Thirukkural (திருக்குறள்) PDF & Notes for TNPSC Group 1, 2/2A, 4 exams – Download Now

Dear Aspirants,

Thirukkural ( திருக்குறள் ) is one of the important topics in the upcoming TNPSC Group 1,2,2A,4 & VAO Exams.

Aspirants who are preparing for the TNPSC Group 1,2,2A,4 & VAO exams should be learning all the thirukkurals from the TN School Samacheer Kalvi Books.

All the TNPSC Exams will have questions from the TN School Samacheer Kalvi books. Students who are preparing for the TNPSC Exams are requested to learn all the 300+ Thirukurrals from the 6th Standard TN Samacheer Kalvi School Books, 7th Standard TN Samacheer Kalvi School Books, 8th Standard TN Samacheer Kalvi Books, 9th Standard TN Samacheer Kalvi School Books, 10th TN Samacheer Kalvi School Books, 11th TN Samacheer Kalvi School Books and 12th TN Samacheer Kalvi School Books.

TNPSC Aspirants should prepare well by memorizing all the thirukkurals mentioned in the TN Samacheer Kalvi school books.


Download THIIRUKKURAL PDF & NOTES – Veranda Race 


Thirukkural (திருக்குறள்) PDF & Notes for TNPSC Group 1, 2/2A, 4 exams


கடவுள் வாழ்த்து

  1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

விளக்கம்: அகரமே எழுத்துகளுக்குத் தொடக்கம். ஆதி பகவனே உலகுக்குத் தொடக்கம்.

பொருள்: அகர -‘அ’ என்னும் எழுத்தில் தொடங்கும் அகர வரிசை; முதல-முதலாகயுடையன; எழுத்து-எழுதப்படுவது; எல்லாம்-அனைத்தும்; ஆதி-முதல், மூலம், பழமை, முற்பட்டுள்ள; பகவன்-கடவுள்; முதற்றே-முதலேயுடையது; உலகு-உலகம்.

Kural: A, as its first of letters, every speech maintains;

The “Primal Deity” is first through all the world’s domains.

Explanation:  As the letter A is the first of all letters, so the eternal God is first in the world.

வான் சிறப்பு

  1. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி.

விளக்கம்: மழை உரியகாலத்தில் பொய்யாது போனால் உலகத்து உயிர்களை எல்லாம் பசி துன்புறுத்தும்.

பொருள்: விண்-மழை; இன்று-இல்லாமல்; பொய்ப்பின்-பொய்யானால். விரிநீர்-பரம்பிய நீர் (கடல்) வியன்-அகன்ற; உலகத்துள்-உலகத்தில்நின்று-நிலைபெற்று; உடற்றும்-வருத்தும்; பசி-பசித்தல்

Kural: If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world. (Sea-girt: surrounded by sea)

Explanation: Earth also contains a huge amount of water on its surface, but that water is not consumable. Rains from the sky are a necessary part of earth-life.

  1. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.

விளக்கம்: உரிய காலத்தில் பொய்யாது கெடுப்பதும் மழைதான். உரிய காலத்தில் பெய்து காப்பதும் மழை தான்.

பொருள்: கெடுப்பதூஉம் – இடர் உண்டாக்குவதும்; கெட்டார்க்கு – துயருற்றவர்க்கு; சார்வாய் – துணையாய், ஆறுதலாக; மற்று-பின், ஆனால்; ஆங்கே -அதுபோல; எடுப்பதூஉம்- மேலோங்குவிப்பதும், தூக்கி விடுவதும், உண்டாகுவதும், வாழ்விப்பதும்; எல்லாம்-அனைத்தும்; மழை-மழை.

Kural: Rain by its absence ruins men, and by its existence restores them to fortune.

Explanation: Rains are destructive also; yet they are the only means of rising up for those who suffered by heavy rains.

நீத்தார் பெருமை

  1. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்.

விளக்கம்: முடியாத செயலையும் முடித்துக் காட்டுபவர் பெரியோர்,முடியாது என்பவர் சிறியோர்.

பொருள்: செயற்கு – செய்தற்கு; அரிய – அருமையானவைகளை, எளிதில் செய்யமுடியாதவைகளை; செய்வார்-செய்பவர்கள்; பெரியர்-பெரியவர், பெருமையுடையவர்; செய்கலாதார்-செய்ய முடியாதவர்; சிறியர்-சிறியவர்.

Kural: The great will do those things which are difficult to be done, but the mean (small people) cannot do them.

Explanation: Controlling the five senses of knowledge accompanied by the mind is an extraordinary feat. Those who can do it are indeed extraordinary beings; others are just animals in human form.

மக்கட்பேறு

  1. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.

விளக்கம்: தம்மைவிடத் தம் பிள்ளைகள் அறிவுடையோர் என்றால் மக்களுக்கு அதுதான் மகிழ்ச்சி.

பொருள்: தம்மின்-தம்மைக் காட்டிலும்; தம்-தமது; மக்கள்-பிள்ளைகள், புதல்வர்; அறிவுடைமை-அறிவுடையராய் இருத்தல், அறிவு உடையனாந் தன்மை; மா-பெரிய; நிலத்து-உலகின்கண்; மன்-நிலைபேறு; உயிர்க்கு-உயிருக்கு; எல்லாம்-அனைத்தும்; இனிது-இனியதாகும், நன்றானது.

Kural: That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves.

Explanation: If the intelligence of the children excels one’s own, that is the greatest joy for the humans of this world.

  1. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.

விளக்கம்: தன் பிள்ளையின் புகழைக் கேட்ட தாய் பெற்றெடுத்த போது அடைந்த மகிழ்ச்சியை விடப் பெருமகிழ்ச்சி அடைவாள்.

பொருள்: ஈன்ற பொழுதின்-பெற்ற பொழுதினும்; பெரிது-மிகவும்; உவக்கும்-மகிழும்; தன்-தனது; மகனை-மகனை; சான்றோன்-நற்குண நற்செய்கை நிறைந்தவன்; என-என்று சொல்ல; கேட்ட-செவியுற்ற அதாவது பிறர் சொல்லத் தன் செவிகளால் கேள்வியுற்ற; தாய்-தாய்

Kural: The mother who hears her son called a wise man will rejoice more than she did at his birth.

Explanation: If a mother hears her son getting praised as noble and learned, she will feel more joy than what she felt at his birth.

அன்புடைமை

  1. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.

விளக்கம்: அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளும் எனக்கே என்பார்கள். அன்பு உடையவர்கள் தம் உடம்பும் பிறர்க்கே என்பார்கள்.

பொருள்: என்பு – எலும்பு .இங்கு உடல், பொருள், ஆவியை குறிக்கும்.

Kural: To selves belong the loveless ones;

To others the loving even to bones

Explanation: Those who are destitute (Destitute: Lacking) of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others

  1. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.

விளக்கம்: அன்பு இருப்பதுதான் உயிருள்ள உடல். அன்பு இல்லாதது வெறும் எலும்பும் தோலும் தான்.

பொருள்: அன்பின் வழியது-அன்பின் வழியது அல்லது அன்பை அடிப்படையாகக் கொண்டது; உயிர்நிலை-உயிர் நிற்பது; அஃதிலார்க்கு-அது இல்லாதவருக்கு (அதாவது அன்பு இல்லாதவர்களுக்கு); என்பு-எலும்பு; தோல்-தோல்; போர்த்த-சுற்றி மூடிய; உடம்பு – உடம்பு.

Kural: The seat of life is love alone; 80

Or beings are but skin and bone

Explanation: That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin. (Void: empty)

இனியவை கூறல்

  1. பணிவுடையான் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற.

விளக்கம்: அடக்கமான பண்பும், இனிமையாக பேசும் இயல்பும் தவிர ,ஒருவருக்கு சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது

பொருள்: பணிவு-தாழ்ச்சி; உடையன்-உடையவன்; இன்-இனிய; சொலன்-சொல்லையுடையவன்; ஆதல்-ஆகுதல் .ஒருவற்கு-ஒரு மகனுக்கு; அணியல்ல – அணிகலம் ஆகமாட்டா; மற்று-மற்றுள்ள பிற-பிற.

Kural: To be humble and sweet words speak

No other jewel do wise men seek

Explanation: Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments).

  1. இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

விளக்கம்: இனிய சொல் இருக்கும்போது இன்னாச்சொல் பேசுவது கனி இருக்கும்போது காயை உண்பது போன்றது.

பொருள்: இனிய-இனிமையானவை; உளஆக–இருப்பனவாக; இன்னாத-இனியவை அல்லாத, தீயவை; கூறல்-சொல்லுதல்; கனி-பழம்; இருப்ப-உளவாயிருக்க; காய்-கனியாத காய்; கவர்ந்து-கொண்ட; அற்று-அத்தன்மைத்து. கவர்தல் -நுகர்தல் ; அற்று -அதுபோன்றது.

Kural: To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when it is ripe.

Explanation: Or who knows? He might be an idiot for sure who chooses the bitter unripe fruits, namely rude words and suffers through the unpleasantness. He may throw off the ripe fruits namely, sweet words and bring ruin to his life here and hereafter.

விருந்தோம்பல்

  1. விருந்து புறத்ததாத் தாணுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று.

விளக்கம்: அமிழ்தமே ஆனாலும் விருந்தினர் இருக்கும்போது தான்மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று.

பொருள்: விருந்து – உணவளித்து உபசரிப்பது

புறத்து – தனியாக ,விலகி

தானுண்டல் – தான் உண்டல்

சாவா மருந்து – சாவில் இருந்து காப்பாற்ற கூடிய மருந்து, பாற்றன்று -உரியது அன்று

Kural: Who tends his guests day in and out

His life in want never wears out.

Explanation: It is not fit that one should wish his guests to be outside (his house) even though he was eating the food of immortality.

(immortality: to live forever/eternal life)

  1. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து

விளக்கம்: மோந்து பார்த்தால் அனிச்ச மலர் வாடிவிடும். நம் முகம் மாறினாலே விருந்தினர் உள்ளம் வாடி விடும்.

பொருள்: மோப்ப-முகர்ந்தால், மோந்தால், முகப்பதனால்; குழையும்-வாடி விடும்; அனிச்சம்-ஒருவகை நுட்பமான மலர்; முகம்-முகம்; திரிந்து-வேறுபட்டு; நோக்க-பார்க்கும்போது; குழையும்-சுருங்கும்; விருந்து-விருந்தினர்.

Kural: Anicham smelt withers: like that

A wry-faced look withers the guest.

Explanation: As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away.

  1. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்

விளக்கம்: அடுத்தவர் பொருளைக் களவாடலாம் என உள்ளத்தால் நினைப்பது கூடத் தீமையானது.

பொருள்: உள்ளத்தால்-நெஞ்சத்தால்; உள்ளலும்-நினைத்தலும்; தீதே-கொடிதே; பிறன்-மற்றவன்; பொருளை-உடைமையை; கள்ளத்தால்-திருட்டால்; கள்வேம்-வஞ்சித்துக் கொள்வோம்; எனல்-என்று நினையற்க.

Kural: Even the thought (of sin) is sin; think not then of craftily stealing the property of another. (craftily- Cunning)

Explanation: : A man of renunciation should never even bring the thought of deceit in the mind

  1. களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

ஆவது போலக் கெடும்.

விளக்கம்: களவு மூலம் சேர்க்கப்படும் செல்வம் வளர்வது போலத் தோன்றினாலும் முடிவில் அழிந்துவிடும்.

பொருள்: களவினால்-திருட்டினால்; ஆகிய-ஆன; ஆக்கம்-செல்வம்; அளவு-எல்லை; இறந்து-கடந்து; ஆவது-ஆதல்; போல-ஒத்திருப்ப; கெடும்-அழியும்.

Kural: The gain by fraud may overflow

But swift to ruin it shall go

Explanation: The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase.

  1. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை

நில்லாது நீங்கி விடும்

விளக்கம்: ஊக்கமே நிலையான செல்வம். மற்றவை எல்லாம் நிலைத்து நில்லாமல் அழிந்து விடும்.

பொருள்: உள்ளம்-(ஊக்கமுள்ள) உள்ளம்; உடைமை-பெற்றிருப்பது; உடைமை-சொத்து; பொருளுடைமை-செல்வப் பொருள்; நில்லாது-நிலைக்காமல்; நீங்கிவிடும்-நீங்குவது திண்ணம்.

Kural: The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not.

Explanation: The enthusiasm in the mind alone is the true wealth. The material wealth possessed by a person is unstable and will be gone in no time. (enthusiasm- intense and eager enjoyment)

ஊக்கமுடைமை

  1. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா

ஊக்கம் உடையான் உழை.

விளக்கம்: தளராத ஊக்கம் உடையவனிடம் ஆக்கமானது தானே வழிகேட்டுக்கொண்டு செல்லும்.

பொருள்: ஆக்கம்-செல்வம்; அதர்-வழி; வினாய்-வினவிக்கொண்டு; செல்லும்-போகும்; அசைவு-சோம்புதல்; இலா-இல்லாத; ஊக்கம்-மனவெழுச்சி; உடையான்-உடையவன்; உழை-இடத்தில்.

Kural: Wealth will find its own way to the man of unfailing energy.

Explanation: If a man has unwavering enthusiasm, then prosperity will seek and join him by itself (unwavering: steady, enthusiasm: interest)

  1. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்து அனையது உயர்வு

விளக்கம்: தண்ணீரின் உயரத்துக்கு ஏற்ப நீர்ப்பூக்கள் வளரும். ஊக்கத்தின் அளவுக்கு ஏற்ப மனிதர்கள் உயர்வார்கள்.

பொருள்: வெள்ளத்து-நீர்ப்பெருக்கத்து; அனைய-அளவின; மலர்-பூ; நீட்டம் -நீளங்கள்; மாந்தர்-மக்கள்; தம்-தமது; உள்ளத்து-ஊக்கத்தினது; அனையது-அளவினது; உயர்வு-உயர்ச்சி.

Kural: The stalks of water-flowers are proportionate to the depth of water; so is men’s greatness proportionate to their minds.

(stalks – the slender attachment or support of a leaf, flower, or fruit)

Explanation: With the rising flood, the rising lotus flower its stem unwinds;

The dignity of men is measured by their minds.

  1. உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

விளக்கம்: எண்ணுவதை உயர்வாகவே எண்ணுக. எண்ணியதை அடையா விட்டாலும் எண்ணமே மன நிறைவைத் தரும்.

பொருள்: உள்ளுவது-நினைப்பது; எல்லாம்-அனைத்தும்; உயர்வு-உயர்ச்சி; உள்ளல்-கருதுக; மற்று-(அசைநிலை) அது-அது; தள்ளினும்-கூடாவிடுனும்; தள்ளாமை-தவறாமை; நீர்த்து-தன்மையுடையது.

Kural: In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him.

(Or)

(Ulluvathu→ to think; uyarvullal → higher thoughts )

Keep your thoughts always higher and try to achieve them. Even though they couldn’t be achieved do not lose hope.

Let all thoughts be focused on the highest goal to be achieved. Even if it is not realized yet, the effort to realize it should not cease.

பயனில சொல்லாமை

  1. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்.

விளக்கம்: நன்மை எது என ஆராயும் அறிவு உடையவர்கள் பயன்தராத சொற்களைப் பேசமாட்டார்கள்.

பொருள்:

அரும்பயன் = பெரிய பயன்களை

ஆயும் = ஆராய்ச்சி செய்யும்

அறிவினார் = அறிவு உள்ளவர்கள்

சொல்லார் = சொல்ல மாட்டார்கள்

பெரும்பயன் = பெரிய பயன்களைத்

இல்லாத = தராத

சொல். = சொற்களை

Kural: The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them.

Explanation: The wise who weigh the worth of every utterance,

Speak none but words of deep significance

  1. சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க

சொல்லில் பயன்இலாச் சொல்

விளக்கம்: பயனுடைய சொற்களை மட்டுமே பேசுக. பயன் இல்லாத சொற்களை பேசாமல் விட்டு விடுக.

பொருள்: சொல்லுக-பேசுக; சொல்லின்-சொல்ல வேண்டுமிடத்து; பயனுடைய-பயனை விளைவிக்ககூடிய, பொருளுடையவை; சொல்லற்க-சொல்லாதீர்; சொல்லின்-சொற்களில்; பயனிலா- நன்மை இல்லாத, பொருளற்ற; சொல்-மொழி.

Kural: Speak what is useful, and speak not useless words. terity and many who do not, there are many destitute and few rich in this world

Explanation: If you have to talk, talk sensibly; do not talk nonsense.

  1. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற.

விளக்கம்: உள்ளத்தில் குற்றம் இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும். மற்றவை எல்லாம் வெறும் ஆரவாரமே.

மனத்துக்கண்-உள்ளத்தில்; மாசு-குற்றம்; இலன்-இல்லாதவன்; ஆதல்-ஆகுதல்; அனைத்து-எல்லா, அந்தஅளவு; அறன்-அறம்; ஆகுல- ஆடம்பரம், இரைச்சல்; நீர-தன்மையுடையன; பிற-மற்றவை..

Kural: Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is a virtue; all else is the vain show.

(Virtuous- having or showing high moral standards)

Explanation: Spotless be thou in mind! This only merits virtue’s name; All else,

mere pomp of idle sound, no real worth can claim

  1. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.

விளக்கம்: பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் பேசுதல் ஆகிய நான்கும் இல்லாமல் வாழ்வதே அறம் ஆகும்.

பொருள்: அழுக்காறு-(பிறர் ஆக்கம்) பொறாமை; அவா-பேராசை; வெகுளி-சினம்; இன்னாச்சொல்-தீயமொழி; நான்கும்-(இவை) நாலும்; இழுக்கா- இழுக்கி அதாவது விலக்கி; இயன்றது-நடந்தது; அறம்-நல்வினை.

Kural: That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech.

(Malice- desire to harm someone, desire – wish , bitter – feeling anger)

All actions which are done without all these four-jealousy, desire, anger, rude word, are indeed righteous actions.

