான்மென் சதுக்கத்தில் இந்த கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

சீன கம்யூனிஸ்ட் கட்சி:

  • சீனகம்யூனிஸ்ட் கட்சி 1921இல் மாவோ சேதுங் என்பவரால் நிறுவப்பட்டது. அது ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போராடி 1949இல் சீனாவைக் கைப்பற்றி சீன மக்கள் குடியரசை (PRC) உருவாக்கியது.
  • மாவோவின் கடுமையான மார்க்சிசத்திற்கு பதிலாக டெங் சியாவோபிங் “சீன பண்புகளைக் கொண்ட சோசலிசம்” என்ற சித்தாந்தத்தை கொண்டு வந்தார். சீனா இப்போது உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது.

REPORTS AND INDICES


  1. India ranks 10th in the Global Cybersecurity Index 2020
  • Global Cybersecurity Index 2020 is the fourth edition released by the International Telecommunication Union (ITU), a specialised agency of the United Nations.
  • India ranked 10th in the fourth edition of the Global Cyber ​​Security Index 2020 (GCI), a significant jump of 37 places from its previous GCI rank of 47 in 2018.
  • India also ranks fourth in the Asia-Pacific region.
  • The top rank in the GCI was achieved by the US, the UK and Saudi Arabia.
  • In the Asia Pacific region, South Korea and Singapore are on top and fourth globally.

 

  1. உலக சைபர் பாதுகாப்பு குறியீடு 2020இல் இந்தியா 10வது இடத்தில் உள்ளது
  • உலக சைபர் பாதுகாப்பு குறியீடு 2020 ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிறுவனமான சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் (ITU) வெளியிடப்பட்ட நான்காவது பதிப்பாகும்.
  • உலக சைபர் பாதுகாப்பு குறியீடு 2020 (GCI) நான்காவது பதிப்பில் இந்தியா 10வது இடத்தைப் பிடித்தது. இது 2018இன் GCI தரவரிசையான 47இல் இருந்து 37 இடங்கள் உயர்வாகும்.
  • ஆசியபசிபிக் பிராந்தியத்தில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
  • GCIஇல் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சவுதி அரேபியா முதல் மூன்று இடங்களைப் பிடித்தன.
  • ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் முதலிடத்திலும் உலகளவில் நான்காவது இடத்திலும் உள்ளன.

SPORTS


  1. Indian-origin Abhimanyu Mishra becomes the youngest Grandmaster in Chess
  • Abhimanyu Mishra, 12 year old Indian origin US player had become the youngest Grandmaster in Chess.
  • He broke the record of 19 years old Sergey Karjakin in 2002.
  1. இந்திய வம்சாவளி அபிமன்யு மிஸ்ரா செஸ் போட்டியில் இளைய கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார்
  • 12 வயதான அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி அபிமன்யு மிஸ்ரா செஸ் போட்டியில் இளைய கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார்.
  • அவர் 2002இல் 19 வயதான செர்ஜி கர்ஜாகினின் சாதனையை முறியடித்தார்.

IMPORTANT DAYS


  1. National Doctors’ Day – 1 July
  • 1 July is celebrated as National Doctors’ Day annually by Indian Medical Association to recognise and celebrate the invaluable contribution of physicians towards serving mankind.
  • This day marks the birth and death anniversary of the legendary physician and the second Chief Minister of West Bengal, Bidhan Chandra Roy. He was born on 1 July 1882 and died 1 July 1962. He was honoured with Bharat Ratna.

 

  1. தேசிய மருத்துவர்கள் தினம் – 1 ஜூலை
  • மனித குலத்திற்கு சேவை செய்வதில் மருத்துவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை அங்கீகரித்து கொண்டாடுவதற்காக இந்திய மருத்துவ சங்கத்தால் ஆண்டுதோறும் 1 ஜூலை தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
  • இந்த நாள் புகழ்பெற்ற மருத்துவரும் மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்சருமான டாக்டர் பிதான் சந்திர ராயின் பிறந்தநாள் மற்றும் நினைவு தினத்தைக் குறிக்கிறது. 1 ஜூலை 1882இல் பிறந்த அவர், 1 ஜூலை 1962இல் இறந்தார். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

  1. National Chartered Accountants Day – 1 July
  • 1 July is observed as National Chartered Accountants Day annually to celebrate the formation of the Institute of Chartered Accountants of India (ICAI) on 1 July 1949.
  • ICAI is the sole licensing and regulatory body for the financial audit and accounting profession in India.

