TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 13, 2018
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 13, 2018
சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு செய்ய ‘பார்க்கர்’ விண்கலத்தை செலுத்தியது நாசா :
- சூரியனை மிக அருகில் இருந்து ஆய்வு செய்வதற்காக, புதிய ‘பார்க்கர்’விண்கலம் ஒன்றை நாசா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
- பூமியைப் போலவே வேற்றுக் கிரகங்களில் தண்ணீர், காற்று உள்ளதா, மனிதர்கள் உயிர் வாழும் சூழல் உள்ளதா என்ற ஆராய்ச்சியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.
- இதற்காக 1.5 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி). புளோரிடாவின் கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து ‘டெல்டா 4-ஹெவி ராக்கெட்’ மூலம் பார்க்கர் விண்கலம், உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 3.31 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சிட்சிபாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரபெல் நடால் :
- ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது.இந்நிலையில் ரோஜர்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் ரபெல் நடால், ஸ்டெபானோஸ் சிட்சிபாஸை எதிர்கொண்டார்.
- சுமார் ஒரு மணி 41 நிமிடங்கள் நீடித்த போட்டியில் ரபெல் நடால் 6-2, 7-6 (4) என்ற செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.
- இந்த வெற்றியின் மூலம் ரபெல் நடால் 4-வது முறையாக ரோஜர்ஸ் கோப்பையை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நைபால் காலமானார்:
- இலக்கியத்துக்காக நோபால் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர் நைபால் (வயது 85) லண்டனில் காலமானார்.
- 1971-ம் ஆண்டு ‘இன் ஏ ப்ரீ ஸ்டேட்’ என்ற புத்தகத்துக்கான அவருக்கு புக்கர் விருது வழங்கப்பட்டது.
- ‘ஏ ஹவுஸ் பார் மிஸ்டர் பிஸ்வாஸ்’ என்ற நைபாலின் புத்தகம் பெரும் வரவேற்பை பெற்றது.2001-ம் ஆண்டு நைபாலுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
முன்னாள் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்:
- முன்னாள் லோக் சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தன்னுடைய 89 வயதில் காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காட்சியைச் சேர்ந்த சோம்நாத் 14-வது மக்களவை சபாநாயகராக 2004-முதல் 2009-ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
இந்தியாவில் வாழ சிறந்த 10 இடங்களின் பட்டியல் வெளியிட்டார் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங்:
- இந்தியாவில் வாழ சிறந்த 10 இடங்களின் பட்டியலை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் வெளியிட்டுள்ளார்.
- புனே, நவி மும்பை, கிரேட்டர் மும்பை, திருப்பதி, சண்டிகர் உள்ளிட்ட இடங்கள் வாழ சிறந்த இடங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
- மேலும் தானே, ராய்ப்பூர், இந்தூர், விஜயவாடா, போபால் ஆகிய நகரங்களும் சிறந்த இடங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்தியா 2 வது லுனார் மிஷன் ‘சந்திரயான் -2′ துவக்க உள்ளது:
- வரும் 2019 ம் ஆண்டு ஜனவரி– மார்ச் மாத இடைவெளியில் சந்திராயன் -2 திட்டம் ஏவப்படும் என இஸ்ரோ சேர்மன் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
- அடுத்த மூன்று ஆண்டுகளில் இஸ்ரோ 50 செயற்கை கோள்கள் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டில் 22 செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளது.
- இது இஸ்ரோ வரலாற்றின் அதிகபட்ச அளவாக இருக்கும்.இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் டிஜிட்டல் இந்தியாவின் திட்டத்திற்கான ஜி.எஸ்.டி.ஏ. 29 செயற்கை கோள்களை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறினார்.
டாக்டர் மகேஷ் சர்மா, புது டில்லி ஐ.ஜி.சி.ஏ.யில் 3 புத்தகங்கள் வெளியிட்டார்:
- டாக்டர் மகேஷ் ஷர்மா கலாசார அமைச்சர் (Minister of state for Culture),இந்திரா காந்தி நேஷனல் சென்டர் ஃபார் தி ஆர்ட்ஸ்(Indira Gandhi National Centre for the Arts) – புது தில்லியில் ‘Jewellery’– டாக்டர் குலாப் கோத்தாரி, ‘Ghats of Banaras’– டாக்டர் சச்சினந்த் ஜோஷி மற்றும் ‘Untold Story of Broadcasting’– டாக்டர் கௌதம் சாட்டர்ஜி, ஆகிய 3 புத்தகங்களை வெளியிட்டார்.
கேள்விகள்
Q.1) சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு செய்யும் விண்கலத்தை செலுத்தியது நாசா. இந்த விண்கலத்தின் பெயர் என்ன ?
a) பார்க்கர்
b) ஜூனோ
c) ஓரியன்
d) மீர்
e) எதுவும் இல்லை
Q.2) ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார் ?
a) அன்றி முர்ரே
b) ரபெல் நடால்
c) ரோஜர் பெடெரெர்
d) நோவக் ஜோகோவிக்
e) சிட்சிபாஸ்
Q.3) நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நைபால் காலமானார்.இவர் எந்த துறையில் நோபல் பரிசு பெற்றவர் ஆவர் ?
a) வேதியல்
b) இயற்பியல்
c) இலக்கியம்
d) அமைதி
e) எதுவும் இல்லை
Q.4) டாக்டர் மகேஷ் ஷர்மா ‘Jewellery’,‘Ghats of Banaras’,‘Untold Story of Broadcasting’ ஆகிய 3 புத்தகங்களை எங்கு வெளியிட்டார்?
a) இண்டோர்
b) கொல்கத்தா
c) புது தில்லி
d) பெங்களூரு
e) கொச்சி
Q.5) டாக்டர் மகேஷ் ஷர்மா எந்த துறை சார்ந்த அமைச்சர் ஆவர் ?
a) Housing, Urban Affairs
b) Minister of state for Culture Environment, Forest and Climate Change
c) Ministry of Planning
d) Labor and Employment
e) Micro, Small and Medium Enterprises
TNPSC GROUP II – INTERVIEW POSTS NOTIFICATION Released
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 10, 2018
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 9, 2018
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 6, 2018