ஈகை

  1. வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்

குறியெதிர்ப்பை நீரது உடைத்து.

விளக்கம்: இல்லாதவர்க்கு தருவதே ஈகை ஆகும். மற்றவை எல்லாம் பயனை எதிர்பார்த்துச் செய்பவை ஆகும்.

பொருள்: வறியார்க்கு-இல்லாதவர்க்கு; ஒன்று-ஒருபொருள் (உணவு); ஈவதே-கொடுப்பதே; ஈகை-கொடை; மற்று-பிறிது; எல்லாம்-அனைத்தும்; குறிஎதிர்ப்பை-திரும்பப் பெறுதலைக் குறியாக உடையது – பிறிதொரு பயனை எதிர்பார்த்து (கொடுத்தல்); நீரது-தன்மையை; உடைத்து-உடையது.

Kural: To give to the destitute is true charity. All other gifts have the nature of (what is done for) a measured return

(Destitute- extremely poor and lacking the means to provide for oneself)

Explanation: If you provide things or help in any kind to needy people is considered as a charity if you help in the sense of compensating, then it will not be charity

  1. ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன்க ணவர்.

விளக்கம்: இல்லாதவர்க்குத் தருவதால் உண்டாகும் இன்பத்தை அறியாதவர்கள் பொருளைச் சேர்த்துவைத்துப்பின் அதனை இழந்து விடுவார்கள்.

பொருள்: ஈத்து-கொடுத்து; உவக்கும்-மகிழ்தலால்; இன்பம்-இன்பம்; அறியார் கொல்-அறியமாட்டாரோ?; தாம்-தாங்கள்; உடைமை-பொருள்; வைத்து-வைத்து; இழக்கும்-இழந்துபோம்; வன்கணவர்- கொடியவர்.

Kural: Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving. (hard-eyed: Unsympathetic)

Explanation: If you help needy people when you have a lot of wealth, you will realize blissful

But you cannot realize blissful if you are not helping others even though you are having wealth.

இன்னா செய்யாமை

  1. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்.

விளக்கம்: நமக்குத் துன்பம் செய்தவர் நாணும்படி அவருக்கு நன்மை செய்வதுதான் அவரைத் தண்டிக்கும் வழியாகும்.

பொருள்: ஒறுத்தல் -தண்டித்தல், நாணம் -வெட்கம்

Kural: The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides.

Explanation: If you want to do anything to stop that person from harming you more, then do one thing; keep doing good acts towards him. He will surely feel embarrassed,ashame and change for the better. You will reply to your kindness for their bad acts.

  1. அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை

விளக்கம்: பிற உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல் கருதாவிட்டால் தாம் பெற்றுள்ள அறிவால் எந்தப் பயனும் இல்லை.

பொருள்: அறிவினான்-அறிவினால்; ஆகுவது-ஆதல்; உண்டோ-உளதோ; பிறிதின்-மற்றதனுடைய; நோய்-துன்பம்; தம்-தமது; நோய்-துயரம்; போல்-போல; போற்றாக்கடை-காவாவிடத்து.

Kural: What benefit has he derived from his knowledge, who does not endeavor to keep off pain from another as much as from himself. (endeavour- try/attempt)

Explanation: Wisdom is explained here that you are thinking others pain as considered as yourself

  1. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

மாணாசெய் யாமை தலை.

விளக்கம்: நம் உள்ளம் ஏற்றுக் கொள்ளாத எச்செயலையும் எக்காலத்திலும் யாருக்கும் சிறிதளவுகூடச் செய்யக் கூடாது.

பொருள்: எனைத்தானும்-எவ்வளவு சிறிய அளவினதாயினும்; எஞ்ஞான்றும்-எப்போதும்; யார்க்கும்-எவருக்கும்; மனத்தானாம்-உள்ளத்தோடும்; மாணா-மாட்சிமைப்படாத செயல்கள்; செய்யாமை-செய்யாதிருத்தல்; தலை-சிறப்பு.

Kural: It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time.

Explanation: The best virtue is to not harm anyone at any time even in thoughts, even in the tiniest measure.

(Virtue- behavior showing high moral standards)

கொல்லாமை

  1. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

விளக்கம்: தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்ற வேண்டும். அதுவே அறநூல்களில் கூறப்படும் அறங்களுள் சிறந்தது.

பொருள்: பகுத்து-பிரித்துக் கொடுத்து; உண்டு-உண்டு; பல்-பலவாகிய; உயிர்-உயிர்; ஓம்புதல்-குறிக்கொண்டு காப்பாற்றுதல்; நூலோர்-நூல் படைத்தவர்கள்; தொகுத்தவற்றுள்-(நன்னெறிகளாகத்) தொகுத்த கோட்பாடுகளுள்; எல்லாம்-அனைத்தும்; தலை-முதன்மை.

Kural: The chief of all (the virtues) which authors have summed up, is the partaking of food that has been shared with others, and the preservation of the main-fold life of other creatures.

Explanation: Not-killing is half the action; helping all others to live in the other half of it.

Partake – eat or drink

பெரியாரைப் பிழையாமை

  1. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்

போற்றலுள் எல்லாம் தலை.

விளக்கம்: ஆற்றல் உடையவர்களை இகழக் கூடாது. அதுவே தம்மைத் தீங்கிலிருந்து காத்துக்கொள்ளும் வழிகளுள் சிறந்த வழியாகும்.

பொருள்: ஆற்றுவார்-செய்யவல்லவர்க்கு; ஆற்றல்-வலிமை; பசி-பசி; ஆற்றல்-பொறுத்தல்; அப்பசியை-அந்தப் பசியை; மாற்றுவார்-ஒழிப்பவர்; ஆற்றலின்-வலியைவிட; பின்-பிறகு.

Kural: Not to disregard the power of those who can carry out (their wishes) is more important than all the watchfulness of those who guard (themselves against evil).

Explanation: Not to blame the efficiency of a person who can efficiently finish the task (with perfection, intelligence, and effort), is the best defense among all defenses (like fortress, army, wealth, and friendship).

[DO NOT OFFEND THE WISE MEN WHO OFFER COUNSEL]
  1. எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்

பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

விளக்கம்: தீயினால் சுடப்பட்டவர் கூடப் பிழைத்துக்கொள்ள முடியும். ஆனால் பெரியவர்களுக்குத் தீங்கு செய்தவர் தப்ப முடியாது.

பொருள்: எரியால் சுடப்படினும் – தீயினால் சுடப்படினும்

உய்வுண்டாம் – ஒருவர்க்கு உயிர் பிழைக்கக்கூடும்

உய்யார் – அவ்வாறு உயிர்த்து இருக்கமாட்டாது அழிவார்

பெரியார்ப் – தகுதியால் பெரியோரை

பிழைத்தொழுகுவார் – அவமதித்து வாழ்வோர்

Kural: Though burnt by fire (from a forest), one may perhaps live; (but) never will he live who has shown disrespect to the great (devotees).

Explanation: A person can still live even after getting burnt by the fire; but a person who offends the great ones (men of penance and learning) cannot escape with life.

அழுக்காறாமை

  1. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு.

விளக்கம்: ஒருவர் தன் நெஞ்சில் பொறாமையில்லாத குணத்தையே ஒழுக்க நெறியாகக் கொண்டு வாழ வேண்டும்.

பொருள்: ஒழுக்கு-ஒழுகும்; ஆறா-நெறியாக; கொள்க-கொள்க. ஒருவன்-ஒருவன்; தன்-தனது; நெஞ்சத்து-உள்ளத்தில்; அழுக்காறு-பிறர் ஆக்கம் பொறாமை; இலாத-இல்லாத; இயல்பு-தன்மை.

Kural: As ‘strict decorum’s’ laws, that all men bind,

Let each regard unenvying grace of mind.

Explanation: Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct.

(disposition: a person’s inherent qualities of mind and character,

Envy: jealousy, propriety: decency/correctness)

  1. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்.

விளக்கம்: பொறாமை கொண்டவருடைய செல்வமும், பொறாமை இல்லாதவருடைய வறுமையும் சான்றோரால் ஆராயப்படும்.

பொருள்: அவ்விய-அழுக்காற்று, பொறாமை, கோட்டமான, கோணலான, நடுவுநிலை கருதா; நெஞ்சத்தான்-உள்ளம் உடையவன்; ஆக்கமும்-வளர்ச்சியும், செல்வமும், மேன் மேல் உயர்தலும்; செவ்வியான்-நேர்மையானவன், நேரான உள்ளம் கொண்டவன்; கேடும்-அழிவும், இங்கு கேடுற்ற வாழ்வும் அல்லது வறுமையும் எனப் பொருள் கொள்வர்; நினைக்கப்படும்-ஆராயப்படும்.

Kural: To men of envious heart, when comes an increase of joy,

Or loss to blameless men, the ‘why’ will thoughtful hearts employ.

Explanation: The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered.

(pondered: think about something carefully, especially before making a decision or reaching a conclusion)

புறங்கூறாமை

  1. கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க

முன்இன்று பின்நோக்காச் சொல்.

விளக்கம்: ஒருவருக்கு நேர்நின்று கடுமையான சொற்களைச் சொன்னாலும் சொல்லலாம். ஆனால், அவர் இல்லாதபோது புறங்கூறுதல் கூடாது.

பொருள்: கண்நின்று-கண்ணெதிரே நின்று; கண்-கண்ணோட்டம் (இரக்கம்); அற-நீங்க; சொல்லினும்-சொன்னாலும். சொல்லற்க-சொல்லவேண்டாம்; முன்-எதிரில்; இன்று-இல்லாமல்; பின்-பிறகு; நோக்கா-ஆராயாத; சொல்-மொழி.

Kural: In presence, though unkindly words you speak, say not

In absence words whose ill result exceeds your thought.

Explanation: Though you speak without kindness before another’s face, speak not in his absence words which regard not the evil subsequently resulting from it.

  1. ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

விளக்கம்: பிறருடைய குற்றத்தைக் காண்பது போல், தன்னுடைய குற்றத்தையும் காண்பவருடைய வாழ்வில் துன்பம் இல்லை.

பொருள்: ஏதிலார்-அயலார்; குற்றம்-பிழை; போல்-நிகராக; தம்-தமது; குற்றம்-பிழை; காண்கிற்பின்-காணமுடியுமானால். தீது-தீமை; உண்டோ-உளதோ; மன்னும்-நிலைபெறுகின்ற; உயிர்க்கு-உயிருக்கு.

Kural: If each his own, as neighbors’ faults would scan,

Could any evil hap to living man?.

Explanation: If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men?

அருளுடைமை

  1. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள.

விளக்கம்: அருளாகிய செல்வமே செல்வங்களுள் சிறந்த செல்வமாகும். பொருட்செல்வம் இழிந்தவரிடத்திலும் உள்ளது.

பொருள்: அருட்செல்வம்–அருள் என்னும் செல்வம்; செல்வத்துள்-உடைமைகள் பலவற்றுள்ளுள்ளும்; செல்வம்-உடைமை; பொருட்செல்வம்-பொருளாலாய செல்வம்; பூரியார்-இழிந்தார்; கண்ணும்-இடத்திலும்; உள-இருக்கின்றன.

Kural: Wealth ‘mid wealth is wealth ‘kindliness’;

A wealth of goods the vilest to possess.

Explanation: The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed by the basest of men. (basest: without moral principles/ignoble)

  1. வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேல் செல்லும் இடத்து.

விளக்கம்: ஒருவர் தன்னைவிட மெலிந்தவரை துன்புறுத்தும்போது, தன்னை விட வலிமையுடையவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலையை எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

பொருள்: வலியார்-வலிமையுடையவர்; முன்-எதிரில்; தன்னை-தன்னை; நினைக்க-எண்ணுக; தான்-தான்; தன்னின்-தன்னைக் காட்டிலும்; மெலியார்-எளியார்; மேல்-இடத்தில்; செல்லும்இடத்து-செல்லும் பொழுது

Kural: When weaker men you front with threat’ning brow,

Think how you felt in presence of some stronger foe.

Explanation: When a man is about to cause trouble upon those who are weaker than himself, let him remember how he has stood trembling with fear before those who are stronger than himself. (trembling: shaking)

வாய்மை

  1. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.

விளக்கம்: வாய்மை எனப்படுவது மற்றவர்க்கு ஒரு தீங்கும் தராத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.

பொருள்: வாய்மை-மெய்மை; எனப்படுவது-என்று சொல்லப்படுவது; யாது-எது; எனின்-என்றால்; யாதுஒன்றும்-எதுவாயினும், சிறுதும்; தீமை-கெடுதி; இலாத-இல்லாதவைகளை; சொலல்-சொல்லுதல்.

Kural: You ask, in lips of men what ‘truth’ may be;

‘Tis speech from every taint of evil free.

Explanation: Truth is the speaking of such words which are free from the least degree of evil to others.

  1. தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

விளக்கம்: ஒருவர் தன் நெஞ்சறிய பொய் சொல்லக்கூடாது. அவ்வாறு கூறினால் அவர் நெஞ்சமே அவனை வருத்தும்.

பொருள்: தன்-தனது; நெஞ்சு-மனம்; அறிவது-தெரிவது; பொய்யற்க-பொய்யாது சொல்லுக; பொய்த்தபின்-பொய் கூறிய பிறகு; தன்-தன்; நெஞ்சே-உள்ளமே (மனச்சான்றே; தன்னை-தன்னை; சுடும்-வாட்டும்.

Kural: Speak not a word which false thy own heart knows

A self-kindled fire within the false one’s spirit glows.

Explanation: Let not a man knowingly tell a lie; after he has told the lie, his mind will burn him with the memory of his guilt.

  1. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்.

விளக்கம்: உள்ளத்தில் பொய் இல்லாமல் வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர் ஆவார்.

பொருள்: உள்ளத்தால்-மனத்தினால்; பொய்யாது-பொய்மை இல்லாது; ஒழுகின்-நடந்து கொண்டால்; உலகத்தார்-உலகோர்; உள்ளத்துள்-நெஞ்சில்; எல்லாம்-முழுவதும்; உளன்-இருக்கின்றான்.

Kural: True to his inmost soul who lives,- enshrined

He lives in the souls of all mankind.

Explanation: One who, in his conduct, preserves a mind free from deceit and lies, will dwell in the minds of all men. (deceit: concealing the truth, Dwell: live/reside)

இறைமாட்சி

  1. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு.

விளக்கம்: பொருள் வரும் வழிகளை அறிதலும், அவ்வழிகளில் பொருள்களைச் சேர்த்தலும், சேர்த்த பொருளைப் பாதுகாத்தலும், காத்த பொருளைப் பயனுள்ள வகையில் திட்டமிட்டுச் செலவிடுதலும் சிறந்த அரசின் செயலாகும்.

பொருள்: இயற்றலும்-உண்டாக்குதலும், உருவாக்கலும்; ஈட்டலும்-ஒருவழித் தொகுத்தலும்; காத்தலும்-காப்பாற்றுதலும்; காத்த-காப்பாற்றியவற்றை; வகுத்தலும்-வகை செய்தலும்; வல்லது-வன்மை கொண்டது; அரசு-அரசு.

Kural: A king is he who treasure gains, stores up, defends,

And duly for his kingdom’s weal expends.

Explanation: He is a king only when he can acquire (wealth), to lay it up, to guard, and to distribute it. (lay it up: store/save)

கல்வி

  1. கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

விளக்கம்: கற்க வேண்டியவற்றைப் பிழை இல்லாமல் கற்க வேண்டும். கற்றபின் கற்ற வழியில் நடக்க வேண்டும்.

பொருள்: கற்க-கற்றுக் கொள்க; கசடற-பழுதற; கற்பவை-கற்க வேண்டியவை; கற்றபின்-கற்றபின்பு; நிற்க-ஒழுகுக; அதற்கு-அதற்கு; தக-பொருந்த

Kural: So learn that you may full and faultless learning gain,

Then in obedience meet to lessons learned remain.

Explanation: Let a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning. (conduct: behaviour)

  1. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

விளக்கம்: எண்ணும் எழுத்தும் வாழும் மக்களுக்குக் கண்கள் போன்றவை.

பொருள்: எண்-கணிதம்; என்ப-என்று சொல்லப்படுபவை (அஃறிணைப் பன்மைப் பெயர்); ஏனை-மற்றும்; எழுத்து-எழுதப்படுவது; என்ப-என்று சொல்லப்படுபவை (அஃறிணைப் பன்மைப் பெயர்); இவ்விரண்டும்-இவை இரண்டும்; கண்-விழி; என்ப-என்று சொல்லுவர் (உயர்திணைப் பன்மைவினை); வாழும்-சிறப்புடைய; உயிர்க்கு-உயிருக்கு.

Kural: The twain that lore of numbers and letters give

Our eyes, the wise declare, to all on earth that live.

Explanation: Letters and numbers are the two eyes of man.

  1. தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத்து ஊறும் அறிவு.

விளக்கம்: தோண்டும் அளவிற்கு ஏற்ப மணற்கேணியில் நீர் ஊறும். அதுபோல் கற்கும் அளவிற்கு ஏற்ப மக்களுக்கு அறிவு வளரும்.

பொருள்: தொட்ட-தோண்டிய; அனைத்து-அளவுக்கு; ஊறும்-சுரக்கும்; மணல்-மணல்; கேணி-கிணறு. மாந்தர்க்கு-மக்களுக்கு; கற்ற-ஓதிய; அனைத்து-அவ்வளவு; ஊறும்-பெருகும்; அறிவு-அறிவு.

Kural: In sandy soil, when deep you delve, you reach the springs below;

The more you learn, the freer streams of wisdom flow.

Explanation: Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and likewise knowledge will flow from a man in proportion to his learning.

  1. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை.

விளக்கம்: அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே. ஒருவருக்கு அதனைவிடச் சிறந்த செல்வம் வேறு இல்லை.

