TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 31, 2018

UEFA-ன் சிறந்த வீரருக்கான விருதினை கால்பந்தாட்டவீரர் லூகா மாட்ரிக்பெற்றுள்ளார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 31, 2018

  • குரோஷியா மற்றும் ரியல் மாட்ரிட்அணியின் கால்பந்தாட்டவீரர் லூகா மாட்ரிக்” UEFA-ன் (ஐரோப்பிய கால்பந்து சங்கங்கள் கூட்டமைப்பு) ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதினை பெற்றுள்ளார்.
  • மேலும் இவர் FIFA உலக கோப்பை-2018ல் தங்க கால்பந்து விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

4 வது BIMSTEC உச்சி மாநாடு 2018 காத்மாண்டுவில் தொடங்குகிறது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 31, 2018

  • வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான், நேபாளம் ஆகிய நாடுகள் இணைந்து பிம்ஸ்டெக் கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன.
  • வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை இலக்காகக் கொண்ட இந்த 4வது மாநாடு நேபாளத்தில் இரண்டு நாள் நடக்கிறது.
  • இரு நாள் உச்சி மாநாடு பயங்கரவாதத்தை எதிர்த்து, சிக்கலான துறைகளில் ஒருங்கிணைந்து பணியாற்றவும், மற்றும் வர்த்தகத்தை உயர்த்துவதில் முக்கிய கவனம் செலுத்துகிறது.
  • ‘Towards a peaceful, prosperous and sustainable Bay of Bengal region’ என்பதே இதன் கருப்பொருள் ஆகும் .

2019-ன் இளையோர்  பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகளை வட கொரியா  நடத்த உள்ளது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 31, 2018

  • 2019-ன் ஆண்டின் ஆசிய இளைஞர் மற்றும் இளையோர்  பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகளை வட கொரியா  நடத்த உள்ளது.
  • இதற்கான ஒப்பந்தம் ஆசிய பளு தூக்கும் கூட்டமைப்பு மற்றும் வட கொரியாவின் விளையாட்டுதுறை அமைச்சர் கிம் குக் இடையே கையெழுத்தானது.

1- வது சார்க் அக்ரி கூட்டுறவு வணிக மன்றம் காத்மாண்டில் தொடங்குகிறது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 31, 2018

  • முதல் SAARC நாடுகளின் வேளாண் கூட்டுறவு வணிக மன்ற கூடுகை (Agriculture Cooperative Business Forum) காத்மாண்டு, நேபாளத்தில் துவங்கியுள்ளது.
  • Organizing and Strengthening Family Farmers’என்பதே இதன் கருப்பொருள் ஆகும் .

ஆசிய விளையாட்டு: 1500மீ ஓட்டத்தில் ஜான்ஸனுக்கு தங்கம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 31, 2018

  • ஜகார்த்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் ஜின்ஸன் ஜான்ஸன் தங்கப் பதக்கம் வென்றார்
  • இதன் மூலம் ஆசியப் போட்டியில் இந்தியவின் தங்க வேட்டை 12-ஆக உயர்ந்துள்ளது.

ஆசிய விளையாட்டு: மகளிர் 1500 மீ ஓட்டத்தில் இந்தியா வெண்கலம் :

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 31, 2018

  • மகளிர் 1500 மீ ஓட்டத்தில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற சித்ரா உன்னிகிருஷ்ணன் போட்டி தூரத்தை 4 நிமிடம் 12. 56 வினாடிகளில் கடந்து வெண்கலம் வென்றார்.
  • இதில், பக்ரைன் வீராங்கனைகள் தங்கம், வெள்ளி வென்றனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400×4 தொடர் ஓட்டத்தில் இந்திய மகளிர் அபாரம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 31, 2018

  • மகளிருக்கான 400×4 தொடர் ஓட்டத்தில் இந்திய மகளிர் சிறப்பாகச் செயல்பட்டு தங்கப்பதக்கத்தை வென்றனர்.
  • இந்திய அணியில் ஹிமா தாஸ், பூவம்பா ராஜு, விஸ்மயே கொரோத், சரிதாபென் கெய்க்வாட் ஆகிய வீராங்கனைகள் கொண்ட அணி பந்தைய தொலைவை 3 நிமிடங்கள் 28 வினாடிகள், 72 மைக்ரோ வினாடிகளில் கடந்து முதலிடத்தைப் பிடித்தனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை சீமா பூனியா வெண்கலம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 31, 2018

  • மகளிருக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை சீமா பூனியா வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். சீமா பூனியா 62.26 மீட்டர் தொலைவுக்கு வட்டு எறிந்து 3-வது இடத்தைப் பிடித்தார்.
  • முதலிடத்தைப் சீன வீராங்கனைகள்பிடித்தனர். சீனாவின் செங் யாங் 65.12 மீட்டர் எறிந்து தங்கத்தையும், பெங் பின் 64.25 மீட்டர் எறிந்து வெள்ளியையும் வென்றனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டி : ஆடவர் பாய்மர படகு போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம்

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 31, 2018

  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மேலும் ஒரு வெண்கலப்  பதக்கம் வென்றுள்ளது.
  • ஆடவர் பாய்மர படகு போட்டியில் வருண் அசோக், கணபதி செங்கப்பா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் 13 தங்கம், 21 வெள்ளி, 25 வெண்கலம் உள்ளிட்ட 59 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 8வது இடத்தில உள்ளது.

Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here 



TNUSRB Police SI (Finger Print) 2018 Notification – 202 Posts

NABARD DEVELOPMENT ASSISTANT RECRUITMENT 2018 : NOTIFICATION RELEASED


RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 30, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 29, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 28, 2018