TNPSC Current Affairs – English & Tamil – July 11 & 12, 2021
TNPSC Current Affairs – English & Tamil – July 11 & 12, 2021
TNPSC Aspirants,
The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.
Check today’s TNPSC Daily Current Affairs(July 11 & 12, 2021) in this post.
Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.
To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.
Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – July 11 & 12, 2021
NATIONAL
1. Nitin Gadkari inaugurates India’s first private LNG plant in Nagpur
- Union Minister of Road Transport and Highways Nitin Gadkari inaugurated India’s first private LNG (Liquefied Natural Gas) plant in Nagpur. It has been set up by the Baidyanath Ayurvedic Group.
- LNG is a clean and cost-effective fuel.
1. இந்தியாவின் முதல் தனியார் எல்என்ஜி (LNG) ஆலையை நாக்பூரில் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்
- மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூரில் இந்தியாவின் முதல் தனியார் எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) ஆலையை தொடங்கி வைத்தார். இது பைத்யநாத் ஆயுர்வேத குழுவால் அமைக்கப்பட்டுள்ளது.
- எல்.என்.ஜி (LNG) ஒரு சுத்தமான மற்றும் செலவு குறைந்த எரிபொருள் ஆகும்.
INTERNATIONAL
2. Unity 22 of Virgin Galactic takes off to space
- Virgin Galactic’s first flight Unity 22, with a full crew, took off to space. Indian-origin Sirisha Bandla was a part of Virgin Galactic’s space flight.
- Virgin Galactic is a space company found by Richard Branson. The VSS Unity spacecraft will take off from New Mexico, carrying a full crew of Virgin Galactic’s employees.
- Sirisha Bandla will be the third Indian-origin woman after Kalpana Chawla and Sunitha Williams to travel into space.
2. விர்ஜின் கேலக்டிக்கின் யூனிட்டி 22 விண்கலம் விண்வெளிக்கு சென்றது
- விர்ஜின் கேலக்டிக்கின் யூனிட்டி 22 விண்கலம் ஒரு முழு குழுவினருடன் விண்வெளிக்கு புறப்பட்டது. விர்ஜின் கேலக்டிக்கின் விண்வெளி விமானத்தின் ஒரு பகுதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிரிஷ்ரா பாண்ட்லா இருந்தார்.
- விர்ஜின் கேலக்டிக் என்பது ரிச்சர்ட் பிரான்சனால் தொடங்கப்பட்ட ஒரு விண்வெளி நிறுவனம் ஆகும். வி.எஸ்.எஸ் யூனிட்டி விண்கலம், நியூ மெக்ஸிகோவில் இருந்து புறப்படும். விர்ஜின் கேலக்டிக் ஊழியர்களின் முழு குழுவினரையும் அந்த விண்கலம் சுமந்து செல்லும்.
- கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸுக்கு அடுத்தபடியாக விண்வெளிக்கு பயணம் செய்யும் மூன்றாவது இந்திய வம்சாவளி பெண் சிரிஷ்னா பந்த்லா ஆவார்.
APPOINTMENT
3. Vinay Prakash was appointed as the Resident Grievance Officer for Twitter India
- Twitter has named Vinay Prakash as its Resident Grievance Officer for India.
- It also released the India Transparency Report which is required to be published under India’s new IT rules.
3. ட்விட்டர் இந்தியாவுக்கான இந்தியாவில் வசிக்கும் குறைதீர் அதிகாரியாக வினய் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்
- இந்தியாவுக்கான இந்தியாவில் வசிக்கும் குறைதீர் அதிகாரியாக வினய் பிரகாஷை ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
- இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் வெளியிடப்பட வேண்டிய இந்தியா வெளிப்படை அறிக்கையையும் அது வெளியிட்டது.
SPORTS
4. Novak Djokovic wins his sixth Wimbledon Tennis title
- Novak Djokovic of Serbia won his sixth Wimbledon Tennis title. He beat Matteo Berrettini of Italy in the Wimbledon men’s singles final 2021.
- Djokovic has become the third player after Roger Federer and Rafael Nadal to win the 20 Grand Slam titles in men’s tennis singles history.
- Croatian pair Nikola Mektic and Mate Pavic have won the Wimbledon men’s doubles final 2021.