பொருள்: கேடில்-அழிவில்லாத; விழுச்செல்வம்-மதிப்புமிகு செல்வம்; கல்வி-கற்றல் (கல்வி அறிவு பெறுதல்); ஒருவற்கு-ஒருவனுக்கு. மாடல்ல-உடைமையல்ல; மற்றையவை-பிற எல்லாம்.

Kural: Learning is the excellence of wealth that none destroy;

To man naught else affords reality of joy.

Explanation: Learning is the true imperishable riches; all other things are not riches.

(imperishable: everlasting)

தெரிந்து செயல்வகை

  1. செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும்.

விளக்கம்: செய்யத்தகாத செயல்களைச் செய்வதாலும் செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதாலும் தீமை உண்டாகும்.

பொருள்: செய்-செய்ய; தக்க-தகுந்தவை; அல்ல-அல்லாதவைகளை; செய-செய்தலால்; கெடும்-கேடு உண்டாகும், கெடுவான், அழியும்; செய்தக்க-செய்யத் தகுந்தவை; செய்யாமையானும்-செய்யாதிருத்தலாலும்; கெடும்-அழியும், அழிவான்.

Kural: ‘This ruin if a man does an unbefitting thing;

Fit things to leave undone will equal ruin bring.

Explanation: He will perish who does not what is not fit to do; and he also will perish who does not do what it is fit to do. (perish: go bad)

தெரிந்துசெயல்வகை

  1. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

விளக்கம்: எந்தச் செயலையும் நன்கு சிந்தித்த பின் தொடங்க வேண்டும். தொடங்கிய பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

பொருள்: எண்ணி–ஆராய்ந்து; துணிக-துணிவு கொள்க, தொடங்குக; கருமம்-செயல்; துணிந்தபின்-தொடங்கியபின்; எண்ணுவம்-நினைக்கக் கடவோம், எண்ணிப் பார்க்கலாம்; என்பது-என்றல்; இழுக்கு-குற்றம், தப்பு.

Kural: Think, and then dare the deed! Who cries,

‘Deed dared, we’ll think,’ disgraced shall be.

Explanation: Consider, and then undertake a matter; after having undertaken it, to say “We will consider,” is folly. (folly: foolishness)

  1. நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்

பண்பறிந்து ஆற்றாக் கடை.

விளக்கம்: நாம் ஒருவருடைய பண்பை அறிந்து அவருக்கு நன்மை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நன்மை செய்தாலும் தீமை வந்து சேரும்.

பொருள்: நன்று-நல்லன, நன்மை; ஆற்றல்உள்ளும்-செய்தற்கண்ணும், செய்தலில்கூட; தவறு-தவறு, குற்றம்; உண்டு-உண்டாம்; அவர்அவர்- (தனித்தனியாக)அவர்களின்; பண்பு-குணம், செயற்பாடு; அறிந்து-தெரிந்து; ஆற்றாக்கடை-செய்யாவிடின்.

Kural: Though well the work be done, yet one mistake is made,

To habitus of various men when no regard is paid.

Explanation: There are failures even in acting well, when it is done without knowing the various dispositions of men. (dispositions: characters)

சுற்றந்தழால்

  1. காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்ன நீரார்க்கே உள.

விளக்கம்: காகம் தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தன் சுற்றத்தாரைக் கூவி அழைத்து உண்ணும். அத்தகைய பண்பு உடையவர்களிடமே செல்வமும் சேரும்.

பொருள்: காக்கை-காகம்; கரவா-மறையாமல்; கரைந்து- தன் குரல் கொடுத்து அழைத்து; உண்ணும்-தின்னும். ஆக்கமும்-மேன்மேல் உயர்தலும்; அன்ன-அதுபோன்ற; நீரார்க்கே-தன்மையுடையவர்க்கே; உள-இருக்கின்றன.

Kural: The crows conceal not, call their friends to come, then eat;

The increase of good such worthy ones shall meet.

Explanation: The crows do not conceal their prey, but will call out for others (to share with them) while they eat it; wealth will be with those who show a similar disposition towards their relatives. (conceal: hide, disposition: character/behaviour)

மடியின்மை

  1. மடியை மடியா ஒழுகல் குடியைக்

குடியாக வேண்டு பவர்.

விளக்கம்: தம் குடியைச் சிறப்புடைய குடியாகச் செய்ய விரும்புபவர், சோம்பலைத் துன்பமாகக் கருதி முயற்சியோடு வாழ்தல் வேண்டும்.

பொருள்: மடியை-சோம்பலை; மடியா-மடித்து அதாவது அகற்றி (ஒழித்து) அல்லது சோம்பலாக; ஒழுகல்-நடந்துகொள்க; குடியை-குடும்பத்தை; குடியாக- (நற்)குடும்பமாக; வேண்டுபவர்-விரும்புபவர்.

Kural: Let indolence, the death of effort, die,

If you’d uphold your household’s dignity.

Explanation: Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct (illustrious: well-known/respected, idleness: laziness).

இடுக்கண் அழியாமை

  1. இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர்.

விளக்கம்: துன்பம் வந்த போது வருந்திக் கலங்காதவர், அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதனை வென்று விடுவர்.

பொருள்: இடும்பைக்கு-துன்பத்திற்கு; இடும்பை-இடையூறு; படுப்பர்-உண்டாக்குவர்; இடும்பைக்கு-இடையூற்றிற்கு; இடும்பை-துன்பம்; படாஅதவர்-உறாதவர்.

Kural: Who griefs confront with meek, ungrieving heart,

From them griefs, put to grief, depart.

Explanation: They give sorrow to sorrow, who do not suffer sorrow when sorrow comes.

வினைசெயல் வகை

  1. பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்

இருள்தீர எண்ணிச் செயல்.

விளக்கம்: வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தகுந்த காலம், மேற்கொள்ளும் செயலின் தன்மை, உரிய இடம் ஆகிய ஐந்தையும் ஐயம்தீர ஆராய்ந்து ஒரு செயலைச் செய்ய வேண்டும்.

பொருள்: பொருள் – ஆதாரம்; கருவி-சாதனம்; காலம்-பருவம்; வினை-செயல்; இடனொடு-இடமும்; ஐந்தும்-ஐந்தும்; இருள்-மயக்கம்; தீர-அற; எண்ணி-நாடி; செயல்-செய்க.

Kural: Treasure and instrument and time and deed and place of the act:

These five, till every doubt remove, think o’er with care exact.

Explanation: Do an act after a due consideration of the (following) five, viz. money, means, time, execution and place (means: methods).

  1. வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று.

விளக்கம்: ஒரு யானையைக்கொண்டு மற்றொரு யானையைப் பிடிப்பர். அது போல ஒரு செயலைச் செய்யும்போதே அச்செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல் வேண்டும்.

அணி: உவமை அணி

பொருள்: வினையால்-செயலால்; வினையாக்கி-செயல் ஆகும்படி செய்து; கோடல்-கொள்ளுதல்; நனை-ஈரமான; கவுள்-யானையின் கன்னம்; யானையால்-யானையைக் கொண்டு; யானை-யானை; யாத்து-கட்டுவது; அற்று-அத்தன்மைத்து.

Kural: By one thing done you reach a second work’s accomplishment;

So furious elephant to snare its fellow brute is sent

Explanation: To make one undertake the means of accomplishing another (similar to it) is like making one rutting elephant the means of capturing another (accomplishing: achieve or complete successfully).

அவை அஞ்சாமை

  1. கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்

கற்றசெலச் சொல்லு வார்.

விளக்கம்: தாம் கற்றவற்றைக் கற்றவர்முன் தெளிவாகச் சொல்ல வல்லவர், கற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுவார்.

பொருள்: கற்றாருள்-கற்றவர்களுள்; கற்றார்-கற்றவர்; எனப்படுவர்-என்று சொல்லப்படுவார்; கற்றார்முன்-கற்றவர் கண்; கற்ற-கற்கப்பட்டவை; செல-மனங்கொள்ள; சொல்லுவார்-சொல்லக்கூடியவர்.

Kural: Who what they’ve learned, in penetrating words have learned to say,

Before the learned among the learned most learned are they.

Explanation: Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned (acquirements: Knowledge gained).

  1. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற

மிக்காருள் மிக்க கொளல்.

விளக்கம்: கற்றவர் முன் தான் கற்றவற்றை மனத்தில் பதியும்படி சொல்லி, அவர்கள் கற்றவற்றையும் கேட்டு, அறிந்து கொள்ள வேண்டும்.

பொருள்: கற்றார்-கற்றவர்; முன்-எதிரில்; கற்ற-கற்றவற்றை; செலச்சொல்லி-மனங்கொள்ள உரைத்து; தாம்-தாம்; கற்ற-கற்றதினும்; மிக்காருள்-மிகக்கற்றவரிடத்தில்; மிக்க-மிக்கவை; கொளல்-அறிக.

Kural: What you have learned, in penetrating words speak out before

The learn’d; but learn what men more learned can teach you more.

Explanation: One should agreeably set forth their acquirements before the learned and acquire more knowledge from their superiors in learning (acquirements: Knowledge gained).

நாடு

  1. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேராது இயல்வது நாடு.

விளக்கம்: மிக்க பசியும், ஓயாத நோயும், அழிவு செய்யும் பகையும் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.

பொருள்: உறுபசியும்-மிக்க பசியும்; ஓவா-நீங்காத; பிணியும்-நோயும்; செறு-அழிக்கின்ற, நெருங்கி நிற்கின்ற; பகையும்-பகையும்; சேராது-சேராமல்; இயல்வது- நடப்பது; நாடு-நாடு.

Kural: That is a ‘land’ whose peaceful annals know,

Nor famine fierce, nor wasting plague, nor ravage of the foe.

Explanation: kingdom is that “which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes” (irremediable: impossible to cure, epidemics: widespread occurrence of disease, foes: enemies)

  1. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளம்தரு நாடு.

விளக்கம்: பெரிய அளவில் முயற்சி இல்லாமல் வளம்தரும் நாடே சிறந்த நாடாகும். முயற்சி செய்து சேரும் வளத்தை உடைய நாடு சிறந்த நாடு ஆகாது.

பொருள்: நாடென்ப-நாடு என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது; நாடா-தேடாமல்; வளத்தன-செல்வத்தையுடையவை; நாடல்ல-நாடு ஆகா; நாட- (பிற நாடுகளை) எதிர்பார்க்க, தேடி; வளந்தரும்-பொருள் உண்டாக்கும், செல்வம் கொடுக்கும்; நாடு-நாடு.

Kural: That is a land that yields increase unsought,

That is no land whose gifts with toil are bought.

Explanation: The learned say that those are kingdom whose wealth is not laboured for, and those not, whose wealth is only obtained through labour (laboured: done with great effort).

அரண்

  1. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்

காடும் உடையது அரண்.

விளக்கம்: தெளிந்த நீரும், நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய நான்கும் உள்ளதே அரண் ஆகும்.

பொருள்: மணி- (கரு)நீல நிறம்; நீரும்-நீரும்; மண்ணும்-நிலமும்; மலையும்-மலையும்; அணி-குளிர்ந்த; நிழல்-நிழல்; காடும்-காடும்; உடையது-உடையது; அரண்-கோட்டை.

Kural: A fort is that which owns fount of waters crystal clear,

An open space, a hill, and shade of beauteous forest near.

Explanation: A fort is that which has everlasting water, plains, mountains and cool shady forests.

  1. எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சி

இல்லார்கண் இல்லது அரண்.

விளக்கம்: அரண் எவ்வளவு பெருமையுடையதாக இருந்தாலும், செயல் சிறப்பு இல்லாதவரிடத்தில் அது பயனில்லாதது ஆகும்.

பொருள்: எனை-எத்துணை; மாட்சித்து-பெருமையுடையது; ஆகியக்கண்ணும்-ஆனபோதும்; வினைமாட்சி-செயல்திறன்; இல்லார்கண்-இல்லாதவரிடத்தில்; இல்லது-இலது; அரண்-பாதுகாவல், கோட்டை.

Kural: However majestic castled walls may rise,

To craven souls no fortress strength supplies.

Explanation: Although a fort may possess all (the above-said) excellence, it is, as it were without these, if its inmates possess not the excellence of action (excellence: extremely good).

பெருமை

  1. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

விளக்கம்: பிறப்பால் மக்கள் அனைவரும் ஒத்த இயல்புடையவர்களே . அவர்கள் செய்யும் நன்மை , தீமையாகியச் செயல்களால் அவர்களது சிறப்பியல்புகள் ஒத்திருப்பதில்லை .

பொருள்: பிறப்பு-தோற்றம்; ஒக்கும்-நிகர்க்கும்; எல்லா-அனைத்து; உயிர்க்கும்-உயிருக்கும். சிறப்பு-பொது அல்லாதது; ஒவ்வா-நிகர்க்கமாட்டா; செய்-செய்யும்; தொழில்-தொழில்; வேற்றுமையான்-வேறுபாட்டினால்.

Kural: All men that live are one in circumstances of birth;

Diversities of works give each his special worth.

Explanation: All human beings are the same as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions.

  1. பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்

அருமை உடைய செயல்.

விளக்கம்: உயர்ந்த பண்புகளை உடையவர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய நெறிமுறையில் செய்து முடிப்பர்.

பொருள்: ஆற்றுவார் – செய்து முடிப்பர்.அருமை உடைய -அரிதான

Kural: The man endowed with greatness true,

Rare deeds in perfect wise will do.

Explanation: The great will be able to perform, in the proper way, the deeds which are difficult for others to do (deeds: action performed intentionally).

நடுவுநிலைமை

  1. தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும்.

விளக்கம்: நடுவு நிலைமை உடையவர், நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழினாலும் பழியினாலும் அறியப்படும்.

பொருள்: தக்கார்-நடுநிலைமையுடையவர்; தகவு-நடுவு நிலைமை; இலர்-இல்லாதவர்; என்பது-என்று சொல்லப்படுவது; அவரவர்-அவரவர், ஒவ்வொருவரின்; எச்சத்தால்-எஞ்சுவதால்; காணப்படும்-அறியப்படும்.

Kural: Who just or unjust lived shall soon appear:

By each one’s offspring shall the truth be clear

Explanation: The worthy and unworthy may be known by the existence or otherwise of good off-springs

  1. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்

கோடாமை சான்றோர்க்கு அணி.

விளக்கம்: தான் சமமாக இருந்து தன்னிடம் வைக்கப்படும் பொருள்களின் எடையைத் துலாக்கோல் சரியாகக் காட்டும். அதுபோல நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும்.

அணி: உவமை அணி.

பொருள்: சமன்-சரிநிலை, சமஅளவில்; செய்து-செய்து, இயற்றி; சீர்-அளவு; தூக்கும்-வரையறுக்கும், சரியாகக் காட்டும்; கோல்தராசு; போல்-போன்று, நிகராக; அமைந்து-பொருந்தி; ஒருபால்-ஒருபக்கம்; கோடாமை-கோணாதிருத்தல்; சான்றோர்க்கு-சான்றோர்க்கு; அணி-ஆபரணம், அழகு

Kural: To stand, like balance-rod that level hangs and rightly weighs,

With calm unbiassed equity of soul, is sages’ praise

Explanation: To incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wise (incline: favourable, impartial: neutral)

கூடா ஒழுக்கம்

  1. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

விளக்கம்: மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது.

பொருள்: வலி-வலிமை அல்லது உறுதி; இல்-இல்லாத; நிலைமையான்-இயல்பினையுடையவன்; வல்-வலிய; உருவம்-தோற்றம்; பெற்றம்-பசு; புலியின்-வேங்கையினது; தோல்-தோல்; போர்த்து-போர்வையாகச் செய்து; மேய்ந்து-மேய்ந்தால்; அற்று-அத்தன்மைத்து.

அணி: இல்பொருள் உவமை அணி.

Kural: As if a steer should graze wrapped round with tiger’s skin,

Is the show of virtuous might when weakness lurks within.

Explanation: The assumed appearance of power, by a man who has no power (to restrain his senses and perform austerity), is like a cow feeding on grass covered with a tiger’s skin (austerity: attitude, restrain: prevent)

  1. கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன

வினைபடு பாலால் கொளல்.

விளக்கம்: நேராக இருந்தாலும் அம்பு கொடியதாக இருக்கிறது. வளைவுடன் இருப்பினும் யாழின் கொம்பு இனிமையைத் தருகிறது. அதுபோல மக்களின் பண்புகளை அவரவர் தோற்றத்தால் அல்லாமல் செயல் வகையால் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பொருள்: கணை-அம்பு; கொடிது-தீயது; யாழ்-வீணை போன்ற ஒரு வகை நரம்பு இசைக்கருவி; கோடு-வளைவு, கொம்பு; செவ்விது-நேரானது; ஆங்கு-அவ்வகையே; அன்ன-அதுபோன்ற; வினைபடுபாலால்-செயலின் விளைவுப் பகுதி; கொளல்-அறிக.

Kural: Cruel is the arrow straight, the crooked lute is sweet,

Judge by their deeds the many forms of men you meet.

Explanation: As, in its use, the arrow is crooked, and the curved lute is straight, so by their deeds, (and not by their appearance) let (the uprightness or crookedness of) men be estimated based on character and not based on appearances (deed: action, crooked: bent/twisted, lute: musical instrument(yazh))

கல்லாமை

  1. உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

களர்அனையர் கல்லா தவர்.

விளக்கம்: கல்லாதவர் பயனில்லாத களர்நிலம் போன்றவர். அவர் உயிரோடு இருக்கிறார் என்பதைத் தவிர அவரால் வேறு எந்தப் பயனும் இல்லை.

பொருள்: உளர்- இருக்கின்றனர்; என்னும்-என்கின்ற; மாத்திரையர்-அளவினர்; அல்லால்-அன்றி. பயவா-பயன்படாத; களர்-விளையாநிலம்; அனையர்-ஒப்பர்; கல்லாதவர்-ஓதாதவர்கள்.

Kural: ‘They are’: so much is true of men untaught;

But, like a barren field, they yield us naught!.

