TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 17, 2018

சிங்கப்பூர் கிராண்ட் பிரீ ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 17, 2018

  • சிங்கப்பூர் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணி நட்சத்திர வீரர் லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.
  • நடப்பு சீசனின் 15வது பந்தயமான இதில் அபாரமாக செயல்பட்ட ஹாமில்டன் 1 மணி, 51 நிமிடம், 11.611 விநாடியில் 61 சுற்றுகளை பூர்த்தி செய்து முதலிடம் பிடித்தார். அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தன.
  • ரெட் புல் ரேசிங் வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (+8.961 விநாடி) 2வது இடமும், பெராரி அணியின் செபாஸ்டியன் வெட்டல் (+39.945 விநாடி) 3வது இடமும் பிடித்தனர்.

சூடானின் புதிய பிரதமரானார் Moutaz Mousa Abdallah:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 17, 2018

  • சூடானின் புதிய பிரதம மந்திரி ஆனார் Mautaz Mousa Abdallah.கார்ட்டூமில் ஜனாதிபதி அரண்மனையில் 21 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது.

 கென்யாவின் கிப்சோகே மராத்தான் உலக சாதனை படைத்தார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 17, 2018

  • கென்யன் எலியட் கிபோகேவ் பேர்லினில் (ஜெர்மனி) ஒரு புதிய மராத்தான் உலக சாதனையை அமைத்தார்.அவர் 2 மணிநேர 1 நிமிடம் 39 வினாடிகளில் முந்தைய சாதனையை முறியடித்தார்
  • 2013 ஆம் ஆண்டில் ஹாம்பர்க்கில் அறிமுகமானதில் இருந்து கிபோகோ மராத்தான் பந்தயத்தில் ஆதிக்கம் செலுத்தியுள்ளார்.
  • எதியோப்பியன் ருடி அகா இரண்டாவது மற்றும் அவரது நாட்டுத் திருநெஷ் திபாபா மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.

பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டம் 2014:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 17, 2018

  • பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டம் 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.
  • இத்திட்டத்தில் வங்கிக் கணக்கு தொடங்கியவர்களுக்கு ரூபே டெபிட் கார்டும் ரூ. 1 லட்சத்துக்கான விபத்து காப்பீடும் வழங்கப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்டு 6 மாதங் களுக்குப் பிறகு ஓடி வசதி ரூ. 5 ஆயிரத்துக்கு வழங்கப்பட்டது.
  • ஆகஸ்ட் 15, 2018 – ஜனதன் யோஜ்னாதிட்டத்தின் இரண்டாவது கட்டம் தொடங்கப்பட்டது.ஜன்தன் யோஜ்னா ஆகஸ்ட் 28 2014ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா திட்டத்தில் 20 லட்சம் பேர் புதிதாக இணைந்துள்ளனர். இதன் மூலம் இத்திட்டத்தில் சேர்ந் தவர்களின் எண்ணிக்கை 32.61 கோடியாக உயர்ந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித் துள்ளது.

குத்துச்சண்டை போட்டி யில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 17, 2018

  • போல்ந்து நாட்டில் உள்ள கிளிவிஸ் நகரில் மகளிருக்கான 13-வது சில்சியன் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.
  • இதில் 48 கிலோ எடைப் பிரிவில் களமிறங்கிய இந்தியாவின் மேரி கோம் இறுதி சுற்றில் 5-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அகிரிம் கஸனாயேவாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
  • இந்த ஆண்டில் மேரி கோம் வெல்லும் 3-வது தங்கப் பதக்கம் இதுவாகும்.

துருக்கியின் அஹ்மத் கோமெர்ட் குத்துச்சண்டையில் சிம்ரன்ஜித் கவுர் தங்கப் பதக்கம் வென்றார்:

  • துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற அஹ்மத் கோமெர்ட் குத்துச்சண்டை தொடரில் மகளிருக்கான 64 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் இறுதி சுற்றில் துருக்கியின் சீமா கலிஸ்கானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென் றார்.
  • இதேபோல் 48 கிலோ எடைப் பிரிவு இறுதி போட்டியில் இந்தியா வின் மோனிகா, துருக்கியின் அயீஸ் காகரேரையும் 81 கிலோ எடைப் பிரிவில் பாக்யபதி கச்சாரி, துருக்கியின் செல்மா கரகோயுனையும் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றனர்.51 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பிங்கி ஜங்கரா வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

ஹாக்கியில் ஐஓசி சாம்பியன் :

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 17, 2018

  • அகில இந்திய அளவிலான 92-வது எம்சிசிமுருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வந்தது.
  • இதன் இறுதி போட்டியில் நேற்று ஐஓசிரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரிய அணிகள் மோதின. இதில் ஐஓசி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
  • அந்த அணி தரப்பில் ரோஷன் மின்ஸ், குர்ஜிந்தர் சிங், தல்விந்தர் சிங், பரத் சிக்ரா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். வெற்றி பெற்ற ஐஓசி அணிக்கு கோப்பையுடன் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 17, 2018


Click on the link given below to watch the TNPSC Current Affairs – September 12, 2018


Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here 



SSC Selection Posts 2018 : 1136 Vacancies – Notification Released

IBPS Clerk 2018 Notification : 7275 Vacancies


RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL –SEPTEMBER 15, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 14 , 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 12 , 2018