- Neal Skupski of Britain and Desirae Krawczyk of the US won the Wimbledon mixed doubles title They defeated the British duo of Joe Salisbury and Harriet Dart.
4. நோவக் ஜோகோவிச் தனது ஆறாவது விம்பிள்டன் டென்னிஸ் பட்டத்தை வென்றுள்ளார்
- செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தனது விம்பிள்டன் 2021 ஆறாவது விம்பிள்டன் டென்னிஸ் பட்டத்தை வென்றார். ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இத்தாலியின் மத்தேயோ பெர்ரெட்டினியை அவர் தோற்கடித்தார்.
- டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு வரலாற்றில் ரோஜர் ஃபெடரர் மற்றும் ரஃபேல் நடால் ஆகியோருக்கு அடுத்து 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற மூன்றாவது வீரரானார் ஜோகோவிச்.
- விம்பிள்டன் 2021 ஆண்கள் இரட்டையர் இறுதிப் போட்டியில் குரோஷிய ஜோடியான நிக்கோலா மெக்டிசி மற்றும் மேட் பாவ்சி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
- பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி மற்றும் அமெரிக்காவின் டெசிரே க்ராசிக் ஆகியோர் விம்பிள்டன் 2021 கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்றனர். அவர்கள் ஜோ சாலிஸ்பரி மற்றும் ஹாரியட் டார்ட் ஆகிய பிரிட்டிஷ் ஜோடியைத் தோற்கடித்தனர்.
5. Ashleigh Barty wins Wimbledon women’s singles title 2021
- Ashleigh Barty of Australia has won the Wimbledon women’s singles title 2021 defeating Karolina Pliskova of the Czech Republic.
- Elise Mertens of Belgium and Hsieh Su-Wei of Taiwan have clinched The Wimbledon women’s 2021 doubles title defeating Russian pair Veronika Kudermetova and Elena Vesnina.
5. விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் 2021 பட்டத்தை ஆஷ்லீ பார்ட்டி வென்றுள்ளார்
- ஆஸ்திரேலியாவின் ஆஷ்லீ பார்ட்டி, செக் குடியரசின் கரோலினா ப்ளிஸ்கோவாவை தோற்கடித்து 2021 விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.
- பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் மற்றும் தைவானின் ஹ்சிஹ் சு–வெய் ஆகியோர் ரஷ்ய ஜோடி வெரோனிகா குடெர்மெடோவா மற்றும் எலெனா வெஸ்னினாவை தோற்கடித்து விம்பிள்டன் பெண்கள் இரட்டையர் 2021 பட்டத்தை வென்றனர்.
6. Italy wins the UEFA European Championship 2020 after defeating England
- Italy won the UEFA European Championship 2020 for the second time by beating England in the penalty shootout.
- Luke Shaw scored the fastest goal in the European Championship final in 57 minutes.
- Portugal’s Cristiano Ronaldo finished as the top scorer at the UEFA European Championship 2020 with five goals.
- Cristiano Ronaldo was crowned as the Euro 2020 Golden Boot winner with five goals.
6. இங்கிலாந்தை தோற்கடித்து இத்தாலி UEFA ஐரோப்பிய சாம்பியன்ஷிப் 2020 பட்டத்தை வென்றது
- பெனால்டி ஷூட் அவுட்டில் இங்கிலாந்தை தோற்கடித்து இத்தாலி இரண்டாவது முறையாக UEFA ஐரோப்பிய 2020 சாம்பியன்ஷிப்பை வென்றது.
- ஐரோப்பிய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 1.57 நிமிடத்தில் லூக் ஷா மிக வேகமான கோலை அடித்தார்.
- போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐந்து கோல்களுடன் UEFA ஐரோப்பிய 2020 சாம்பியன்ஷிப்பில் அதிக கோல் அடித்த வீரரானார்.
- கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐந்து கோல்கள் அடித்து யூரோ 2020 தங்கக் காலணி விருது பெற்றார்.
7. Argentina wins the Copa America 2021 trophy
- Argentina won the Copa America 2021 trophy after defeating Brazil. This is Lionel Messi’s first major international trophy.