Explanation: The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist (barren: infertile)

  1. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்

விளக்கம்: கற்றவர்க்கும் கல்லாதவருக்கும் இடையே உள்ள வேறுபாடானது, மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டிற்கு இணையானது.

பொருள்: விலங்கொடு-மிருகங்களோடு(நோக்க) மக்கள்-மாந்தர்; அனையர்-ஒப்பர், வேறுபாடுடையவர்; இலங்குநூல்-விளங்கிய நூல், அறிவு விளக்கத்துக்குக் காரணமான நூல்கள்; கற்றாரோடு-ஓதியவரை நோக்க; ஏனையவர்-மற்றவர்கள்.

Kural: Learning’s irradiating grace who gain,

Others excel, as men the bestial train

Explanation: As beasts differ by the side of men, so do the other men differ by the side of those who are learned in celebrated works.

குற்றங்கடிதல்

  1. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.

விளக்கம்: பழி வருமுன்னே சிந்தித்து தம்மைக் காத்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கை, நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல் போர் போல அழிந்து விடும்.

பொருள்: வருமுன்னர்-வருவதற்கு முன்னால்; காவாதான்-காத்துக் கொள்ளாதவன்; வாழ்க்கை-வாழ்க்கை; எரி-நெருப்பு; முன்னர்-முன்னிடம்; வைத்தூறு-வைக்கோல் குவியல்; போல-போன்று; கெடும்-அழியும்.

அணி : உவமை அணி.

Kural: His joy who guards not ‘gainst the coming evil day,

Like straw before the fire shall swiftly consume away.

Explanation: The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire (perish: fall/die)

  1. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்

என்குற்றம் ஆகும் இறைக்கு.

விளக்கம்: தலைவன் முதலில் தன் குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவனுக்கு எந்தப் பழியும் ஏற்படாது.

பொருள்: தன்-தனது; குற்றம்-பிழை; நீக்கி-கடிந்து விலக்கி; பிறர்-மற்றவர்; குற்றம்-பிழை; காண்கிற்பின்-காண முடியுமானால். என்-என்ன; குற்றம்-பிழை; ஆகும்-ஆம்; இறைக்கு-வேந்தனுக்கு

Kural: Faultless the king who first his own faults cures, and then

Permits himself to scan faults of other men.

Explanation: No faults will remain in the king, who has put away his own evils and looks after the evils of others.

இடனறிதல்

  1. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

இடங்கண்ட பின்அல் லது.

விளக்கம்: பொருத்தமான இடத்தை அறியாமல் எந்தச் செயலையும்,

தொடங்கவும் கூடாது; இகழவும் கூடாது.

பொருள்: தொடங்கற்க-துவங்காதொழிக; எவ்வினையும் எந்தச் செயலும்; எள்ளற்க-இகழாதொழிக. முற்றும்-முற்றுமிடமாகும், முற்றுகையிடுதற்காகும்; இடம்-இடம்; கண்ட-பெற்ற; பின்–பிறகு; அல்லது-அல்லாமல்.

Kural: Begin no work of war, despise no foe,

Till place where you can wholly circumvent you know.

Explanation: Let not (a king) despise (an enemy), nor undertake any thing (against him), until he has obtained (a suitable) place for besieging him (despise: hate/disrespect, besieging: surrounding)

  1. கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்

நாவாயும் ஓடா நிலத்து.

விளக்கம்: வலிமையான சக்கரங்களைக் கொண்ட பெரியதேர் கடலில் ஓட இயலாது. கடலில் ஓடும் கப்பல் தரையில் ஓட இயலாது. அவரவர் தமக்குரிய இடங்களிலேயே சிறப்பாகச் செயல்பட முடியும்

பொருள்: கடலின் கண்; ஓடா-ஓடமாட்டா; கால்-உருளை; வல்-வலிய; நெடும்-நீண்ட; தேர்-இரதம். கடல்-கடல்; ஓடும்-ஓடும்; நாவாயும்-மரக்கலமும்; ஓடா-ஓடமாட்டா; நிலத்து-பூமியின் கண்.

அணி : பிறிது மொழிதல் அணி.

Kural: The lofty car, with mighty wheel, sails not o’er watery main,

The boat that skims the sea, runs not on earth’s hard plain.

Explanation: Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that the traverse ocean, move on the earth. Similarly, everyone should act well in their respective places (traverse: through)

தெரிந்து வினையாடல்

  1. செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு

எய்த உணர்ந்து செயல்.

விளக்கம்: செயலாற்றும் திறன் உடையவரையும் செய்ய வேண்டிய

செயலையும் செய்வதற்குரிய காலத்தையும் ஆராய்ந்து அச்செயலை நிறைவேற்ற வேண்டும்.

பொருள்: செய்வானை-செய்பவனை; நாடி-ஆராய்ந்து; வினை-செயல்; நாடி-ஆராய்ந்து. காலத்தோடு-குறித்த காலத்தில்; எய்த-அடைய; உணர்ந்து-தெரிந்து; செயல்-செய்விக்க.

Kural: Let king first ask, ‘Who shall the deed perform?’ and ‘What the deed?’

Of hour befitting both assured, let every work proceed.

Explanation: Let (a king) act, after having considered the agent (whom he is to employ), the deed (he desires to do), and the time which is suitable to it.

  1. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து

அதனை அவன்கண் விடல்.

விளக்கம்: இச்செயலை இந்த வகையால் இவர் செய்து முடிப்பார் என்று

ஆராய்ந்து அச்செயலை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

பொருள்: இதனை-இச்செயலை; இதனால்-இம்முறையால்; இவன்-இவன்; முடிக்கும்-நிறைவேற்றும்; என்று-என்பதாக; ஆய்ந்து-ஆராய்ச்சி செய்து; அதனை-அதை; அவன்கண்-அவனிடத்தில்; விடல்-விடுக.

Kural: ‘This man, this work shall thus work out,’ let thoughtful king command;

Then leave the matter wholly in his servant’s hand.

Explanation: After having considered, “this man can accomplish this, by these means”, let (the king) leave with him the discharge of that duty (accomplish: achieve)

செங்கோன்மை

  1. ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை .

விளக்கம்: எதையும் நன்கு ஆராய்ந்து ஒருபக்கம் சாயாது நடுவுநிலையில் நின்று நடத்துவதே சிறந்த ஆட்சியாகும்.

பொருள்: ஓர்ந்து-ஆராய்ந்து, நாடி; கண்ணோடாது-இரக்கம் காட்டாமல்; இறை புரிந்து-இறையாண்மை செலுத்தி, நடுவு நிலைமையைப் பொருந்தி; யார்மாட்டும்-எவரிடத்தும்; தேர்ந்து-தெளிந்து, ஆராய்ந்து; செய்வஃதே-செய்தலே, இங்கு ஆளுதலைச் செய்வதே; முறை-நீதி, ஒழுங்கு.

Kural: Search out, to no one favor show; with a heart that justice loves

Consult, then act; this is the rule that right approves.

Explanation: To examine into (the crimes which may be committed), to show no favour (to anyone), to desire to act with impartiality towards all, and to inflict (such punishments) as may be wisely resolved on, constitute rectitude (rectitude: morally correct thinking or behavior)

  1. இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின்.

விளக்கம்: உலகத்து உயிர்களை எல்லாம் அரசர் காப்பாற்றுவார். அவரை அவரது குற்றமற்ற ஆட்சி காப்பாற்றும்.

பொருள்: இறை-வேந்தன் (அரசு); காக்கும்-காப்பாற்றும்; வையகம்-மண்ணுலகம்; எல்லாம்-அனைத்தும். அவனை-அவனை; முறை-நீதி; காக்கும்-காப்பாற்றும்; முட்டா-வழுவாமல்; செயின்-செய்தால்.

Kural: The king all the whole realm of earth protects;

And justice guards the king who right respects

Explanation: The king defends the whole world; and justice, when administered without defect, defends the king

வெருவந்த செய்யாமை

  1. தக்காங்கு நாடித் தலைசெல்லா வண்ணத்தால்

ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

விளக்கம்: ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது அரசனின் கடமையாகும்.

பொருள்: தக்கு-நடுவாக; ஆங்கு-போல; நாடி-ஆராய்ந்து. தலைச்செல்லா-பின்னும் செய்யாத; வண்ணத்தால்-வகையாக; ஒத்தாங்கு-ஒத்திருக்க; ஒறுப்பது-தண்டிப்பது; வேந்து-அரசு.

Kural: Who punishes, an investigation made in due degree,

To stay in advance of crime, a king is he.

Explanation: He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice), suitably punishes it, so that it may not be again committed (equitably: fair and equal).

வெருவந்த செய்யாமை

  1. இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்

உறைகடுகி ஒல்லைக் கெடும்.

விளக்கம்: நம் அரசர் கடுமையானவர் என்று குடிமக்களால் தூற்றப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசர், தன் வாழ்நாள் குறைந்து விரைவில் அழிவார்.

பொருள்: இறை-வேந்தன்; கடியன்-கொடுமையுடையவன்; என்று-என்பதாக; உரைக்கும்-சொல்லும்; இன்னாச்சொல்-தீய சொல்; வேந்தன்-மன்னவன். உறைவிடம்; கடுகி-குறைந்து; ஒல்லை-கடிதின்; கெடும்-அழியும்.

Kural: ‘Ah! cruel is our king’, where subjects sadly say,

His age shall dwindle, swift his joy of life decay.

Explanation: The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened (cruel: inhuman, Perish: fall/end)

சொல்வன்மை

  1. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்.

விளக்கம்: கேட்பவரைத் தன்வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் இயல்பாகும்.

பொருள்: கேட்டார்-சொல்கேட்டவர்; பிணிக்கும்-ஈர்க்கும், கட்டிப் போடும் எனவும் கொள்வர்; தகையவாய்-இயல்பினையுடையவாய்; கேளாரும் – (அச்சொல்) கேட்காதபிறரும். பகைவர் எனவும் பொருள் உண்டு; வேட்ப-விரும்பும் வண்ணம்; மொழிவதாம்-சொல்லப்படுவதாம் அல்லது உரைக்கப்படுவதாம்; சொல்-சொல்வன்மை.

Kural: ‘This speech that spell-bound holds the listening ear,

While those who have not heard a desire to hear.

Explanation: The (minister’s) speech is that which seeks (to express) elements as bind his friends (to himself) and is so delivered as to make even his enemies desire his friendship.

  1. சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை

வெல்லும்சொல் இன்மை அறிந்து.

விளக்கம்: நாம் சொல்லும் சொல்லை வேறு சொல்லால் வெல்ல

இயலாதவாறு சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசவேண்டும்.

பொருள்: சொல்லுக-சொல்வாராக; சொல்லை-சொல்லை; பிறிது-வேறு; ஓர்-ஒரு; சொல்-மொழி; அச்சொல்லை-அந்தச் சொல்லை வெல்லும்-வெல்ல வல்ல; சொல்-மொழி; இன்மை-இல்லாதிருத்தல்; அறிந்து-தெரிந்து.

Kural: Speak out your speech, when once ’tis past dispute

That none can utter speech that shall your speech refute.

Explanation: Deliver your speech, after assuring yourself that no counter speech can defeat your own.

அவையறிதல்

  1. அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்

தொகைஅறிந்த தூய்மை யவர்.

விளக்கம்: சொல் வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் அவையின் தகுதி அறிந்து பேசுதல் வேண்டும்.

பொருள்: அவை-மன்றம்; அறிந்து-தெரிந்து; ஆராய்ந்து-பொருந்த நாடியறிந்து; சொல்லுக-சொல்வாராக; சொல்லின்-சொல்லினது; தொகை-தொகுதி; அறிந்த-தெரிந்த; தூய்மையவர்-தெளிவினையுடையவர்கள்.

Kural: Men pure in heart, who know of words the varied force,

Should to their audience known to adapt their well-arranged discourse

Explanation: Let the pure who know the arrangement of words speak with deliberation after ascertaining (the nature of) the court (then assembled).

(deliberation: long and careful discussion, ascertaining: finding out)

  1. கற்றுஅறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்

சொல்தெரிதல் வல்லார் அகத்து.

விளக்கம்: சொற்களை ஆராயும் அறிஞர் நிறைந்த அவையில் பேசும் போது தான் பல நூல்களைக் கற்றவரின் கல்வி பெருமையடையும்.

பொருள்: கற்று-படித்து; அறிந்தார்-பயனைத் தெரிந்தவரது; கல்வி-கற்றல்; விளங்கும்-விளங்கித் தோன்றும்; கசடு-வழு; அற-நீங்க; சொல்-சொற்கள்; தெரிதல்- அறிதல்; ஆராய்தல்; விளக்கமாதல்; வல்லார்-வல்லவர்; அகத்து-இடையில்.

Kural: The learning of the learned sage shines bright

To those whose faultless skill can value it aright.

Explanation: The learning of those who have read and understood (much) will shine in the assembly of those who faultlessly examine (the nature of) words.

படைச்செருக்கு

  1. கான முயல்எய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

விளக்கம்: காட்டு முயலை வீழ்த்திய அம்பினை ஏந்துவதை விட யானைக்குக் குறிவைத்துத் தவறிய வேலை ஏந்துவது பெருமை தரும். (பெரிய முயற்சியே பெருமை தரும்.)

பொருள்: கான-காட்டின்கண்; முயல்-முயல்; எய்த-ஏவிய, குறி தவறாமல் கொன்ற; அம்பினில்-அம்பை ஏந்துவதைவிட; யானை-வேழம்; பிழைத்த-தவறிய; வேல்-எறியீட்டி; ஏந்தல்-தாங்குதல்; இனிது-நன்றானது.

அணி: பிறிது மொழிதல் அணி

Kural: Who aims at elephant, though dart should fail, has greater praise.

Then he who woodland hare with winged arrow slays.

Explanation: It is more pleasant to hold the dart that has missed an elephant than that which has hit hare in the forest.

  1. பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால்

ஊராண்மை மற்றுஅதன் எஃகு.

விளக்கம்: பகைவரை எதிர்த்து நிற்கும் வீரத்தை ஆண்மை என்று கூறுவர். பகைவருக்கும் துன்பம் வரும் போது, உதவி செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.

பொருள்: பேராண்மை-மிக்க ஆளுந்தன்மை, திட்பம்; என்ப-என்று சொல்லுவர்; தறுகண்-வீரம், மறம்; ஒன்று-ஒரு தாழ்வு; உற்றக்கால்-வந்தால்; ஊராண்மை-உதவுந்தன்மை; மற்று- (அசைநிலை) அதன்-அதனுடைய; எஃகு-படைக்கலம்..

Kural: Fierceness in an hour of strife heroic greatness shows;

Its edge is kindness to our suffering foes.

Explanation: The learned say that fierceness (in contest with a foe) is indeed great valour; but to become a benefactor in case of accident (to a foe) is the extreme (limit) of that valour (fierceness: the quality of being physically violent and frightening, valour: courage/bravery, foe: enemy)

நட்பு

  1. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு.

விளக்கம்: நல்ல நூல்கள் படிக்கப் படிக்க இன்பம் தருவது போலப்

பண்புடையவர் நட்பு பழகப் பழக இன்பம் தரும்.

பொருள்: நவில்தொறும்-படிக்கப் படிக்க, பயில்கின்ற போதெல்லாம், பயிலப் பயில; நூல்-நல்ல நூல், நூற்பொருள்; நயம்-இன்பஞ் செய்தல்; போலும்-போன்றது; பயில்தொறும்-பழகப் பழக; பண்புடையாளர்-குணமுடையவர்; தொடர்பு-நட்பு.

அணி: உவமை அணி

Kural: Learned scroll the more you ponder, Sweeter grows the mental food;

So the heart by use grows fonder, Bound in friendship with the good.

Explanation: Like learning, the friendship of the noble, the more it is cultivated, the more delightful does it become.

  1. நகுதல் பொருட்டுஅன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தல் பொருட்டு.

விளக்கம்: நட்பு, சிரித்துப் பேசி மகிழ்வதற்கு மட்டும் உரியது அன்று; நண்பர் தவறு செய்தால் அவரைக் கண்டித்துத் திருத்துவதற்கும் உரியது.

பொருள்: நகுதல்-சிரித்து மகிழ்தல்; பொருட்டுஅன்று-என்பதற்காக அல்ல; நட்டல்-நண்பு கொள்ளல்; மிகுதிக்கண்-வேண்டாச் செயல் உள்ள போது; மேற்சென்று-விரைந்து முற்பட்டு; இடித்தல்-கடிந்து சொல்லல்; பொருட்டு-என்பதற்கு.

Kural: Nor for laughter only friendship all the pleasant day,

But for strokes of sharp reproving, when from right you stray.

Explanation: Friendship is to be practiced not only for the purpose of laughing but for that of being beforehand in giving one another sharp rebukes in case of transgression (rebuke: criticism or strong disapproval, transgression: against a law/ offence)

நட்பு ஆராய்தல்

  1. ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும்.

விளக்கம்: மீண்டும் மீண்டும் ஆராய்ந்து பாராமல் ஒருவனுடன் கொண்ட நட்பு தாம் சாகும் அளவுக்குத் துன்பம் தரும்.

பொருள்: ஆய்ந்து-ஆராய்ச்சி செய்து; ஆய்ந்து-ஆராய்ச்சி செய்து, தேர்ந்தெடுத்து; கொள்ளாதான்-அடையாதவன்; கேண்மை-நட்பு; கடைமுறை-முடிவின்கண்; தான்-தான்; சாம்-இறத்தற்கேதுவாய; துயரம்-துன்பம்; தரும்-உண்டாக்கும்.

Kural: Alliance with the man you have not proved and proved again,

In length of days will give you mortal pain.

Explanation: The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) to death (grieve: intense sorrow)

  1. கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்.

விளக்கம்: நமக்கு வரும் துன்பத்தினாலும் ஒரு நன்மை உண்டு. அத்துன்பமே நமது நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்துகாட்டும் அளவு கோலாகும்.

