TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 24,2018
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 24, 2018
ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்காட் மோரிசன் தேர்வு:
- ஆஸ்திரேலியாவின் 30-வது பிரதமராக ஸ்காட் மோரிசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- மோரிசன் இரகசிய வாக்குப்பதிவில் பீட்டர் டட்டனை 45 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார் இந்தியாவின் ஷர்துல் விஹான்
- 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான துப்பாக்கி சுடுதலில் டபுள் ட்ராப் பிரிவில் இந்தியாவின் ஷர்துல் விஹான் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- இதில் ஆடவருக்கான துப்பாக்கி சுடுதலில் டபுள் ட்ராப் பிரிவு இறுதி சுற்றில் 15 வயதான இந்திய வீரர் ஷர்துல் விஹான் 73 புள்ளிகள் குவித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- 34 வயதான கொரியாவின் ஷின் ஹைன்வோ 74 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், கத்தாரின் அல் மாரி ஹமாத் அலி 53 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு 6 வது தங்கம்
- ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் போபண்ணா –ஷரன் இணை தங்கப் பதக்கம் வென்றது.
- 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் நடைபெற்று வருகிறது.
- இதில் நடந்த ஆடவர் இரட்டையர் டென்னிஸ் பிரிவில், இந்தியாவின் போபண்ணா – ஷரன் இணை கஜகஸ்தான் இணையான பப்லில் – டெனிஸ் இணையை 6 – 3, 6 – 4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது.
- இதன் மூலம் இந்தியாவுக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆறாவது தங்கம் கிடைத்துள்ளது.
பெண்கள் கபடி போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்:
- ஆசிய விளையாட்டு பெண்கள் கபடி போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
- இறுதிப்போட்டியில் ஈரான் அணியிடம் 24-க்கு 27 என்ற புள்ளி கணக்கில் இந்தியா தோல்வி அடைந்தது.
- இந்தியா இதுவரை 6 தங்கம், 5 வெள்ளி, 13 வெண்கலம் என 24 பதக்கங்களை வென்றுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி 24 பதக்கங்களுடன் 7-வது இடத்தில் உள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டி: ஆடவர் 4 பேர் துடுப்பு படகு போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்
- ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவர் 4 பேர் துடுப்பு படகு போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
- இரட்டையர் பிரிவு போட்டியில் சவாண் சிங்க், பவன் டாட்டூ, ஓம் பிரகாஷ், சுக்மீட் சிங்க் இணை தங்கப்பதக்கத்தை வென்றது.
- ஆண்கள் ஒற்றையர் படகு போட்டியில் இந்திய வீரர் துஷ்யந்த் வெண்கலப்பதக்கம் வென்றார்.
- இரட்டையர் பிரிவு போட்டியில் ரோஹித்குமார், பகவான் சிங் இணை இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கத்தை வென்றது.