7. கோபா அமெரிக்கா 2021 கோப்பையை அர்ஜென்டினா வென்றது
- பிரேசிலை தோற்கடித்து அர்ஜென்டினா கோபா அமெரிக்கா 2021 கோப்பையை வென்றது. இது லியோனல் மெஸ்ஸியின் முதல் பெரிய சர்வதேச கோப்பையாகும்.
8. Indian-origin Samir Banerjee lifts Wimbledon Junior boys singles title 2021
- Indian-origin Samir Banerjee won the Wimbledon Junior boys singles title 2021.
- Ramanathan Krishnan was the first Indian to win the 1954 Junior Wimbledon championship. Ramesh Krishnan won the 1970 junior Wimbledon while Leander Paes won the 1990 junior Wimbledon.
8. 2021 விம்பிள்டன் ஜூனியர் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமீர் பானர்ஜி வென்றுள்ளார்
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமீர் பானர்ஜி 2021 விம்பிள்டன் ஜூனியர் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.
- 1954இல் ஜூனியர் விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் இந்தியர் இராமநாதன் கிருஷ்ணன் ஆவார். ரமேஷ் கிருஷ்ணன் 1970இல் ஜூனியர் விம்பிள்டன் பட்டத்தை வென்றார். லியாண்டர் பயஸ் 1990 ஜூனியர் விம்பிள்டன் பட்டத்தை வென்றார்.
IMPORTANT DAYS
9. World Population Day – 11 July
- World Population Day is observed annually on 11 July to draw attention towards the issues arising out of the rising population across the world.
- In 1990, the United Nations General Assembly (UNGA) decided to observe World Population Day on 11 July. This is organised by the Population Division of the United Nations Department of Economic and Social Affairs (DESA).
- Theme 2021: “The impact of the COVID-19 pandemic on fertility”
- The United Nations Population Fund (UNFPA), earlier known as the United Nations Fund for Population Activities and a population division was set up to plan programmes and coordinate and disseminate information about population control measures.
9. உலக மக்கள் தொகை தினம் – 11 ஜூலை
- உலகெங்கிலும் அதிகரித்து வரும் மக்கள் தொகையின் பிரச்சினைகள் குறித்து கவனத்தை ஈர்ப்பவதற்காக உலக மக்கள் தொகை தினம் ஆண்டுதோறும் 11 ஜூலை அன்று அனுசரிக்கப்படுகிறது.
- 1990ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) 11 ஜூலை அன்று உலக மக்கள் தொகை தினத்தை அனுசரிக்க முடிவு செய்தது. இது ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக அலுவல்கள் துறையின் மக்கள் தொகைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- கருப்பொருள் 2021: “கருவுறுதல் மீது கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம்”
- The United Nations Population Fund (UNFPA), earlier known as the United Nations Fund for Population Activities and a population division was set up to plan programmes and coordinate and disseminate information about population control measures.
- முன்னதாக, மக்கள் தொகை நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகள் நிதியம் என்று அழைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் (UNFPA), மக்கள் தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை ஒருங்கிணைத்து பரப்புவதற்கு திட்டமிட அமைக்கப்பட்டது.
10. Malala Day – 12 July
- United Nations declared 12 July, the birthday of Malala Yousafzai, as ‘Malala Day’ to honour the youngest Nobel laureate.
- She won the Nobel Peace Prize in 2014.
10. மலாலா தினம் – 12 ஜூலை
- மிக இளைய வயதில் நோபல் பரிசு பெற்ற மலாலா யூசஃப்சாயை கௌரவிக்கும் வகையில் அவரது பிறந்த நாளான 12 ஜூலையை ‘மலாலா தினம்’ஆக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
- அவர் 2014ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.
11. World Paper Bag Day – 12 July
- World Paper Bag Day is observed annually on 12 July to spread awareness about using paper bags instead of single-use plastics.
- Theme 2021: “Eradicate plastic and safeguard earth”
11. உலக காகித பை தினம் – 12 ஜூலை
- ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக காகித பைகளைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக உலக காகித பை தினம் ஆண்டுதோறும் 12 ஜூலை அன்று அனுசரிக்கப்படுகிறது.
- கருப்பொருள் 2021: “பிளாஸ்டிக் ஒழித்து பூமியை பாதுகாப்போம்“