பொருள்: கேட்டினும்-கெடுதியின் கண்ணும்; உண்டு-உளது; ஓர்-ஒரு; உறுதி-நல்லறிவு; கிளைஞரை-நட்பாளரை; நீட்டி-எஞ்சாமல்; அளப்பது-அளக்கும் கருவியாவது; ஓர்-ஒரு; கோல்-அளவுகோல்.

Kural: Ruin itself one blessing lends:

‘Tis staff that measures out one’s friends.

Explanation: Even in ruin there is some good; (for) it is a rod by which one may measure fully (the affection of one’s) relations

மானம்

  1. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய

சுருக்கத்து வேண்டும் உயர்வு.

விளக்கம்: செல்வம் மிகுந்த காலத்தில் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். வறுமை வந்த காலத்தில் ஊக்கம் குறையாமல் பெருமித உணர்வுடன் வாழ வேண்டும்.

Kural: Bow down thy soul, with increase blest, in happy hour;

Lift up thy heart, when stript of all by fortune’s power.

Explanation: In great prosperity humility is becoming; dignity, in great adversity.

(prosperity: wealthy, humility: humbleness, adversity: difficult situation)

  1. குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குன்றி அனைய செயின்.

விளக்கம்: மலையளவு பெருமை உடையவராக இருந்தாலும் குன்றி மணியளவு தவறு செய்தால் அவரது பெருமை அழிந்து விடும்.

Kural: If meanness, slight as ‘abrus’ grain, by men be wrought,

Though like a hill their high estate, they sink to nought.

Explanation: Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing (exalted: superior/high-rank, debasing: degrade/devalue)

பண்புடைமை

  1. பண்புடையார்ப் பட்டுஉண்டு உலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன்.

விளக்கம்: பண்பு உடைய சான்றோரின் வழியில் நடப்பதால் தான் இவ்வுலகம் இன்னும் இயங்குகிறது; இல்லாவிட்டால் மண்ணுக்குள் புதைந்து அழிந்திருக்கும்.

பொருள்: பண்புடையார்- பண்புடையவர்கள்; பட்டு-அமைந்து; உண்டு-உளது; உலகம்-உலகம். அது-அஃது; இன்றேல்-இல்லாவிடில்; மண்-மண்; புக்கு-புகுந்து; மாய்வது-அழிவது; மன்-ஒழியிசை(சொல்லாதொழிந்த சொற்களால் பொருளை இசைப்பது).

Kural: The world abides; for ‘worthy’ men its weight sustain.

Were it not so, ‘twould fall to dust again.

Explanation: The (way of the) world subsists by contact with the good; if not, it would bury itself in the earth and perish (subsists: survive, perish: end).

  1. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலம்தீமை யால்திரிந்து அற்று.

விளக்கம்: தூய்மையற்ற பாத்திரத்தில் வைக்கப்படும் பால் திரிந்து விடும். அதுபோல நற்பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமும் யாருக்கும் பயனின்றி அழியும்.

அணி : உவமையணி

Kural: Like sweet milk soured because in filthy vessel poured,

Is ample wealth in churlish man’s unopened coffers stored.

Explanation: The great wealth obtained by one who has no goodness will perish like pure milk spoilt by the impurity of the vessel (perish: spoil)

பொறையுடைமை

  1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை .

விளக்கம்: தன்னைத் தோண்டுபவரைத் தாங்கும் நிலம் போலத் தன்னை

இகழ்பவரைப் பொறுப்பது தலை சிறந்தது.

அணி – உவமையணி

பொருள்: அகழ்வாரை-தோண்டுவாரை; தாங்கும்-சுமக்கும்; நிலம்-நிலம்; போல-ஒக்க; தம்மை-தம்மை; இகழ்வார்-இகழ்பவர்கள்; பொறுத்தல்-பொறுத்துக் கொள்ளுதல்; தலை-முதன்மை, சிறப்பு.

Kural: As earth bears up the men who delve into her breast,

To bear with scornful men of virtues is the best.

Explanation: To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues (revile: criticize/insult, virtue: goodness/morality)

  1. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து

அறனல்ல செய்யாமை நன்று.

விளக்கம்: பிறர் தனக்குத் தரக்கூடாத துன்பத்தைக் தந்தாலும்

மனம் நொந்து அறம் அல்லாத செயல்களைச் செய்யாமை சிறப்புக்குரியது.

பொருள்: திறன் அல்ல–செய்யத்தகாதவைகளை, முறையல்லாதவை; தன்பிறர்-தன்கண் மற்றவர், தமக்குப் பிறர்; செய்யினும்-செய்தாலும்; நோ-துன்பம்; நொந்து-வருந்தி; அறன்அல்ல–அறமல்லாதவற்றை, நற்செயல் அல்லாதவைகளை; செய்யாமை-செய்யாதிருத்தல்; நன்று-நல்லது, நன்மையுடையது.

Kural: Though others work thee ill, thus shalt thou blessing reap;

Grieve for their sin, thyself from vicious action keep!.

Explanation: Though others inflict injuries on you yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue.

 (inflict cause, compassionate: feeling or showing sympathy, virtue: goodness)

வாழ்வியல்

  1. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல்.

விளக்கம்: செருக்கினால் துன்பம் தந்தவரை நம்முடைய பொறுமையால் வெல்ல வேண்டும்.

பொருள்: மிகுதியான்-மனச் செருக்கால்; மிக்கவை-தீங்குகள்; செய்தாரை-செய்தவரை. தாம்-தாங்கள்; தம்-தமது; தகுதியான்-(பொறுமையுடன் கூடிய) தகுதியால்; வென்று-வெற்றி கொண்டு; விடல்-விடுக.

Kural: With overweening pride when men with injuries assail,

By thine own righteous dealing shalt thou mightily prevail.

Let a man by patience overcome those who through pride commit excesses.

Explanation: (pride: a feeling or deep pleasure or satisfaction derived from one’s own achievements, excess: extra)

தீவினை அச்சம்

  1. தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

விளக்கம்: தீயவை தீயவற்றையே தருதலால் தீயைவிடக் கொடியதாகக் கருதி அவற்றைச் செய்ய அஞ்ச வேண்டும்.

பொருள்: தீயவை-கொடியசெயல்கள்; தீய-துன்பங்கள்; பயத்தலால்-பயனாகத் தருதலால்; தீயினும்-நெருப்பைக் காட்டிலும்; அஞ்சப்படும்-நடுங்கத்தகும்.

Kural: Since evils new from evils ever grow,

Evil than fire works out more dreaded woe.

Explanation: Because evil produces evil, therefore should evil be feared more than fire.

  1. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.

விளக்கம்: மறந்தும்கூடப் பிறருக்குக் கெடுதல் செய்ய நினைக்கக் கூடாது. நினைத்தால், நினைத்தவருக்குக் கெடுதல் செய்ய அறம் நினைக்கும்.

பொருள்: மறந்தும்-நினைவொழிந்தும்; பிறன்-மற்றவன்; கேடு-அழிவு; சூழற்க-நினையாதொழிக; சூழின்-நினைத்தால்; அறம்-அறக்கடவுள்; சூழும்-திட்டமிடும்; சூழ்ந்தவன்-எண்ணியவன்; கேடு-கெடுதி.

Kural: Though good thy soul forget, plot not thy neighbour’s fall,

Thy plans shall ‘virtue’s Power’ by ruin to thyself forestall.

Explanation: Even though forgetfulness meditate not the ruin of another. Virtue will meditate the ruin of him who thus meditates.

(meditate: consider)

கேள்வி

  1. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாந் தலை .

விளக்கம்: செல்வத்தில் சிறந்தது செவியால் கேட்டறியும் கேள்விச்செல்வம்.

அது பிற வழிகளில் வரும் செல்வங்களை விடத் தலை சிறந்தது.

அணி – சொற்பொருள் பின்வருநிலையணி

பொருள்: செல்வத்துள்-செல்வங்கள் பலவற்றுள்ளும்; செல்வம்-பொருள்மிகுதி; செவிச்செல்வம்-கேள்விச் செல்வம்; அச்செல்வம்-அந்தச் செல்வம்; செல்வத்துள்-செல்வங்கள் பலவற்றுள்ளும்; எல்லாம்-அனைத்தும்; தலை-முதன்மை.

Kural: Wealth of wealth is wealth acquired be ear attent;

Wealth mid all wealth supremely excellent.

Explanation: Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth.

  1. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.

விளக்கம்: எவ்வளவு சிறிதானாலும் நல்லவற்றைக் கேட்டால், கேட்ட அளவுக்குப் பெருமை உண்டாகும்.

பொருள்: எனைத்து- எவ்வளவு; ஆனும்-ஆயினும்; நல்லவை-நல்ல பொருட்கள்; கேட்க-கேட்க வேண்டும். அனைத்தானும்-அத்துணையாயினும்; ஆன்ற-நிறைந்த; பெருமை-உயர்வு; தரும்-கொடுக்கும்.

Kural: Let each man good things learn, for e’en as he

Shall learn, he gains increase of perfect dignity.

Explanation: Let a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignity. (dignity: honour/respect)

  1. நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய

வாயினர் ஆதல் அரிது.

விளக்கம்: நுட்பமான கேள்வியறிவு இல்லாதவர் அடக்கமான சொற்களைப் பேசுவது அரிது.

பொருள்: நுணங்கிய-நுட்பமான; கேள்வியர்-கேள்வியுடையவர்; அல்லார்-அல்லாதவர். வணங்கிய-பணிந்த; வாயினர்-மொழியினையுடையவர்; ஆதல்-ஆகுதல்; அரிது-அருமையானது.

Kural: Tis hard for mouth to utter gentle, modest word,

When ears discourse of lore refined have never heard.

Explanation: It is a rare thing to find modesty, a reverend mouth with those who have not received choice instruction (modesty: humility, reverend: used as title)

  1. செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

          அவியினும் வாழினும் என்.

விளக்கம்: கேட்பதன் சுவையை உணராமல் நாவின் சுவை மட்டும் உணர்பவர்

இறந்தால் தான் என்ன! இருந்தால் தான் என்ன!

பொருள்: செவியின்-காதினால்; சுவை-சுவை; உணரா-தெரியாத; வாய்-வாய்; உணர்வின்-அறிவினையுடைய மாக்கள்-(பகுத்தறிவில்லாத) மக்கள். அவியினும்-இறந்தாலும்; வாழினும்-வாழ்ந்தாலும்; என்-என்ன.

Kural: His mouth can taste, but ear no taste of joy can give!

What matter if he die, or prosperous live?.

Explanation: What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear?.

தெரிந்துதெளிதல்

  1. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.

அணிசொற்பொருள் பின்வருநிலையணி

விளக்கம்: ஒருவரின் குணத்தையும் குற்றத்தையும் ஆராய்ந்து, அவற்றுள் மிகுதியானதைக் கொண்டு அவரைப்பற்றி முடிவு செய்க.

பொருள்: குணம்நாடி-குணங்களைக் குறிக்கொண்டு; குற்றமும்நாடி குற்றங்களையும் தேடி அறிந்து; அவற்றுள்-அவைகளினுள்; மிகை-மிக்கவை; நாடி-ஆராய்ந்து; மிக்க-மிகுதியாக இருப்பனவற்றை; கொளல்-கொள்க

Kural: Weigh well the good of each, his failings closely scan,

As these or those prevail, so estimate the man.

Explanation: Let (a king) consider (a man’s) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails. (prevails: stay)

  1. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்.

விளக்கம்: ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரது செயல்பாடுகளே ஆராய்ந்து அறியும் உரைகல் ஆகும்.

அணி – ஏகதேச உருவக அணி

பொருள்: பெருமைக்கும்-சிறப்புக்கும், நிறைகுணத்திற்கும்; ஏனை-மற்றும்; சிறுமைக்கும்-குறைபாட்டிற்கும், குறைவிற்கும்; கருமமே-செயலே, செய்திறனே. செயற்பாங்கே; கட்டளைக்கல்-உரைகல்; தத்தம்-தங்கள் தங்களது, அவரவர்.

Kural: Of greatness and of meanness too,

The deeds of each are touchstone true.

Explanation: A man’s deeds are the touchstone of his greatness and littleness.

(deeds: actions)

  1. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்.

விளக்கம்: ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்வதும் அவ்வாறு தேர்வு செய்தபின்

அவரைப்பற்றி ஐயப்படுதலும் தீராத துன்பம் தரும்.

பொருள்: தேரான்-ஆராயாதவனாக; தெளிவும்-தேர்வும்; தெளிந்தான்கண்-தேர்வு செய்யப்பட்டவன் மாட்டு; ஐயுறவும்-ஐயப்படுதலும்; தீரா-நீங்காத; இடும்பை-துன்பம்; தரும்-கொடுக்கும்.

Kural: Who trusts an untried stranger, brings disgrace,

Remediless, on all his race.

Explanation: Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not known. (posterity: future generations)

ஒற்றாடல்

  1. ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

விளக்கம்: ஒற்றர் ஒருவர் சொன்ன செய்தியை மற்றோர் ஒற்றரால் அறிந்து முடிவு செய்க!

பொருள்: ஒற்று-உளவாளி; ஒற்றி-உளவறிந்து; தந்த-அறிவித்த; பொருளையும்-செய்தியையும் மற்று-வேறு; ஒர்-ஒரு; ஒற்றினால்-உளவாளியால்; ஒற்றி-உளவறிந்து; கொளல்-பெறுக

Kural: Spying by spies, the things they tell

To test by other spies is well.

Explanation: Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy.

வினைத்தூய்மை

  1. ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை

ஆஅதும் என்னு மவர்.

விளக்கம்: வாழ்வில் உயர நினைப்பவர் புகழைக் கெடுக்கும் செயல்களை புறம் தள்ள வேண்டும்.

பொருள்: ஓஒதல்-ஓவுதல், ஒழித்துவிடுதல்; வேண்டும்-வேண்டும்; ஒளி-நன்கு மதிக்கப்படுதல்; மாழ்கும்-கெடுதற்கு ஏதுவாகிய; செய்வினை-(வினைசெய்)-செய்தல்; ஆஅதும்-ஆக்கம் பெறுவோம்; என்னுமவர்-எனக்கருதுகின்றவர்கள்.

Kural: Who tell themselves that nobler things shall yet be won

All deeds that dim the light of glory must they shun.

Explanation: Those who say, “we will become better” should avoid the performance of acts that would destroy their fame.

  1. ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை.

விளக்கம்: தாயின் பசியைக் கண்டபோதும் சான்றோர் பழிக்கும் செயல்களைச் செய்யாதே.

பொருள்: ஈன்றாள்-பெற்றவள்; பசி-பசித்தல்; காண்பான்-பார்ப்பவன்; ஆயினும்-ஆனாலும்; செய்யற்க-செய்யாதொழிக; சான்றோர்-மேலானவர்; பழிக்கும்-தூற்றுதற்குக் காரணமாகிய; வினை-செயல்.

Kural: Though her that bore thee hung’ring thou behold, no deed

Do thou, that men of perfect soul have crime decreed.

Explanation: Though a minister may see his mother starve; let him do not act which the wise would treat with contempt (contempt: disrespect)

  1. சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்

கலத்துநீர் பெய்திரீஇ யற்று.

விளக்கம்: தீய செயலால் பொருள் சேர்த்துப் பாதுகாத்தல் சுடாத மண்கலத்தில் நீரூற்றி வைப்பதைப் போன்றது.

அணிஉவமையணி

பொருள்: சலத்தால்-வஞ்சனையால்; பொருள்-உடைமை; செய்து-இயற்றி; ஏமார்த்தல்-மகிழ்தல் என்றும் பாதுகாத்தல் என்றும் பொருள் கொள்வர்; பசுமண்-பச்சை மண்; கலத்துள்-பாண்டத்துள்; நீர்-நீர்; பெய்து-சொரிந்து; இரீஇ-இருக்கும்படி செய்து; அற்று-அத்தன்மைத்து.

Kural: In pot of clay unburnt he water pours and would retain,

Who seeks by wrong the realm in wealth and safety to maintain.

Explanation: For a minister to protect his king with wealth obtained by foul means is like preserving a vessel of wet clay by filling it with water. (foul: immoral)

பழைமை

  1. விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்

கேளாது நட்டார் செயின்

விளக்கம்: நட்பின் உரிமையில் தம்மைக் கேட்காமலேயே ஒரு செயலைச் செய்தாலும் நட்பு பாராட்டுவோர் விருப்பத்தோடு அச்செயலுக்கு உடன்படுவர்.

பொருள்: விழை – விரும்பப்படும்; தகையான்-தன்மை பற்றி; வேண்டி இருப்பர்-எதிர்பார்ப்பர், விரும்புவர்; கெழுதகையால்- பழைமை தன்மையால், நெடுங்கால நட்பின் உரிமையால்; கேளாது-கேட்காமல்; நட்டார் செயின்-செய்தால்.

Kural: When friends unbidden do familiar acts with loving heart,

Friends take the kindly deed in friendly part.

Explanation: If friends, through the right of friendship, do (anything) without being asked, the wise will be pleased with them on account of its desirability. (desirability: eligibility)

தீ நட்பு

  1. கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு

விளக்கம்: செயல் வேறு, சொல் வேறு என்று உள்ளவர் நட்பு கனவிலும் இனிமை தராது.

பொருள்: கனவினும்-கனாவின் கண்ணும்; இன்னாது-தீது, துன்பத்தைத் தருவது, வெறுப்பானது; மன்னோ-(அசைநிலை) வினை-செய்கை; வேறு-பிறிது; சொல்-மொழி; வேறு-பிறிது; பட்டார்-ஆனவர்; தொடர்பு-நட்பு.

Kural: E’en in a dream the intercourse is bitterness

With men whose deeds are other than their words profess.

Explanation: The friendship of those whose actions do not agree with their words will distress one even in one’s dreams. (distress: extreme pain or sorrow)

பேதைமை

  1. நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்

பேணாமை பேதை தொழில்.

விளக்கம்: தகாத செயலுக்கு வெட்கப்படாமை, தக்கவற்றை நாடாமை, பிறரிடம் அன்பு இல்லமை, ஏதொன்றையும் பாதுகாக்காமை முதலியவை பேதையின் செயல்கள்.

