TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 31, 2018
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 31, 2018
UEFA-ன் சிறந்த வீரருக்கான விருதினை கால்பந்தாட்டவீரர் “லூகா மாட்ரிக்” பெற்றுள்ளார்:
- குரோஷியா மற்றும் ரியல் மாட்ரிட்அணியின் கால்பந்தாட்டவீரர் “லூகா மாட்ரிக்” UEFA-ன் (ஐரோப்பிய கால்பந்து சங்கங்கள் கூட்டமைப்பு) ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதினை பெற்றுள்ளார்.
- மேலும் இவர் FIFA உலக கோப்பை-2018ல் தங்க கால்பந்து விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
4 வது BIMSTEC உச்சி மாநாடு 2018 காத்மாண்டுவில் தொடங்குகிறது:
- வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான், நேபாளம் ஆகிய நாடுகள் இணைந்து பிம்ஸ்டெக் கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன.
- வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை இலக்காகக் கொண்ட இந்த 4வது மாநாடு நேபாளத்தில் இரண்டு நாள் நடக்கிறது.
- இரு நாள் உச்சி மாநாடு பயங்கரவாதத்தை எதிர்த்து, சிக்கலான துறைகளில் ஒருங்கிணைந்து பணியாற்றவும், மற்றும் வர்த்தகத்தை உயர்த்துவதில் முக்கிய கவனம் செலுத்துகிறது.
- ‘Towards a peaceful, prosperous and sustainable Bay of Bengal region’ என்பதே இதன் கருப்பொருள் ஆகும் .
2019-ன் இளையோர் பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகளை வட கொரியா நடத்த உள்ளது:
- 2019-ன் ஆண்டின் ஆசிய இளைஞர் மற்றும் இளையோர் பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகளை வட கொரியா நடத்த உள்ளது.
- இதற்கான ஒப்பந்தம் ஆசிய பளு தூக்கும் கூட்டமைப்பு மற்றும் வட கொரியாவின் விளையாட்டுதுறை அமைச்சர் கிம் குக் இடையே கையெழுத்தானது.
1- வது சார்க் அக்ரி கூட்டுறவு வணிக மன்றம் காத்மாண்டில் தொடங்குகிறது:
- முதல் SAARC நாடுகளின் வேளாண் கூட்டுறவு வணிக மன்ற கூடுகை (Agriculture Cooperative Business Forum) காத்மாண்டு, நேபாளத்தில் துவங்கியுள்ளது.
- ‘Organizing and Strengthening Family Farmers’– என்பதே இதன் கருப்பொருள் ஆகும் .
ஆசிய விளையாட்டு: 1500மீ ஓட்டத்தில் ஜான்ஸனுக்கு தங்கம்:
- ஜகார்த்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் ஜின்ஸன் ஜான்ஸன் தங்கப் பதக்கம் வென்றார்
- இதன் மூலம் ஆசியப் போட்டியில் இந்தியவின் தங்க வேட்டை 12-ஆக உயர்ந்துள்ளது.
ஆசிய விளையாட்டு: மகளிர் 1500 மீ ஓட்டத்தில் இந்தியா வெண்கலம் :
- மகளிர் 1500 மீ ஓட்டத்தில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற சித்ரா உன்னிகிருஷ்ணன் போட்டி தூரத்தை 4 நிமிடம் 12. 56 வினாடிகளில் கடந்து வெண்கலம் வென்றார்.
- இதில், பக்ரைன் வீராங்கனைகள் தங்கம், வெள்ளி வென்றனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400×4 தொடர் ஓட்டத்தில் இந்திய மகளிர் அபாரம்:
- மகளிருக்கான 400×4 தொடர் ஓட்டத்தில் இந்திய மகளிர் சிறப்பாகச் செயல்பட்டு தங்கப்பதக்கத்தை வென்றனர்.
- இந்திய அணியில் ஹிமா தாஸ், பூவம்பா ராஜு, விஸ்மயே கொரோத், சரிதாபென் கெய்க்வாட் ஆகிய வீராங்கனைகள் கொண்ட அணி பந்தைய தொலைவை 3 நிமிடங்கள் 28 வினாடிகள், 72 மைக்ரோ வினாடிகளில் கடந்து முதலிடத்தைப் பிடித்தனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை சீமா பூனியா வெண்கலம்:
- மகளிருக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை சீமா பூனியா வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். சீமா பூனியா 62.26 மீட்டர் தொலைவுக்கு வட்டு எறிந்து 3-வது இடத்தைப் பிடித்தார்.
- முதலிடத்தைப் சீன வீராங்கனைகள்பிடித்தனர். சீனாவின் செங் யாங் 65.12 மீட்டர் எறிந்து தங்கத்தையும், பெங் பின் 64.25 மீட்டர் எறிந்து வெள்ளியையும் வென்றனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டி : ஆடவர் பாய்மர படகு போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம்
- ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மேலும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
- ஆடவர் பாய்மர படகு போட்டியில் வருண் அசோக், கணபதி செங்கப்பா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
- ஆசிய விளையாட்டுப் போட்டியில் 13 தங்கம், 21 வெள்ளி, 25 வெண்கலம் உள்ளிட்ட 59 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 8வது இடத்தில உள்ளது.
Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here
TNUSRB Police SI (Finger Print) 2018 Notification – 202 Posts
NABARD DEVELOPMENT ASSISTANT RECRUITMENT 2018 : NOTIFICATION RELEASED
RELATED LINKS
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 30, 2018
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 29, 2018
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 28, 2018