TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 15, 2018

உலகின் தலைசிறந்த பொருளாதார மையம் நியூயார்க்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 15, 2018

  • உலகின் தலைசிறந்த பொருளாதார மையம் என்ற பெருமையை லண்டன் நகரத்திடம் இருந்து நியூயார்க் பறித்துள்ளது.
  • முதலீடுகளை ஈர்ப்பதில் உலகின் மிகப்பெரிய பொருளாதார மையமாக இருந்த லண்டன் தற்போது அந்த சிறப்பை நியூயார்க் நகரிடம் இழந்துள்ளது.
  • நிதி நிறுவனங்களின் அலுவலகங்கள், உள்கட்டமைப்பு, அதிகமான பணியாளர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
  • இதில், பொருளாதார பலம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை நியூயார்க் பிடித்துள்ளது. லண்டன் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மூன்றாம் இடத்தில் ஹாங்காங், நான்காம் இடத்தில் சிங்கப்பூர் இடம் பிடித்துள்ளன.

செப்டம்பர்-15- தேசிய பொறியாளர் தினம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 15, 2018

  • மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15 ம் தேதி பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
  • இவர் இந்திய திட்டமிடுதலின் தந்தை என்றழைக்கப்படுகிறார்.இவருக்கு 1955ம் ஆண்டு இந்திய அரசு பாரதரத்னா விருது வழங்கியுள்ளது.

செப்டம்பர் 15 – ஜனநாயகத்தின் சர்வதேச தினம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 15, 2018

  • ஜனநாயகத்தின் சர்வதேச தினம்(The International Day of Democracy) உலகளாவிய அளவில் செப்டம்பர் 15 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • உலகில் ஜனநாயகத்தின் நிலைமையை மதிப்பாய்வு செய்ய இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இதன் கருப்பொருள் ‘Democracy under Strain: Solutions for a Changing World’.

பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட்டை நாளை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 15, 2018

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி சி-42 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான பணிகளை கடந்த சில மாதங்களாக செய்து வந்தது.
  • இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் நிலப்பரப்பை ஆய்வு செய்யவும், புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்டவைகளின் பயன்பாட்டிற்காக நோவாசார் மற்றும் எஸ் 1-4 என்ற இரண்டு செயற்கைகோள்களை நாளை இரவு 10.07 மணிக்கு முதலாவது ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.
  • வணிக நோக்கத்துடன் இந்த இரண்டு செயற்கைகோள்களும் ஏவப்படுகிறது.நோவாசார் செயற்கைகோளானது காப்பு காடுகளின் அளவை கண்காணித்தல், புவி ஆய்வு, வெள்ளம் மற்றும் பேரிடர் கால கண்காணிப்பு, கப்பல், கடல்வழி போக்குவரத்தை கண்காணித்தல் ஆகிய பணிகளில் ஈடுபடுகிறது.

ஜீலன் கோஸ்வாமி :300 விக்கெட் கைப்பற்றிய முதல் வீரங்கனை

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 15, 2018

  • இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜீலன் கோஸ்வாமி சர்வதேச போட்டியில் 300 விக்கெட் கைப்பற்றிய முதல் வீரங்கனை என்ற பெருமையை பெற்றார்.

தென்கொரியாவின் முதல் நீர்மூழ்கி போர்க்கப்பல்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 15, 2018

  • தென் கொரியா அதன் முதல் ஏவுகணைத் திறன் கொண்ட டோசன் ஆன்சோங் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
  • £ 535 மில்லியன், 3,000 டன் டோசன் ஆன்சோங் நீர்மூழ்கிக் கப்பல் குரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை சுடும் திறன் கொண்டவை.

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 15, 2018


Click on the link given below to watch the TNPSC Current Affairs – September 12, 2018


Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here 



SSC Selection Posts 2018 : 1136 Vacancies – Notification Released

IBPS Clerk 2018 Notification : 7275 Vacancies


RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 14 , 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 12 , 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL –SEPTEMBER 10, 2018