பொருள்: நாணாமை-வெட்கப்படாமை; நாடாமை-நாடியறியாதிருத்தல்; நாரின்மை-அன்பு இல்லாமை; யாதொன்றும்-எந்த ஒன்றும், சிறிதாயினும்; பேணாமை-விரும்பிக் கொள்ளாமை; பேதை-பேதை; தொழில்-செயல்.

Kural: Ashamed of nothing, searching nothing out, of loveless heart,

Nought cherishing, ’tis thus the fool will play his part.

Explanation: Shamelessness indifference (to what must be sought after), harshness, and aversion for everything (that ought to be desired) are the qualities of the fool. (aversion: strong dislike)

  1. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

பேதையின் பேதையார் இல்.

விளக்கம்: படித்தும் படித்ததை உணர்ந்தும் உணர்ந்ததை மற்றவருக்குக் கூறியும் தான் அதன்         படி செயல்படாத பேதையைப் போலப் பேதை யாருமில்லை.

பொருள்: ஓதி-கற்று; உணர்ந்தும்-தெரிந்தும்; பிறர்க்கு-மற்றவர்க்கு; உரைத்தும்-சொல்லியும்; தான்-தான்; அடங்கா-அடங்கியொழுகாத; பேதையின்-பேதைபோல; பேதையார்-பேதையார்; இல்-இல்லை.

Kural: The sacred law he reads and learns, to other men expounds,-

Himself obeys not; where can greater fool be found? .

Explanation: There are no greater fools than he who, though he has read and understood (a great deal) and even taught it to others, does not walk according to his own teaching.

புல்லறிவாண்மை

  1. ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

போஒம் அளவும்ஓர் நோய்.

விளக்கம்: சொன்னாலும் செய்யாமல், தானாகவும் செய்யாமல் இருப்பவன் உயிர், சாகும்வரை உள்ள நோய்!

பொருள்: ஏவவும்-சொல்லவும்; செய்கலான்-செய்யான்; தான்-தான்; தேறான்-அறியமாட்டான்; அவ்வுயிர்-அந்த உயிர்; போஒம்-நீங்கும்; அளவும்-வரையும்; ஓர்-ஒரு; நோய்-பிணி(போன்றது), துன்பம்.

Kural: Advised, he heeds not; of himself knows nothing wise;

This man’s whole life is all one plague until he dies.

Explanation: A fool will not perform his duties even when advised nor ascertain them himself; such a soul is a burden (to the earth) till it departs (from the body).

(ascertain: discover)

  1. காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தான்கண்ட வாறு.

விளக்கம்: அறிவில்லாதவனுக்கு அறிவுரை சொல்பவன் அறிவில்லாதவனாக மாறிவிடுவான்! அறிவில்லாதவன் அவனுக்குத் தெரிந்த அளவில் அறிவுடையவனாகத் தோன்றுவான்!

பொருள்: காணாதான்- புல்லறிவாளன், அறியாதான்; காட்டுவான்-அறிவிக்கப் புகுகின்றவன்; காணான்-அறியான்; காணாதான் – அறிவுக் குறையுடையவன்; கண்டானாம்-அறிந்தானாம்; தான்-தான்; கண்டவாறு-அறிந்தபடி.

Kural: That man is blind to eyes that will not see who knowledge shows;-

The blind man still in his blind fashion knows.

Explanation: One who would teach a fool will (simply) becomes a fool; and the fool would (still) think himself “wise in his own conceit”. (conceit: excessive pride)

இகல்

  1. இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்.

விளக்கம்: துன்பத்தில் மனக்கசப்பு என்னும் மோசமான துன்பம் மறைந்தால் , இன்பத்தில் சிறந்த இன்பம் பெறலாம் .

பொருள்: இன்பத்துள்-மகிழ்ச்சியுள்; இன்பம்-மகிழ்ச்சி; பயக்கும்-உண்டாக்கும், பயன்தரும்; இகல்-மாறுபாடு; என்னும்-என்கின்ற; துன்பத்துள்-துயரத்துள்; துன்பம்-துயரம்; கெடின்-இல்லையாயின்.

Kural: Joy of joys abundant grows,

When malice dies that woe of woes.

Explanation: If hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delight. (yield: produce/provide)

குடிமை

  1. அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்

குன்றுவ செய்தல் இலர்.

விளக்கம்: கோடிப்பொருள் அடுக்கிக் கொடுத்தாலும், ஒழுக்கமான குடியில் பிறந்தவர், தவறு செய்வதில்லை .

பொருள்: அடுக்கிய-அடுக்கடுக்காக; கோடி-கோடி அளவினதாகிய பொருள்; பெறினும்-அடைந்தாலும். குடி-உயர்ந்த மரபு; பிறந்தார்-தோன்றியவர்; குன்றுவ-கீழான செயல்கள்; செய்தல்-இயற்றல்; இலர்-இல்லாதவர்.

Kural: Millions on millions piled would never win

The men of noble race to soul-degrading sin.

Explanation: Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming. (immense: extremely large/great, unbecoming: inappropriate)

சான்றாண்மை

  1. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ(டு)

ஐந்துசால்பு ஊன்றிய தூண்.

அணிஏகதேச உருவக அணி

விளக்கம்: பிறரிடம் அன்பும் பழிக்கு நாணுதலும் அனைவரிடமும் இணக்கமும் இரக்கமும் உண்மையும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள்!

பொருள்: அன்பு – தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று; நேயம், அருள், கருணை,பக்தி,நேசம், நாண் – வெட்கம்; ஒப்புரவு – உலகநடை, கண்ணோட்டம் – கண்பார்வை (Glance, look, vision), , இரக்கம், கடைக்கண்பார்வை, அருள்காட்டுதல்; பார்வையிடுதல். வாய்மையொடு – வாய்மை – உண்மை; குணங்களும், சால்பு – மேன்மை; நற்குணம்; சான்றாண்மை;

ஊன்றிய – (வி)வேரூன்று;இறுகப்பிடி, தூண் – தம்பம்; கட்டடத்தூண்; பற்றுக்கோடு

Kural: Love, modesty, beneficence, benignant grace,

With truth, are pillars five of perfect virtue’s resting-place.

Explanation: Affection, fear (of sin), benevolence, favour and truthfulness; these are the five pillars on which perfect goodness rests. (benevolence: kindness)

  1. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்

மாற்றாரை மாற்றும் படை.

விளக்கம்: செயல் செய்பவரின் ஆற்றல், பணிவுடன் நடத்தல். அதுவே சான்றோர்க்குப் பகைவரையும் நட்பாக்கும் கருவி.

Kural: Submission is the might of men of mighty acts; the sage

With that same weapon stills his foeman’s rage.

Explanation: Stooping (to inferiors) is the strength of those who can accomplish (an undertaking); and that is the weapon with which the great avert their foes. (stooping: lower oneself, accomplish: achieve)

  1. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)

ஆழி எனப்படு வார்.

விளக்கம்: ஊழிக்காலம் வந்தாலும் சான்றாண்மை என்னும் கடலுக்குக்

கரை போன்றவர் மாறமாட்டார்!

அணிஏகதேச உருவக அணி

பொருள்: ஊழி-அழிவுக்காலத்தால்; பெயரினும்-மாறுபட்டாலும்; தாம்-தாங்கள்; பெயரார்-மாறுபடமாட்டார்கள். சான்றாண்மைக்கு-நற்குணங்களை ஆளுமை செய்பவர்; ஆழி-கடல்,கடற்கரை; எனப்படுவார்-என்று சொல்லப்படுவார்.

Kural: Call them of perfect virtue’s sea the shore,

Who, though the fates should fail, fail not for evermore.

Explanation: Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change.

நாணுடைமை

  1. பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்

அறம்நாணத் தக்கது உடைத்து.

விளக்கம்: பிறர் வெட்கப்படும் பழிக்குக் காரணமாய் இருந்தும் தான் வெட்கப்படவில்லை என்றால், அறம் வெட்கப்பட்டு அவனை விட்டு விலகிப்போகும்.

Kural: Though know’st no shame, while all around asha med must be:

Virtue will shrink away ashamed of thee!.

Explanation: Virtue is likely to forsake him who shamelessly does what others are ashamed of. (virtue: behaviour showing high moral standards, forsake: leave)

உழவு

  1. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை.

விளக்கம்: பல தொழில்களால் இயங்கினாலும் உலகம் ஏருக்குப் பின்னாலேயே போகும்! அதனால் வருந்தி உழைத்தாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

பொருள்: சுழன்றும்-செய்து திரிந்தும்; ஏர்-ஏருடையார்; பின்னது-வழியது; உலகம்-உலகமக்கள். அதனால்-அதன் காரணமாக; உழன்றும்-துன்பம் துய்த்தும்; உழவே-பயிர்த்தொழிலே; தலை-முதன்மை.

Kural: However they roam, the world must follow still the plougher’s team;

Though toilsome, culture of the ground as noblest toil esteem.

Explanation: Agriculture, though laborious, is the most excellent form of labour; for people, though they go about in search of various employments, have at last to resort to the farmer. (laborious: hard)

  1. உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து.

விளக்கம்: மற்ற தொழில் செய்பவரையும் உழுபவரே தாங்கி நிற்பதால் அவரே உலகத்துக்கு அச்சாணி ஆவர்.

அணி – ஏகதேச உருவக அணி

Kural: The ploughers are the linch-pin of the world; they bear

Them up who other works perform, too weak its toils to share.

Explanation: Agriculturists are (as it were) the linchpin of the world for they support all other workers who cannot till the soil. (linchpin: vital/important)

ஒழுக்கமுடைமை

  1. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

விளக்கம்: ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பைத் தருவதால் அவ்வொழுக்கத்தை உயிரினும் மேலானதாகப் பேணிக் காக்க வேண்டும்.

பொருள்: ஒழுக்கம்-ஒழுக்கமுடைமை; விழுப்பம்-விழுமம், மேன்மை, சிறப்பு; தரலான்-கொடுப்பதால்; ஒழுக்கம்-நடத்தை; உயிரினும்-உயிரைக் காட்டிலும்; ஓம்பப்படும்-காப்பற்றத் தகும்

Kural: ‘Decorum’ gives especial excellence; with greater care

‘Decorum’ should men guard than life, which all men share

Explanation: Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life (Propriety: conformity to conventionally accepted standards of behaviour or morals/honesty, eminence-respect).

  1. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி.

விளக்கம்: ஒழுக்கமாக வாழும் எல்லாரும் மேன்மை அடைவர். ஒழுக்கம் தவறுபவர் அடையக்கூடாத பழிகளை அடைவர்.

பொருள்: ஒழுக்கத்தின்-ஒழுக்கத்தினால்; எய்துவர்-அடைவராவர்; மேன்மை-உயர்வு; இழுக்கத்தின்-தவறுதலால்; எய்துவர்-அடைவர்; எய்தா-அடைவதற்கு உரித்தல்லாத; பழி-பழிக்கப்படுதல்.

Kural: Tis source of dignity when ‘true decorum’ is preserved;

Who break ‘decorum’s’ rules endure e’en censures undeserved

Explanation: From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace (disgrace: shame, Propriety: conformity to conventionally accepted standards of behaviour or morals/honesty, impropriety: dishonesty)

  1. உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்.

விளக்கம்: உலகத்தோடு ஒத்து வாழக் கல்லாதார், பல நூல்களைக் கற்றாராயினும் அறிவு இல்லாதவரே எனக் கருதப்படுவார்.

பொருள்: உலகத்தோடு-உலகத்துடன்; ஒட்ட-பொருந்த; ஒழுகல்-நடந்து கொள்ளுதல்; பலகற்றும்-பலவற்றைக் கற்றுத் தேர்ந்திருந்தாலும்; கல்லார்-அறியார்; அறிவிலாதார்-அறிவில்லாதவர்கள்.

Kural: Who know not with the world in harmony to dwell,

May many things have learned, but nothing well

Explanation: Those who don’t know how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant (ignorant: lacking knowledge/uneducated)

மெய் உணர்தல்

  1. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

விளக்கம்: எந்தப் பொருள் எந்த இயல்பினதாகத் தோன்றினாலும் அந்தப் பொருளின் உண்மைப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

பொருள்: எப்பொருள்-எந்தப்பொருள்; எத்தன்மைத்து-எந்த இயல்புடையது; ஆயினும்-ஆனாலும்; அப்பொருள்-அந்தப் பொருள்; மெய்ப்பொருள்-உண்மைத்தன்மை; காண்பது-காணுதல்; அறிவு-உணர்வு.

Kural: Whatever thing, of whatsoever kind it be,

‘Tis wisdom’s part in each the very thing to see.

Explanation: True knowledge is the perception concerning everything of whatever kind, that that thing is the true thing. (perception: become aware of something through the senses)

  1. காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்

நாமம் கெடக்கெடும் நோய்.

விளக்கம்: ஆசை, சினம், அறியாமை என்ற மூன்றும் அழிந்தால் அவற்றால் வரும் துன்பமும் அழியும்.

பொருள்: காமம்-பெருவிருப்பம், ஆசை, விழைவு; வெகுளி-வெறுப்பு, சினம்; மயக்கம்-அறியாமை, அறிவு மயக்கம்; இவை-இப்பொருள்கள்; மூன்றன்-மூன்றினுடைய; நாமம்-பெயர்; கெட-அழிய; கெடும்-உளவாகா; நோய்-துன்பம்.

Kural: When lust and wrath and error’s triple tyranny is o’er,

Their very names for aye extinct, then pain shall be no more.

Explanation: If the very names of these three things, desire, anger, and confusion of mind, be destroyed, then will also perish the evils which flow from them. (perish-destroy)

பெரியாரைத் துணைக்கோடல்

  1. அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்.

விளக்கம்: கிடைத்தற்கரிய பேறுகளுள் எல்லாம் பெரும் பேறு பெரியோரைப் போற்றித் துணையாக்கிக் கொள்ளுதல் ஆகும்.

பொருள்: அரியவற்றுள்-அருமையான பேறுகளுள்; எல்லாம்-அனைத்தும்; அரிதே-அருமையானதே. பெரியாரை-பெருமையுடையவரை; பேணி-உவப்பன செய்து; தமரா-தமக்குச் சிறந்தாராக; கொளல்-கொள்க.

Kural: To cherish men of mighty soul, and make them all their own,

Of kingly treasures rare, as rarest gift is known.

Explanation: To cherish great men and make them his own, is the most difficult of all difficult things. (cherish-look after/adore)

  1. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்.

விளக்கம்: குற்றங் கண்டபொழுது இடித்துக் கூறும் பெரியாரைத் துணைக்கொள்ளாத பாதுகாப்பற்ற மன்னன், பகைவர் இன்றியும் தானே கெடுவான்.

பொருள்: இடிப்பாரை-கடிந்துரைப்பாரை, கழறுதற்கு உரியவரை; இல்லாத-இல்லாத; ஏமரா-காவலற்ற, பாதுகாப்பு இல்லாத, ஏமம் மருவாத; மன்னன்-நாட்டுத் தலைவன்; கெடுப்பார்-கேடு விளைப்பவர்; இலானும்-இல்லையாயினும்; கெடும்-அழியும்.

Kural: The king with none to censure him, bereft of safeguards all,

Though none his ruin work, shall surely ruined fall.

Explanation: The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him. (rebuke: criticize, perish: fall/end)

  1. பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்.

விளக்கம்: தானொருவனாக நின்று பலரோடு பகைமேற்கொள்வதைக் காட்டிலும் பல மடங்கு தீமையைத் தருவது நற்பண்புடையோரின் நட்பைக் கைவிடுதலாகும்.

பொருள்: பல்லார்-பலர்; பகை-பகைமை; கொளலின்-அடைவதைவிட; பத்து-பதிற்று; அடுத்த-மடங்கான; தீமைத்தே-தீங்குடையதே நல்லார்-பெரியார்; தொடர்-உறவு; கைவிடல்-ஏற்காதொழிதல்

Kural: Than hate of many foes incurred, works greater woe

Ten-fold, of worthy men the friendship to forego.

Explanation: It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of the many. (abandon: leave/dump, incur: experience/suffer)

கொடுங்கோன்மை

  1. வேலொடு நின்றான் இடுவென்றது போலும்

கோலொடு நின்றான் இரவு.

விளக்கம்: ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரி விதிப்பது, வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகரானதாக்கும்.

அணி: உவமையணி

பொருள்: வேலொடு-வேலுடன் (வேலாயுதத்துடன்); நின்றான்-நின்றவன்; இடு-தா; என்றது-என்று வேண்டுதல்; போலும்-போன்றது; கோலொடு – (ஆட்சிக்கோலை ஏந்தி)ஆட்சி அதிகாரத்தோடு; நின்றான்-நின்றவன்; இரவு-வேண்டுதல்.

Kural: As ‘Give’ the robber cries with lance uplift,

So kings with sceptred hand implore a gift.

Explanation: The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber who stands with a weapon in hand and says “give up your wealth”. (sceptre: an ornamented staff carried by rulers on ceremonial occasions as a symbol of sovereignty)

  1. நாள்தோறும் நாடி முறைசெய்யா மன்னவன்

நாள்தோறும் நாடு கெடும்.

விளக்கம்: தன் நாட்டில் நிகழும் நன்மை தீமைகளை ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து ஆட்சி செய்யாத மன்னவன், தன் நாட்டை நாள் தோறும் இழக்க நேரிடுவான்.

பொருள்: நாள்தொறும்-ஒவ்வொரு நாளும்; நாடி-ஆராய்ந்து; முறை-நீதி; செய்யா-இயற்றாத; மன்னவன்-ஆட்சியாளன்; நாள்தொறும்-நாளுக்கு நாள், (கொஞ்சம் கொஞ்சமாக); நாடு-நாடு; கெடும்-கெட்டுச்செல்லும்.

Kural: Who makes no daily search for wrongs, nor justly rules, that king

Doth day by day his realm to ruin bring.

