TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 14, 2018

அன்னதத்தா மவுல்யா சம்ரக்ஷன் யோஜ்னா : புதிய கொள்முதல் கொள்கை

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 14, 2018

  • எண்ணெய் வித்துகளின் விலையானது, குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட குறையும் சமயங்களில், விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக இருவேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

            1) விலை சரிவு ஈட்டு தொகை

            2) எண்ணெய் வித்துகளை மாநில அரசின் உதவியுடன் தனியார் கொள்முதல் செய்யும் திட்டம்.


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கோகாய் நியமனம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 14, 2018

  • உச்ச நீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம், வரும் 2ம் தேதியுடன் முடிவடைகிறது.
  • இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை மத்திய அரசின் பரிந்துரைப்படி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று நியமித்துள்ளார்.

ஜூனியர் ஆண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீரர் உதய்வீர் சித்து 587 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 14, 2018

  • 52–வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடந்து வருகிறது.
  • ஜூனியர் ஆண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தில் 16 வயதான இந்திய வீரர் உதய்வீர் சித்து 587 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
  • அமெரிக்க வீரர் ஹென்றி லிவெரெட் 584 புள்ளிகள் எடுத்து வெள்ளிப்பதக்கமும், தென்கொரியா வீரர் லீ ஜாக்யோன் 582 புள்ளிகள் திரட்டி வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

25 மீட்டர் பிஸ்டல் ஜூனியர் அணிகள் பிரிவிலும் இந்திய அணி முதலிடம் :

  • 25 மீட்டர் பிஸ்டல் ஜூனியர் அணிகள் பிரிவில் உதய்வீர் சித்து, விஜய்வீர் சித்து, ராஜ்கன்வார் சிங் சந்து ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,736 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
  • 1,730 புள்ளிகளுடன் சீனா அணி வெள்ளிப்பதக்கமும், 1,721 புள்ளிகளுடன் தென்கொரியா அணி வெண்கலப்பதக்கமும் வென்றன.
  • இந்த போட்டி தொடரில் இதுவரை இந்தியா 9 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கம் வென்று 4–வது இடத்தில் உள்ளது.

விண்வெளி ஆய்வு, அறிவியல் மற்றும் பயன்பாடு குறித்த இந்தியா – புருனே இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 14, 2018

  • பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
  • தில் இந்தியாவுக்கும் புருனே நாட்டுக்கும் இடையில் விண்வெளி ஆய்வு, அறிவியல், செயற்கைக்கோள் தகவல் தடமறிதல், தகவல் பெறுதல் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து விவரிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2018, ஜூலை 19ம் தேதி கையெழுத்தானது.
  • இந்த உடன்பாட்டின் மூலம் புருனே நாட்டுடனான ஒத்துழைப்பு இந்தியாவின் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தை இயக்கி, பராமரித்து விரிவுபடுத்துவதற்கும்  உதவும். இதன் மூலம் அனைத்துப் பகுதிகளும் பிரிவுகளும் பலன்பெறும்.

சுற்றுலா துறையில் உள்ள ஒத்துழைப்பை வலுபடுத்த இந்தியா மற்றும் மால்டா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 14, 2018

  • சுற்றுலா துறையில் உள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா மற்றும் மால்டா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மால்டா துணை அதிபர் இந்தியாவிற்கு வருகை தரும்போது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய குறிக்கோள்கள்:

  •  இரு நாடுகளிலும், சுற்றுலாத் துறையில் தரமான சுற்றுலாத் தளங்களை ஊக்குவித்தல்
  • இரு நாடுகளிலும், சுற்றுலா மற்றும் போக்குவரத்து துறைகளில் மனித வள மேம்பாட்டை ஊக்கப்படுத்துதல்
  • புதிய சுற்றுலா வாய்ப்புகளை உருவாக்குதல், குறிப்பாக இயற்கை, உணரக்கூடிய மற்றும் உணரமுடியாத கலாச்சார  பாரம்பரியங்களை ஊக்குவித்தல், நிலையான சுற்றுலாவை மேம்படுத்துதல், தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல்.
  • இரு நாட்டு மக்களிக்கிடையே உறவை வலுப்படுத்த சுற்றுலா நல்ல வழி என்பதை அங்கீகரித்தல்


சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் பழங்குடி சுற்றுலா சர்க்யூட் துவங்கியது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 14, 2018

  • சத்தீஸ்கரில் 13 சுற்றுலா தளங்களை இணைக்கும் நாட்டின் முதல் பழங்குடி வட்டார திட்டத்தை, மத்திய அமைச்சர் கே. ஜே. அல்போன்ஸ் துவக்கிவைத்தார் .இந்த திட்டம் சுற்றுலா அமைச்சகத்தால் ரூ. 99.21 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது .
  • திட்டமிடப்பட்ட மற்றும் முன்னுரிமை அடிப்படையில் நாட்டிலுள்ள கருப்பொருள்களை மேம்படுத்துவதற்காக 2014-15 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றுலா அமைச்சின் ஸ்வேட் டெர்ஷன் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

ஸ்வச்சதா ஹே சேவா இயக்கத்தைமோடி அறிவித்தார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 14, 2018

  • மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளைக் குறிக்க பிரதமர் நரேந்திர மோடி ஸ்வச்சாத ஹீ சேவா இயக்கம்அறிமுகப்படுத்தப்பட்டது.
  • பிரதமர் நரேந்திர மோடி ஸ்வச்சாத ஹீ சேவா இயக்கத்தை செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைக்கிறார். 2014 அக்டோபர்-2 தூய்மையே இந்தியா (ஸ்வாச் பாரத்) திட்டம் தொடங்கப்பட்டது.

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 14, 2018


Click on the link given below to watch the TNPSC Current Affairs – September 12, 2018



Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here 



SSC Selection Posts 2018 : 1136 Vacancies – Notification Released

IBPS Clerk 2018 Notification : 7275 Vacancies


RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 12 , 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL –SEPTEMBER 10, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 6 , 2018