TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 19, 2018

Dear TNPSC aspirants,

Since our group 2 exam is nearer its time for us to learn the current events in a crispy and detailed manner to come over all the upcoming Examinations.Here is the TNPSC Current Affairs in tamil which will be updated daily to stay updated with the current events daily.


உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் :

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 19, 2018

  • உத்தரபிரதேசத்தில் தனது தொகுதி யான வாரணாசியில் ரூ.550 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
  • பழைய காசி நகரத்துக்கான ஒருங்கிணைந்த மின் வளர்ச்சி திட்டம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மண்டல கண் மருத்துவ மையம், பச்சிளம் குழந்தைகளைக் கதகதப்பாக வைக்கும் ‘இன்குபேட்டர்’ மையம் உள்ளிட்ட திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
  • இந்தி மொழிக்கு தென்னிந்திய எழுத்தாளர்களின் பங்கு’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது.

UN levels and trends in child mortality 2018 அறிக்கை:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 19, 2018

  • .நா. நிலைகள் மற்றும் போக்குகள் குழந்தைகள் இறப்பு -2018 (UN levels and trends in child mortality 2018) அறிக்கைபடி, இந்தியாவில் 5 வயதிற்கு உட்பட்ட 80,2000 குழந்தைகள் 2017 ல் மரணமடைந்துள்ளார் என்றும் சராசரியாக உலகம் முழுவதும் 1000 க்கு 39 குழந்தைகள் 5 வயதிற்கு முன்னதாகவே இறந்து விடுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாநில மண்டல கவுன்சிலின் 28 வது கூட்டம் பெங்களூரில்  நடைபெற்றது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 19, 2018

  • தென் மாநில மண்டல கவுன்சிலின் 28 வது கூட்டம் மத்திய உள்துறை மந்திரி ஸ்ரீ ராஜ்நாத் சிங்கின் தலைமையின் கீழ் பெங்களூரில்  நடைபெற்றது.
  • 27 வது கூட்டம் திருவனந்தபுரத்தில்  நடைபெற்றது.
  • 29 வது கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.

சந்திரனுக்கு சுற்றுலா செல்ல உள்ள முதல் வாடிக்கையாளர்: SPACEX

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 19, 2018

  • அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், முதல்முறையாக வர்த்தக ரீதியாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தில் ஜப்பானிய பில்லியனரான யூசுக்கு மேசவாவை அனுப்ப உள்ளது .
  • இதற்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பிரத்தியேகமாக பிக் பால்கான் எனும் ராக்கெட்டை வடிவமைத்து அதில் மனிதர்களை அனுப்ப உள்ளது.
  • இந்த பிக் பால்கான் உலகிலேயே மிகப்பெரிய ராக்கெட்டாகும் புறப்படும் போது செங்குத்தாகவும், திரும்பி வரும் போது விமானம் போல் தரையிறங்கி மீண்டும் பயன்படுத்தும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது.

முதல் விண்வெளி தொழில்நுட்ப அடைவு மையம்” : அகர்தலா

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 19, 2018

  • திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேவ் இஸ்ரோவின் முதல் விண்வெளி தொழில்நுட்ப ஊடுருவல் மையத்தை திறந்து வைத்தார்.
  • திரிபுரா தலைநகரான அகர்தலாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனதின் (ISRO) முதல் விண்வெளி தொழில்நுட்ப அடைவு மையம் (space technology incubation centre) துவங்கப்பட்டுள்ளது.

2022 ஆசிய பரா விளையாட்டுகளை வழங்குகின்றது Hangzhou:

  • சீனாவில் ஹாங்காங் 2022 ஆம் ஆண்டில் ஆசியப் போட்டிகளின் நான்காவது பதிப்பை வழங்குகின்றது என்று ஆசிய பாராலிம்பிக் குழு (APC) உறுதிப்படுத்தியது.

திறன் இந்தியாதூதர்களாக வருண், அனுஷ்கா ஒப்பந்தம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 19, 2018

  • திறன் இந்தியாதிட்டத்தின் துாதர்களாக, பாலிவுட் பிரபலங்கள், வருண், அனுஷ்கா சர்மா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளனர்.
  • திறமையான கலைஞர் களையும், தொழில் முனைவோரையும் ஊக்குவிக்கும் நோக்கில், திறன் இந்தியா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்திஉள்ளது.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம்: ‘பசுமை சான்றிதழ்‘-

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 19, 2018

  • சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் சிவப்பு செங்கல் கட்டமைப்பு பசுமை சான்றிதழ்‘- பெற்றுள்ளது.
  • இதன்மூலம் தெற்கு ரயில்வே மண்டலத்தில் பசுமை கட்டிடம் சான்றிதழை பெற்ற முதல் ரயில் நிலையம் எனும் பெருமையினை பெற்றுள்ளது.

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 19, 2018


Click on the link given below to watch the TNPSC Current Affairs – September 18, 2018



Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here 



IBPS CLERK 2018 – PREFERENCE ORDER – TAMIL NADU

IBPS Clerk 2018 Notification : 7275 Vacancies


RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 18 , 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 17 , 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL –SEPTEMBER 15, 2018