Explanation: The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, will daily fall to ruin. (Ruin: broken down)

கண்ணோட்டம்

  1. பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்.

விளக்கம்: பாடலோடு பொருந்தவில்லையெனில் இசையால் என்ன பயன்? அது போலவே இரக்கம் இல்லாவிட்டால் கண்களால் என்ன பயன்?

அணி: எடுத்துக்காட்டு உவமையணி

பொருள்: பண்-இசை; என்னாம்-சொல்லோம்; பாடற்கு-பாடுதல் தொழிலோடு; இயைபு-பொருத்தம்; இன்றேல்-இல்லையாயின். கண்-விழி; என்னாம்-என்ன ஆகும்; கண்ணோட்டம்-இரக்கம்; இல்லாத-இல்லாத; கண்-இடத்து

Kural: Where not accordant with the song, what use of sounding chords?

What gain of eye that no benignant light affords?.

Explanation: Of what avail is a song if it be inconsistent with harmony? what is the use of eyes which possess no kindliness. (harmony: melodiousness, Kindliness: being gentle)

  1. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்

குரிமை உடைத்திவ் வுலகு.

விளக்கம்: நடுநிலையாகக் கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு இவ்வுலகமே உரிமை உடையதாகும்.

பொருள்: கருமம்-முறை செய்தல்; சிதையாமல்-அழியாமல்; கண்ணோட-இரக்கப்பட; வல்லார்க்கு-திறமையுடையவர்க்கு. உரிமை-உரியனாந்தன்மை; உடைத்து-உரிமையாகக் கொண்டது; இவ்வுலகு-இந்த உலகம்.

Kural: Who can benignant smile, yet leave no work undone;

By them as very own may all the earth be won.

Explanation: The world is theirs (kings) who are able to show kindness, without injury to their affairs (i.e) administration of justice.

  1. பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.

பொருள்: பெய-இட; கண்டும்-நோக்கியும்; நஞ்சு-நஞ்சு; உண்டு-உண்டு; அமைவர்-மேவுவர். நயத்தக்க-விரும்பத்தகுந்த; நாகரிகம்-கண்ணோட்டம்; வேண்டுபவர்-விரும்புபவர்.

விளக்கம்: விரும்பத் தகுந்த இரக்க இயல்பைக் கொண்டவர்கள். பிறர் நன்மை கருதித் தமக்கு நஞ்சைக் கொடுத்தாலும் அதனை உண்ணும் பண்பாளர் ஆவார்.

Kural: They drink with smiling grace, though poison interfused they see,

Who seek the praise of all-esteemed courtesy.

Explanation: Those who desire to cultivate that degree of urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly with them. (urbanity: dignity)

ஆள்வினை உடைமை

  1. அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.

விளக்கம்: ஒரு செயல் முடிப்பதற்கு இயவாதது என்று எண்ணிச் சோர்வு அடையாதிருக்க வேண்டும். அச்செயலை முயற்சியுடன் முடிப்பது பெருமை தரும்.

பொருள்: அருமை-எய்தற்கருமை; உடைத்து-உடையது; என்று-என்பதாக; அசாவாமை-அசந்து போகாமை (சோர்வடையாமை); வேண்டும்-தகும்; பெருமை-உயர்வு; முயற்சி-முயலுதல்; தரும்-உண்டாக்கும்.

Kural: Say not, ‘Tis hard’, in weak, desponding hour,

For strenuous effort gives prevailing power.

Explanation: Yield not to the feebleness which says, “this is too difficult to be done”; labour will give the greatness (of mind) which is necessary (to do it).

(feebleness: state of being weak)

  1. தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே

வேளாண்மை என்னும் செருக்கு.

விளக்கம்: விடாமுயற்சி என்ற உயர்பண்பு கொண்டவர்களால் தான் பிறருக்கு உதவுதல் என்ற உயர்ந்த நிலையை அடைய முடியும்.

பொருள்: தாளாண்மை-முயற்சி; என்னும்-என்கின்ற; தகைமைக்கண்-பெரும்பண்பின் இடத்து; தங்கிற்றே-நிலைபெற்றதே; வேளாண்மை-உதவி செய்தல்; என்னும்-என்கின்ற; செருக்கு-பெருமிதம்.

Kural: In strenuous effort doth reside

The power of helping others: noble pride

Explanation: The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts.

(lustre: brightness, munificence: extremely generous, laborious: requiring much work)

பகைமாட்சி

  1. அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்

என்பரியும் ஏதிலான் துப்பு.

விளக்கம்: சுற்றத்தாரிடம் ஒருவர் அன்பு இல்லாமலும் பொருந்திய துணை இல்லாமலும், வலிமையில்லாமலும் இருந்தால் அவர் எப்படிப் பகைவரின் வலிமையை எதிர்கொள்வார்?

பொருள்: அன்புஇலன்-அன்பு இல்லாதவன்; ஆன்ற-அமைந்த, வலிய; துணை-துணை, உதவி; இலன்-இல்லாதான்; தான் துவ்வான்-தான் வலியிலன்; என்-எங்ஙனம்; பரியும்-தொலைக்கும், நீக்கும்; ஏதிலான்-பகைவனது; துப்பு-வலிமை.

Kural: No kinsman’s love, no strength of friends has he;

How can he bear his foeman’s enmity?.

Explanation: How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe ?

(destitute: extremely poor, foe: enemy)

  1. அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்

தஞ்சம் எளியன் பகைக்கு.

விளக்கம்: மனத்தில் துணிவு இல்லாதவராய், அறிய வேண்டியவற்றை அறியாதவராய், பொருந்தும் பண்பு இல்லாதவராய், பிறர்க்குக் கொடுத்து உதவாதவராய் இருந்தால் எளிதில் பகைக்கு ஆட்பட நேரும்.

பொருள்: அஞ்சும்-நடுங்குபவன், அஞ்சுவான்; அறியான்-அறியமாட்டான்; அமைவு இலன்-பழகத்தெரியாதவன், பொருத்தம் இல்லாதான்; ஈகலான்-கொடுக்கமாட்டான்; தஞ்சம்-எளிமை; எளியன்-இளப்பமுடையவன்; பகைக்கு-பகைவர்களுக்கு.

Kural: A craven thing! knows nought, accords with none, gives nought away; To wrath of any foe he falls an easy prey.

Explanation: In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly. (foes: enemies, ignorant: uneducated, unsociable: unfriendly, niggardly: ungenerous with money)

குடிசெயல் வகை

  1. 138. ஆள்வினையும் ஆன்ற அறிவும் மெனவிரண்டின்

நீள்வினையால் நீளும் குடி.

விளக்கம்: விடாமுயற்சி, சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி உயர்ந்து விளங்கும்.

Kural: The manly act and knowledge full, when these combine

In deed prolonged, then lengthens out the race’s line.

Explanation: One’s family is raised by untiring perseverance in both effort and wise contrivances.

(Untiring: energetic, perseverance: determination, contrivances: tactics)

  1. 139. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு.

விளக்கம்: குற்றம் இல்லாமல் தன் குடிப்பெருமையை உயரச்செய்து வாழ்பவரை உலகத்தார் உறவாகக் கொண்டு போற்றுவர்.

Kural: With blameless life who seeks to build his race’s fame,

The world shall circle him, and kindred claim.

Explanation: People will eagerly seek the friendship of the prosperous soul who has raised his family without foul means. (prosperous: wealthy/rich, foul: dirty/evil)

நல்குரவு

  1. 140. இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்

இன்மையே இன்னா தது.

விளக்கம்: ஒருவருக்கு வறுமையை போன்று துன்பம் தருவது எது என்றால் அது வறுமையை ஆகும்.

அணி: சொற்பொருள் பின்வருநிலை அணி

Kural: You ask what sharper pain than poverty is known;

Nothing pains more than poverty, save poverty alone.

Explanation: There is nothing that afflicts a person like poverty. (afflicts: burden/trouble)

இரவு

  1. கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை

எல்லாம் ஒருங்கு கெடும்.

விளக்கம்: தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பம் தராத நல்லாரை காணின் வறுமையின் கொடுமை முழுதும் கெடும்.

Kural: It those you find from evil of ‘denial’ free,

At once all plague of poverty will flee.

Explanation: All the evil of begging will be removed at the sight of those who are far from the evil of refusing.

  1. இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்

உள்ளுள் உவப்ப துடைத்து.

விளக்கம்: இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளத்தின் உள்ளே மகிழ்ச்சி பொங்கும்

Kural: If men are found who give and no harsh words of scorn employ,

The minds of askers, through and through, will thrill with joy.

Explanation: Beggars rejoice exceedingly when they behold those who bestow their alms with kindness and courtesy.

(bestow: give, alms: charity like food or money, courtesy: politeness/good manners)

கயமை

  1. மக்களே போல்வர் கயவர் அவரன்ன

ஒப்பாரி யாம்கண்ட தில்

விளக்கம்: கயவர் மக்களைப் போலவே இருப்பர்; கயவர்க்கும் மக்களுக்கும் உள்ள தோற்ற ஒப்புமையை வேறெதிலும் நாம் கண்டதில்லை.

அணி: உவமையணி

Kural: The base resemble men in outward form, I ween;

But counterpart exact to them I’ve never seen.

Explanation: The base resemble men perfectly as regards form; and we have not seen such (exact) resemblance among any other species. (resemble: look alike)

  1. 144. தேவர் அனையர் கயவர் அவரும்தாம்

மேவன செய்தொழுக லான்.

விளக்கம்: தேவரும் கயவரும் ஒரு தன்மையர் எவ்வாறு எனில் தேவர்களை போலக் கயவர்களும் தாம் விரும்புவனவற்றைச் செய்து ஒழுகுவர்.

பொருள்: தேவர்-வானுலகில் வசிப்பவர்; அனையர்-ஒப்பர்; கயவர்-கீழோர்; அவரும்-முற்குறிப்பிட்டவரும்; தாம்-தாங்கள்; மேவன-விரும்பியவை; செய்து-இயற்றி; ஒழுகலான்-நடந்து கொள்ளுதலால்.

அணி: வஞ்சப் புகழ்ச்சி அணி

Kural: The base are as the Gods; they too

Do ever what they list to do!.

Explanation: The base resemble the Gods; for the base act as they like. (resemble: look alike)

  1. 145. சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ்.

விளக்கம்: ஒருவர் தம் குறையைச் சொல்வதைக் கேட்டவுடனேயே உதவிசெய்வர் சான்றோர், கரும்பைப் பிழிவது போல நெருக்கி பிழிந்தால் தான் பயன்படுவர் கயவர்.

அணி: உவமை அணி

Kural: The good to those will profit yield fair words who use;

The base, like sugar-cane, will profit those who bruise.

Explanation: The great bestow their alms as soon as they are informed; but the mean, like the sugar-cane, only when they are tortured to death. ((bestow: give, alms: charity like food or money, mean: bad)

அடக்கமுடைமை

  1. 146. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது.

விளக்கம்: நேர்வழி மாறாது அடக்கமாய் இருப்பவனின் உயர்வு, மலையின் மாண்பைக் காட்டிலும் பெரியது.

பொருள்: நிலையின்-தன் நிலையினின்று, வாழும் ஒழுக்கநெறியிலிருந்து; திரியாது-மாறாது, வேறுபடாமல்; அடங்கியான்-அடங்கினவன்; தோற்றம்-காட்சி; மலையினும்-மலையை விட, மலையைக் காட்டிலும்; மாண பெரிது-மிகப் பெரியது.

Kural: In his station, all unswerving, if man self subdue,

Greater he than mountain proudly rising to the view

Explanation: More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself (lofty: high, swerve: change/go off course)

  1. 147. யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

விளக்கம்: ஒருவர் எதைக் காக்காவிட்டாலும் நாவைக் காக்கவேண்டும். அவ்வாறு காக்காவிட்டால் சொல் குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவார்.

பொருள்: யா-எவை; காவார்-காக்கமாட்டார்; ஆயினும்-ஆனாலும்; நா-நாக்கு; காக்க- காத்துக்கொள்க, அடக்குக; காவாக்கால்-காப்பாற்றாவிட்டால், அடக்காவிட்டால்; சோகாப்பர்-துன்பம் உழப்பர்; சொல்-பேச்சு, மொழி; இழுக்கு-குற்றம்; பட்டு-உற்று.

Kural: Whate’er they fail to guard, o’er lips men guard should keep;

If not, through fault of tongue, they bitter tears shall weep

Explanation: Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue (unguarded: without protection, consequent: resulting, misery: unhappiness)

  1. 148. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு

விளக்கம்: தீயினால் சுட்ட புண்ணால் உடலில் வடு உண்டானாலும் உள்ளே ஆறிவிடும்; நாவினால் சுட்ட புண்ணால் உடலின் புறத்தே வடு உண்டாகாவிட்டாலும் உள்ளே ஆறாதே.

பொருள்: தீயினால்-நெருப்பால்; சுட்ட- சுட்ட (முதல் அடியில் உள்ள ‘சுட்ட’ நெருப்பினால் சுட்டதைக் குறிக்கும்); புண்-வடு; உள்-உள்ளுக்குள். ஆறும்-தீரும்; ஆறாதே-ஆறமாட்டாதே (மனக்கொதிப்பு ஆறாததைக் குறிக்கும்); நாவினால்-நாக்கினால்; சுட்ட-எரித்த (ஈற்றடியில் உள்ள ‘சுட்ட’ வெம்மையான மொழியால் சுட்டதைக் குறிக்கிறது); வடு-தழும்பு.

அணி : வேற்றுமை அணி

Kural: In flesh by fire inflamed, nature may thoroughly heal the sore;

In soul by tongue inflamed, the ulcer healeth never more

Explanation: The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal. (heal: cure)

ஒப்புரவறிதல்

  1. 149. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தல் பொருட்டு.

விளக்கம்: விடாமுயற்சி செய்து ஈட்டிய பொருளெல்லாம் தகுதியானவருக்கு உதவி செய்வதற்கே ஆகும்.

பொருள்: தாள் – முயற்சி; ஆற்றி – செய்து; தந்த – ஈட்டிய; பொருள் – சொத்து; எல்லாம் – அனைத்தும்; தக்கார்க்கு – தகுதியுடையவர்க்கு; வேளாண்மை – உதவி; செய்தற்பொருட்டு – செய்வதற்காக

Kural: The worthy say, when wealth rewards their toil-spent hours,

For uses of beneficence alone ’tis ours.

Explanation: All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence.

(acquired: obtained, perseverance: determination, benevolence: kindness)

  1. 150. ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்.

விளக்கம்: உயர்ந்தாரின் உலக நடைமுறையோடு ஒத்துப் போகிறவனே உயிர் வாழ்பவன். மற்றவன் செத்தவர்களுள் ஒருவனாகவே கருதப்படுவான்.

பொருள்: ஒத்தது-உலகநடை; அறிவான்-தெரிபவன்; உயிர்-உயிர்; வாழ்வான்-உயிரோடு கூடி வாழ்பவன்; மற்றையான்-பிறன்; செத்தாருள்-இறந்தவருள்; வைக்கப்படும்-கருதத்தகும்.

Kural: Who knows what’s human life’s befitting grace,

He lives; the rest ‘mongst dead men have their place.

Explanation: He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence). He who knows them not will be reckoned among the dead. (reckoned: considered)

  1. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

விளக்கம்: முயற்சி செய்தால் ஒருவர்க்குச் செல்வம் பெருகும். முயற்சி இல்லாவிட்டால் அவருக்கு வறுமையே வந்து சேரும்.

பொருள்: முயற்சி-முயலுதல்; (திரு-செல்வம்), திருவினை-செல்வத்தை; ஆக்கும்-உண்டாக்கும்; முயற்று-முயலுதல், உழைத்தல்; இன்மை-இல்லாதிருத்தல்; இன்மை-வறுமை; புகுத்திவிடும்-திண்ணமாக அடைவித்துவிடும்.

Kural: Effort brings fortune’s sure increase,

Its absence brings to nothingness.

Explanation: Labour will produce wealth; idleness will bring poverty. (idleness: laziness)

  1. பொறிஇன்மை யார்க்கும் பழி அன் றறிவறிந்

தாழ்வினை இன்மை பழி

விளக்கம்: ஐம்புலன்களில் ஏதேனும் குறையிருப்பினும் அது இழிவன்று. அறிய வேண்டியதை அறிந்து முயற்சி செய்யாததே இழிவாகும்.

பொருள்: பொறியின்மை- மெய் வாய் கண் மூக்கு செவி முதலிய உறுப்புகளில் குறைவுடைமை; யார்க்கும்-எவர்க்கும்; பழியன்று-குற்றமாகாது; அறிவறிந்து-அறிய வேண்டுவனவற்றை அறிந்து; ஆள்வினை-முயற்சி; இன்மை-இல்லாமை; பழி-குற்றம்.

Kural: ‘Tis no reproach unpropitious fate should ban;

But not to do man’s work is foul disgrace to man!.

Explanation: Adverse fate is no disgrace to anyone; to be without exertion and without knowing what should be known, is disgrace. (adverse: unfavourable/harmful, disgrace: shame, exertion: effort)

  1. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழா துஞற்று பவர்.

விளக்கம்: சோர்விலாது முயற்சி செய்வோர் செய்கின்ற செயலுக்கு இடையூறாக வரும் முன்வினையையும் தோற்கடித்து வெற்றியடைவர்.

பொருள்: ஊழையும்-விதியையும்; உப்பக்கம் காண்பர்-பக்கவாட்டில் காண்பர்; உலைவின்றி- உள்ளத்தில் சோர்வு இல்லாமல்; தாழாது-முயற்சியில் குறைவு இல்லாமல். காலம் தாழ்த்தாமல் எனவும் கொள்வர்; உஞற்றுபவர் -முயற்சிப்பவர்.

Kural: Who strive with undismayed, unfaltering mind,

At length shall leave opposing fate behind.