 

  1. தேசிய பட்டயக் கணக்காளர்கள் தினம் – 1 ஜூலை
  • 1 ஜூலை 1949 அன்று இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) அமைக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் 1 ஜூலை தேசிய பட்டயக் கணக்காளர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • ICAI என்பது இந்தியாவில் நிதி தணிக்கை மற்றும் கணக்கியலுக்கான ஒரே உரிமம் வழங்கும் மற்றும் ஒழுங்குமுறை அமைப்பாகும்.

  1. Good and Services Tax Day – 1 July
  • Good and Services Tax (GST) Day is observed on 1 July to mark the implementation of GST regime – “One Nation-One Market-One Tax”.
  • GST was announced on 1 July 2017 by the Prime Minister Narendra Modi.

 

  1. சரக்கு மற்றும் சேவை வரி நாள் – 1 ஜூலை
  • “ஒரே நாடு-ஒரே சந்தை- ஒரே வரி” என்ற GST வரி விதிப்பு முறையை அமல்படுத்துவதை குறிக்கும் வகையில் 1 ஜூலை அன்று சரக்கு மற்றும் சேவை வரி (GST) நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • GST 1 ஜூலை 2017 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது.

DAY IN HISTORY


  1. SBI celebrates its 66th Foundation Day
  • State Bank of India (SBI), which is the oldest commercial bank in India is celebrating its 66th year on 1 July 2021.
  • The Bank of Madras, the Bank of Calcutta and the Bank of Bombay, were merged to form the Imperial Bank of India. It later became the State Bank of India on 1 July 1955.
  • SBI Headquarters: Mumbai

 

  1. எஸ்பிஐ தனது 66வது நிறுவன தினத்தை கொண்டாடுகிறது
  • இந்தியாவின் பழமையான வர்த்தக வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தனது 66வது நிறுவன தினத்தை 1 ஜூலை 2021 அன்று கொண்டாடுகிறது.
  • மெட்ராஸ் வங்கி, கல்கத்தா வங்கி மற்றும் பம்பாய் வங்கி ஆகியவை இணைக்கப்பட்டு இந்திய இம்பீரியல் வங்கியை உருவாக்கியது. பின்னர் 1 ஜூலை 1955 அன்று அதுவே ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆனது.
  • எஸ்பிஐ தலைமையகம்: மும்பை

  1. Venkaiah Naidu birth anniversary – 1 July
  • Venkaiah Naidu was born on 1 July 1949 in Chavatapalem of Andhra Pradesh.
  • He is the 13th Vice-President of India and Chairman of Rajya Sabha.
  • Vice-President is the second highest constitutional position in India.
  1. வெங்கையா நாயுடு பிறந்த நாள் – 1 ஜூலை
  • வெங்கையா நாயுடு 1 ஜூலை 1949 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் சாவதாபலேமில் பிறந்தார்.
  • இந்தியாவின் 13வது துணைத் குடியரசுத் தலைவராகவும் மாநிலங்களவைத் தலைவராகவும் உள்ளார்.
  • துணை குடியரசுத் தலைவர் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியாகும்.

KNOW AN INSTITUTION


  1. National Investigation Agency (NIA)
  • NIA is a Central Counter Terrorism Law Enforcement Agency established under the National Investigation Agency Act 2008.
  • NIA works under the Union Ministry of Home Affairs.
  • Officers of the NIA are drawn from the Indian Police Service and the Indian Revenue Service.
  • It is empowered to deal with terrorism related crimes across states without special permission from the states. It investigates cases against atomic and nuclear facilities and counterfeit Indian currency. It is also empowered to investigate offences under the Narcotic Drugs and Psychotropic Substances (NDPS) Act.
  1. தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)
  • என்.. என்பது தேசிய புலனாய்வு முகமை சட்டம், 2008இன் கீழ் நிறுவப்பட்ட மத்திய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட அமலாக்க முகமையாகும்.
  • என்.ஐ.ஏ மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
  • என்.ஐ.ஏ.வின் அதிகாரிகள் இந்திய காவல்துறை மற்றும் இந்திய வருவாய் துறையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
  • மாநிலங்கள் முழுவதும் பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களை மாநிலங்களின் சிறப்பு அனுமதியின்றி கையாளுவதற்கு இதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது அணு மற்றும் அணுசக்தி நிலையங்கள் மற்றும் கள்ளநோட்டுகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கிறது. போதை மருந்துகள் மற்றும் உளவியல் பொருட்கள் (NDPS) சட்டத்தின் கீழ் குற்றங்களை விசாரிக்கவும் இதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – July 1, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
1st July, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – July Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – July 2021