TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 25, 2018

Dear TNPSC aspirants,

Since our group 2 exam is nearer its time for us to learn the current events in a crispy and detailed manner to come over all the upcoming Examinations.Here is the TNPSC Current Affairs in tamil which will be updated daily to stay updated with the current events daily.


அம்ருத் திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா முதலிடம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 25, 2018

  • அம்ருத் திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய வீட்டு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • ஆந்திரா, ஒடிசா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
  • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை தொடர்ந்து நாடு முழுவதும் அம்ருத் திட்டத்தின் கீழ் 500 நகரங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் சில நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சர்வதேச ஏர்போர்ட் கவுன்சில் அறிக்கை: இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையம் 16வது இடம்

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 25, 2018

  • சர்வதேச ஏர்போர்ட் கவுன்சில் அறிக்கைப்படி 2017ல் உலக அளவில் அதிக பயணிகளை கையாண்ட விமான நிலையங்கள் பட்டியலில் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையம் 16வது இடம் பெற்றுள்ளது.
  • முதலிடம்: ஹார்ட்ஸ்பீல்ட் ஜாக்சன் ஏர்போர்ட்USA

பிபா 2018-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக ‘குரோஷியாவின் லூகா மாட்ரிச்’ தேர்வு:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 25, 2018

  • 2018-ம் ஆண்டுக்கான பிபாவிந் சிறந்த கால்பந்து வீரராக குரோஷியாவின் லூகா மாட்ரித் சேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. பிரேசில் வீராங்கனை மார்டா 6-வது முறையாகச் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
  • மகளிர்பிரிவில் பிரேசில் வீராங்கனை மார்டா சிறந்த வீராங்கனைக்கான விருதைப் பெற்றார்.இந்த சீசனில் 32 கோல்கள்வரை அடித்த முகமது சலா அதிகமான கோல்கள் அடித்த வீரருக்கான புகாஸ் விருதைப் பெற்றார்.
  • சிறந்த கோல்கீப்பருக்கான கோல்டன் குளோவ் விருதை பெல்ஜியம் நாட்டு கோல்கீப்பர் திபாட் கோர்டியஸ் பெற்றார். பேர்ப்ளே வீரருக்கான விருதை ஜெர்மனி அணியின் பார்வேர்டு வீரர் லென்னார்ட் பெற்றார்.

மாலத்தீவு அதிபர் தேர்தலில் இப்ராகீம் வெற்றி:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 25, 2018

  • மாலத்தீவு அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் முகமது சோலிக் வெற்றி பெற்றார்.இதையடுத்து மாலத்தீவின் 7வது அதிபராக பதவியேற்க உள்ளார்.
  • தற்போதைய அதிபர் அப்துல்லா யமீன் படுதோல்வி அடைந்தார்.

பேஸ்புக் புதிய நிர்வாக இயக்குநராக அஜித் மோகன் நியமனம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 25, 2018

  • பேஸ்புக் நிறுவனத்தின், இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குநராக அஜித் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இவர் ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் முதன்மை செயலாளராக இருந்து வருகிறார்.
  • பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த உமாங் பேடி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதவியிலிருந்து விலகினார்.அவர் அடுத்த ஆண்டு துவக்கம் முதல் செயல்பட துவங்குவார்.

சீனாவுடன் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்ததத்தில் இந்தியா கையெழுத்திட உள்ளது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 25, 2018

  • அண்டை நாடான, சீனாவுடன் முதல் முறையாக, உள்நாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில், இந்தியா கையெழுத்திட உள்ளது.
  • சீனாவின் ராணுவ அமைச்சர், ஸாவோ கெஸி, அடுத்த மாதம் இந்தியா வருகிறார்.
  • அப்போது, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைதராபாத்தில் மெட்ரோ ரயிலின் புதிய தடத்தை தொடங்கி வைத்த ஆளுநர்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 25, 2018

  • ஹைதராபாத்தில் 16 கி.மீ தொலைவுக்கு பயணிக்கும் புதிய மெட்ரோ ரயில் தடத்தை ஆளுநர் நரசிம்மன் தொடங்கி வைத்தார்.
  • இது நாட்டிலேயே 2-வது நீளமான மெட்ரோ ரயில் திட்டமாகும்.
  • ஹைதரபாத் நகரில் 16 km தொலைவிற்கு புதிய மெட்ரோ வழித்தடம் தொடங்கியதை அடுத்து நாட்டின் இரண்டாவது பெரிய மெட்ரோ வழித்தடமாக மாறியுள்ளது.
  • தற்போதைய நிலவரம் படி,
  1. டெல்லி – 252 Km
  2. ஹைதரபாத் – 46 Km
  3. சென்னை – 35.3 Km

 TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 25, 2018


Click on the link given below to watch the TNPSC Current Affairs – September 21, 2018


 


Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here 



IBPS CLERK 2018 – PREFERENCE ORDER – TAMIL NADU

IBPS Clerk 2018 Notification : 7275 Vacancies


RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 24 , 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 22 , 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL –SEPTEMBER 21, 2018