Explanation: They who labour on, without fear and without fainting will see even fate (put) behind their back (fainting: grow weak)

நன்றிஇல் செல்வம்

  1. 154. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய

கோடி உண்டாயின் இல்

விளக்கம்: பிறருக்குக் கொடுக்காமலும் தானும் அனுபவிக்காமலும் இருப்பவர் அடுக்கடுக்காய்ப் பல கோடிப் பொருள்கள் பெற்றிருந்தாலும் அதனால் பயன் இல்லை.

Kural: Amid accumulated millions they are poor,

Who nothing give and nought enjoy of all they store.

Explanation: Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches. (destitute: extremely poor, immense: great)

  1. 155. நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்

நச்சு மரம்பழுத் தற்று.

விளக்கம்: பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவர் பெற்ற செல்வம், ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றதாகும்.

அணி: உவமையணி

Kural: When he whom no man loves exults in great prosperity,

‘Tis as when fruits in midmost of the town some poisonous tree.

Explanation: The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town

அமைச்சு

  1. 156. கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

அருவினையும் மாண்ட தமைச்சு.

விளக்கம்: தொழில் செய்வதற்கு தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து அரிய செயலை செய்பவரே அமைச்சர் ஆவார்.

பொருள்: கருவியும்-கருவியும்; காலமும்-பருவமும்; செய்கையும்-செய்யும் வகையும்; செய்யும்-செய்யப்படும்; அருவினையும்-அரியதான (அரச)செயலையும்; மாண்டது-திருந்தவுடையது; அமைச்சு-அமைச்சு.

Kural: A minister is he who grasps, with wisdom large,

Means, time, work’s mode, and functions rare he must discharge.

Explanation: The minister is one who can make an excellent choice of means, time, manner of execution, and the difficult undertaking (itself).

  1. 157. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ

டைந்துடன் மாண்ட தமைச்சு

விளக்கம்: மனவலிமை, குடிகளை காத்தல், ஆட்சி முறைகளை கற்றல், நூல்களை கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சராவார்

பொருள்: வன்கண்-செயலில் உறுதியுடைமை; குடிகாத்தல்-குடிமக்களைப் பாதுகாத்தல்; கற்று-கல்விபெற்று; அறிதல்-அறிவுடைமையாதல்; ஆள்வினையோடு-முயற்சியோடு; ஐந்துடன்-ஐந்தோடு; மாண்டது-திருந்தவுடையது; அமைச்சு-அமைச்சு.

Kural: A minister must greatness own of guardian power, determined mind,

Learn’d wisdom, manly effort with the former five combined

Explanation: The minister is one who in addition to the aforesaid five things excels in the possession of firmness, protection of subjects, clearness by learning, and perseverance.

(aforesaid: denoting a thing or person previously mentioned, firmness: steady, perseverance: continue/carry on)

  1. 158. மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம்

யாவுள முன்நிற் பவை

விளக்கம்: இயற்கையான நுண்ணறிவும் நூலறிவும் உடைய அமைச்சர்களுக்கு முன், எந்த நுட்பமான சூழ்ச்சிகள் நிற்க முடியும்? (எந்த சூழ்ச்சியும் நிற்க இயலாது)

பொருள்: மதி-அறிவு; நுட்பம்-நுண்மை; நூலோடு-நூல்அறிவோடு; உடையார்க்கு-உடையவர்க்கு; அதி-மிகுதியான; நுட்பம்-நுட்பமுடைய (சூழ்ச்சிகள்); யா-எவை? உள-இருக்கின்றன; முன்-எதிரில்; நிற்பவை-நிற்கக்கூடியவை.

Kural: When native subtilty combines with sound scholastic lore,

‘Tis subtilty surpassing all, which nothing stands before.

Explanation: What contrivances are there so acute as to resist those who possess natural acuteness in addition to learning? (contrivances: tactics, acute: sharp)

  1. 159. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்

தியற்கை அறிந்து செயல்.

விளக்கம்: ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல்வழியாக அறிந்திருப்பினும், உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும்.

பொருள்: செயற்கை-செய்யுந்திறம்; அறிந்தக்கடைத்தும்-அறிந்தபோதும்; உலகத்து-உலகத்தினது; இயற்கை-தன்மை; அறிந்து-தெரிந்து; செயல்-செய்க

Kural: Though knowing all that books can teach, ’tis truest tact

To follow common sense of men in act.

Explanation: Though you are acquainted with the (theoretical) methods (of performing an act), understand the ways of the world and act accordingly. (acquainted: familiarized)

பொருள்செயல் வகை

  1. 160. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள்.

விளக்கம்: ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது செல்வம். அஃது அல்லாமல் உலகில் சிறந்த பொருள் வேறு இல்லை.

பொருள்: பொருள்அல்லவரை–மதிக்கப்படாதவரை, ஒரு பொருளாக மதிக்கப்படும் தகுதி இல்லாதாரை, குணத்தால் இழிந்தவர் போன்றோரை; பொருள்-மதிப்பு; ஆக-ஆகும்படி; செய்யும்-செய்யும்; பொருள்-செல்வம்; அல்லது-அல்லாமல்; இல்லை-இல்லை; பொருள்-பொருள்.

அணி: சொற்பொருள் பின்வருநிலை அணி

Kural: Nothing exists save wealth, that can

Change man of nought to worthy man.

Explanation: Besides wealth there is nothing that can change people of no importance into those of (some) importance.

  1. அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள்.

விளக்கம்: முறையறிந்து தீமையற்ற வழியில் சேர்த்த பொருள் ஒருவருக்கு அறத்தையும் தரும்; இன்பத்தையும் தரும்.

பொருள்: அறன்ஈனும்-அறத்தையும் தரும்; இன்பமும்ஈனும்-மகிழ்ச்சியும் கொடுக்கும்; திறன்-செய்திறன்; அறிந்து-தெரிந்து; தீதுஇன்றி-தீமை இல்லாமல்; வந்த-நேர்ந்த; பொருள்-செல்வம்.

Kural: Their wealth, who blameless means can use aright,

Is source of virtue and of choice delight.

Explanation: The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness. (yield: gain, foul: evil, virtue: goodness)

  1. அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்

புல்லார் புரள விடல்.

விளக்கம்: மற்றவர்களிடம் இரக்கமும் அன்பும் இல்லாமல் ஈட்டும் பொருளை ஏற்றுக்கொள்ளாமல் நீக்கி விட வேண்டும்.

பொருள்: அருளொடும்-அருளுடனும்; அன்பொடும்-அன்புடனும்; வாரா-வந்தடையாத; பொருள்-செல்வம்; ஆக்கம்-பெருக்கம்; புல்லார்-பொருந்தாதவராய், தக்கவைத்துக் கொள்ளாதவராய்; புரளவிடல்-கழியவிடுக.

Kural: Wealth gained by loss of love and grace,

Let man cast off from his embrace.

Explanation: Kings should rather avoid than seek the accumulation of wealth which does not flow in with mercy and love. (accumulation: collection)

  1. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்ற

றுண்டாகச் செய்வான் வினை.

விளக்கம்: தன் கைப்பொருளைக் கொண்டு ஒருவர் ஒரு செயலைச் செய்வது, மலைமேல் பாதுகாப்பாக நின்றுகொண்டு யானைப்போரைக் காண்பது போன்றது.

பொருள்: குன்று-சிறு மலை; ஏறி-ஏறி; யானை-யானை; வேழம்; போர்-சண்டை; கண்டு-பார்த்தல்; அற்றால்-அத்தன்மைத்து; தன்கைத்து ஒன்றுஉண்டாக- தனது (கைத்து-கை+அகத்து) கையகத்துப் பொருள் இருக்க, கையினிடத்தில் செல்வம் இருக்க; செய்வான்-செய்வானது; வினை-செயல்.

அணி: உவமை அணி

Kural: As one to view the strife of elephants who takes his stand,

On hill he’s climbed, is he who works with money in his hand.

Explanation: An undertaking of a task with own wealth in one’s hands is like viewing an elephant-fight from a hill-top.

  1. 164. செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

எஃகதனிற் கூரிய தில்.

விளக்கம்: ஒருவர் பொருளை ஈட்ட வேண்டும் அவருடைய பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதம் அதைவிட வேறு இல்லை

பொருள்: செய்க-உண்டாக்குக; பொருளை-செல்வத்தை; செறுநர்-பகைவர்; செருக்கு-தருக்கு, அகந்தை, பெருமிதம்; அறுக்கும்-ஒழிக்கும்; எஃகு-கருவி வகை; அதனின்-அது போல; கூரியது-கூர்மையானது; இல்-இல்லை.

Kural: Make money! Foeman’s insolence o’ergrown

To lop away no keener steel is known.

Explanation: Accumulate wealth; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than it.

(accumulate: collect)

கூடாநட்பு

  1. 165. தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

அழுதகண் ணீரும் அனைத்து.

விளக்கம்: பகைவரின் தொழுது நிற்கும் கையின் உள்ளும், கொலைக்கருவி மறைந்து இருக்கும். அது போல் அவர் அழுத கண்ணீரின் உள்ளும் வஞ்சகம் மறைந்து இருக்கும் என்பதை உணர வேண்டும்.

பொருள்: தொழுத-கும்பிட்ட; கை-கை; உள்ளும்-இடத்திலும்; படை-கொலைக்கருவி; ஒடுங்கும்-மறைந்திருக்கும்; ஒன்னார்-பகைவர்; அழுத-புலம்பிய; கண்ணீரும்-கண்களில் பெருகும் நீரும்; அனைத்து-அவ்வளவிற்று.

Kural: In hands that worship weapon ten hidden lies;

Such are the tears that fall from foeman’s eyes.

Explanation: A weapon may be hid in the very hands with which (one’s) foes adore (him) (and) the tears they shed are of the same nature.

(foes: enemies, adore: respect)

  1. 166. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கண் படின்.

விளக்கம்: பெருந்தகையாளனிடம் உள்ள செல்வம் தன் எல்லா உறுப்புகளையும் மருந்தாகத் தரும் மரத்தைப் போன்றது.

பொருள்: மருந்து-மருந்து; ஆகி-ஆய்; தப்பா-தவறாத; மரத்துஅற்று – மரம் போன்றது; ஆல்-(அசை); செல்வம்-பொருள் மிகுதி; பெரும்-பெரியதாகிய; தகையான்கண் – தன்மையுடையவனிடத்தில்; படின்-உண்டானால்.

அணி: உவமை அணி

Kural: Unfailing tree that healing balm distils from every part,

Is ample wealth that falls to him of large and noble heart.

Explanation: If wealth be in the possession of a man who has the great excellence (of benevolence), it is like a tree which as a medicine is an infallible cure for disease. (benevolence: kindness, infallible: error free)

புகழ்

  1. 167. ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

பொன்றாது நிற்பதொன்று இல்

விளக்கம்: இணையற்ற உயர்ந்த புகழைப்போல உலகத்தில் ஒப்பற்ற ஒன்றாக நிலைத்து நிற்பது வேறொன்றும் இல்லை.

பொருள்: ஒன்றா-இணையில்லாத; உலகத்து-உலகத்தில்; உயர்ந்த-ஓங்கிய; புகழ்-புகழ்; அல்லால்-அன்றி; பொன்றாது-அழியாது; நிற்பது-நிற்றல்; ஒன்று-ஒன்று; இல்-இல்லை..

Kural: Save praise alone that soars on high,

Nought lives on earth that shall not die

Explanation: There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness. (imperishable: everlasting, fame: popularity, exalted: superior, solitary: alone)

  1. 168. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.

விளக்கம்: தோன்றினால் புகழ் தரும் பண்புகளுடன் தோன்றுக! இல்லையெனில் தோன்றாமல் இருப்பதே நல்லது.

பொருள்: தோன்றின்-தோன்றும்பொழுது; புகழொடு-புகழ்நோக்கோடு; தோன்றுக-தோன்றுக; அஃது-அது(அந்நோக்கு); இலார்-இல்லாதவர்; தோன்றலின்-தோன்றுதலின்; தோன்றாமை-தோன்றாமல் இருத்தல்; நன்று-நன்மையுடையது.

Kural: If man you walk the stage, appear adorned with glory’s grace;

Save glorious you can shine, ’twere better hide your face

Explanation: If you are born in this world, be born with qualities conductive to fame. From those who are destitute of them it will be better not to be born (conductive: having the property of conducting something, fame: popularity, destitute: extremely poor/lack)

  1. 169. வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய

வாழ்வாரே வாழா தவர்.

விளக்கம்: பழியில்லாமல் வாழ்பவரே வாழ்பவர், புகழில்லாமல் வாழ்பவர் வாழாதவர்.

பொருள்: வசை-பழி; ஒழிய-உண்டாகாமல்; வாழ்வாரே-வாழ்கின்றவரே; வாழ்வார்-வாழ்பவர்; இசை-புகழ்; ஒழிய-நீங்க; வாழ்வாரே-வாழ்க்கை நடத்துபவரே வாழாதவர்-வாழாதவர்.

Kural: Who live without reproach, them living men we deem;

Who live without renown, live not, though living men they seem.

Explanation: Those live who live without disgrace. Those who live without fame live not.

(disgrace: dishonour, fame: honour)

தவம்

  1. 170. வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்

ஈண்டு முயலப் படும்.

விளக்கம்: விரும்பியதை விரும்பியவாறே பெற முடியும் என்பதால் செய்ய முடிந்த தவத்தை இங்கேயே முயன்று பார்க்கலாம்.

பொருள்: வேண்டிய-விரும்பியவை; வேண்டியஆங்கு-விரும்பியவாறு; எய்தலால்-பெறலாம் ஆதலால்; செய்தவம்-தவம்செய்தல்; ஈண்டு-இங்கேயே (இல்லறத்திலேயே); முயலப்படும்-முயற்சிக்கப்படும்

Kural: That what they wish may, as they wish, be won,

By men on earth are works of painful ‘penance’ done.

Explanation: Religious discipline is practised in this world, because it secures the attainment of whatever one may wish to enjoy in the world to come. (attainment: achievement)

  1. சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

விளக்கம்: புடமிடச் சுடுகையில் ஒளிவிடும் பொன்போலத் தவமிருப்பவரைத் துன்பம் வருத்த வருத்த ஞானம் வளரும்.

பொருள்: சுட-காய்ச்ச; சுடரும்-ஒளி வீசுகின்ற; பொன்-தங்கம்; போல்-போல்; ஒளிவிடும்-ஒளி மிகும்; துன்பம்-துயரம்; சுடச்சுட-வருத்த வருத்த; நோற்கிற்பவர்க்கு-நோன்பு இயற்றும் ஆற்றலுடையவர்க்கு.

அணி : உவமை அணி

Kural: The hotter glows the fining fire, the gold the brighter shines;

The pain of penitence, like fire, the soul of man refines.

Explanation: Just as gold is purified as heated in the fire, will those shine, who have endured the burning of pain (in frequent austerities). (Endured: go through, austerities: sternness or severity of manner)

நிலையாமை

  1. நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யப் படும்.

விளக்கம்: நாக்கு அடைத்து, விக்கல் வந்து, உயிர்க்கு இறுதி வருமுன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.

பொருள்: நா-நாக்கு; செற்று-அடக்கி; விக்குள்-விக்கல்; மேல்வாராமுன்-எழுவதற்கு முன்னே; நல்-நல்ல; வினை-செயல்; மேற்சென்று-தானே முற்பட்டு; செய்யப்படும்-செய்யத்தகும்.

Kural: Before the tongue lie powerless, ‘mid the gasp of gurgling breath,

Arouse thyself, and do good deeds beyond the power of death.

Explanation: Let virtuous deeds be done quickly, before the hiccup comes making the tongue silent.

(virtuous: good/moral)

  1. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு.

விளக்கம்: நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் நிலையாமைப் பெருமை உடையது இவ்வுலகம்!

பொருள்: நெருநல்-நேற்று; உளன்-உளனாயிருந்தான்; ஒருவன்-ஒருவன்; இன்று-இன்றைக்கு; இல்லை-இல்லை; என்னும்-என்கின்ற; பெருமை-பெருமை, நிலையாமை மிகுதி; உடைத்து-உடையது; இவ்வுலகு-இந்த உலகம்.

Kural: Existing yesterday, today to nothing hurled!-

Such greatness owns this transitory world.

Explanation: This world possesses the greatness that one who yesterday was is not today.

(possess : have)

  1. 174. ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப

கோடியும் அல்ல பல.

விளக்கம்: ஒருபொழுது கூட வாழ்வின் தன்மையைச் சிந்திக்காதவர்கள் என்னும் எண்ணங்கள் கோடி அல்ல இன்னும் அதிகம்.

பொருள்: ஒருபொழுதும்-ஒரு கணமும்; வாழ்வது-வாழ்தல்; அறியார்-அறியாதவர்; கருதுப-நினைப்பர்; கோடியும்-கோடியும்; அல்ல-அல்லாதவையாகிய; பல-பல.

Kural: Who know not if their happy lives shall last the day,

In fancies infinite beguile the hours away!.

Explanation: Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment. (unwise: foolish/silly)

துறவு

175. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்.

விளக்கம்: ஒருவன், எந்தெந்தப் பொருள்களிடமிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ அந்தந்தப் பொருட்களால் அவன் துன்பம் அடைவதில்லை.

பொருள்: யாதனின் யாதனின் – எந்த எந்தப் பொருள்களில்; நீங்கியான்-துறந்தவன்; நோதல்-வருந்துதல்; அதனின் அதனின்-அந்தந்த அளவு, அந்த அந்தப் பொருள்களினின்று; இலன்-இல்லாதான்.

Kural: From whatever, aye, whatever, man gets free,

From what, aye, from that, no more of pain hath he!.

Explanation: Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain. (renounced: give up)


Download the Thirukkural PDF & Notes of all the lasses from 6th, 7th, 8th, 9th, 10th, 11th & 12 Standard from the link that is provided below. 


Download THIIRUKKURAL PDF & NOTES – Veranda Race 


Download Tamil Nadu Samacheer Kalvi School Books for FREE here (500+ Books)