TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 1, 2018

Dear TNPSC aspirants,

Since our group 2 exam is nearer its time for us to learn the current events in a crispy and detailed manner to come over all the upcoming Examinations.Here is the TNPSC Current Affairs in tamil which will be updated daily to stay updated with the current events daily.


2018 ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது:

“TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 1, 2018” is locked TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 1, 2018

  • ஜோம்ஸ் பி அலிசன் மற்றும் தசுக்கு ஹோன்ஜோ ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • புற்றுநோய் தொடர்பான மருத்துவ கண்டுபிடிப்பிற்காக இவர்கள் இருவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.
  • ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹாம் நகரில் 2018 ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.இவர்கள் இருவரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள்.

தென்கிழக்கு சீனாவில் 379 மீட்டர் நீளமுள்ள புதிய கண்ணாடிப் பாலம் திறப்பு:

“TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 1, 2018” is locked TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 1, 2018

  • தென்கிழக்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஃபோஷான் நகரில் உள்ள நந்தன் மலைப்பகுதியில் கட்டப்பட்ட 379 மீட்டர் நீளமுள்ள கண்ணாடிப் பாலம், செப்டம்பர் 28-ம் தேதியன்று பாதுகாப்பு சோதனைக்குப் பின்னர் திறக்கப்பட்டது.
  • இந்த கண்ணாடி பாலம், தரையிலிருந்து 202 மீட்டர் இடைவெளியில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
  • புதுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒலி மற்றும் காட்சி விளைவுகளை உருவாக்கும் வண்ணம் இந்த பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொரியா ஓபன் பேட்மின்டன் சோவ், ஓகுஹரா சாம்பியன்:

“TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 1, 2018” is locked TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 1, 2018

  • கொரியா ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தைவான் வீரர் சோவ் டியன் சென், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நஸோமி ஓகுஹரா சாம்பியன் பட்டம் வென்றனர்.
  • இந்தோனேசியாவின் டாமி சுகியர்டோவுடன் பைனலில் மோதிய சோவ் 21-13, 21-16 என்ற நேர் செட்களில் வென்றார். மகளிர் ஒற்றையர் பைனலில் நஸோமி ஓகுஹரா அமெரிக்காவின் பெய்வன் ஸாங்கை வீழ்த்தினார்.

ரஷ்ய கிராண்ட் பிரீ பார்முலா 1 ஹாமில்டன் சாம்பியன்:

“TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 1, 2018” is locked TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 1, 2018

  • ரஷ்ய கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.
  • சோச்சி நகரில் நேற்று நடந்த விறுவிறுப்பான பந்தயத்தில், சக வீரர் வால்டெரி போட்டாஸ் பெருந்தன்மையோடு ஒதுங்கி வழிவிட, ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.
  • அவர் பந்தய தூரத்தை 1 மணி, 27 நிமிடம், 25.181 விநாடியில் கடந்தார். போட்டாஸ் (+2.545 விநாடி) 2வது இடமும், பெராரி அணியின் செபாஸ்டியன் வெட்டல் (+7.487 விநாடி) 3வது இடமும் பிடித்தனர்.
  • இதுவரை நடந்துள்ள 16 போட்டிகளின் முடிவில் ஹாமில்டன் 306 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

உலக வில்வித்தை தொடரில் தீபிகாவுக்கு வெண்கலம்:

“TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 1, 2018” is locked TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 1, 2018

  • துருக்கியில் நடைபெற்ற உலக வில்வித்தை பைனல் தொடரின் மகளிர் ரீகர்வ் பிரிவில், இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • ஜெர்மனியின் லிசா உன்ருஹுடன் மோதிய தீபிகா, 5 செட் முடிவில் 5-5 என சமநிலை நிலவியதால் ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டதில் வெற்றியை வசப்படுத்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
  • ஆண்கள் காம்பவுண்ட் பிரிவில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா வெண்கலம் வென்றார்.

சர்வதேச முதியோர் தினம்: October 1

“TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 1, 2018” is locked TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 1, 2018

  • வயதான நபர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்கும் அவர்களது வாழ்க்கையை பாதிக்கும் பிரச்சினைகளை ஆராய்வதற்கும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 அன்று முதியோரின் சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது
  • Celebrating Older Human Rights champions” என்பதே இதன் கருப்பொருள் ஆகும்.

30 செப்டம்பர் : சர்வதேச மொழிபெயர்ப்பு நாள்

“TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 1, 2018” is locked TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 1, 2018

  • 30 செப்டம்பர் அன்று மொழிபெயர்ப்பாளர்களின் பாதுகாவலர் என கருதப்படும் பைபிள் மொழிபெயர்ப்பாளரான செயின்ட் ஜெரோம் நினைவாக சர்வதேச மொழிபெயர்ப்பு நாள்(International Translation Day) காணப்படுகிறது.
  • சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்திற்கான தீம் 2018 – “Translation: promoting cultural heritage in changing times”.

 TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – OCTOBER 1, 2018


Click on the link given below to watch the TNPSC Current Affairs – September 29, 2018



Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here 



IBPS CLERK 2018 – PREFERENCE ORDER – TAMIL NADU

IBPS RRB PO MAINS EXAM 2018 REVIEW, ANALYSIS AND QUESTIONS ASKED IN EXAM – September 30, 2018


RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 29 , 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL –SEPTEMBER 28, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 27 , 2018