TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 4, 2018
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 4, 2018
சைப்ரஸ்–இந்தியா இடையே சர்வதேச பிரச்சனைகள் மற்றும் சுற்றுச் சுழல் ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து:
- மூன்று ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் கட்டமாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்றார்.சைப்ரஸ்–இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளனர்.
- சைப்ரஸ்–இந்தியா இடையே சுற்றுச் சுழல் ஒத்துழைப்பு மற்றும் பண மோசடி தடுப்பு தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
‘ஒரு நாடு; ஒரு கார்டு‘ திட்டம் விரைவில் அமல்:
- ஒரு நாடு; ஒரு கார்டு‘ திட்டத்தை, மத்திய அரசு, விரைவில் அமல்படுத்த உள்ளது. ‘இதற்காக தரப்படும் கார்டை பயன்படுத்தி, ரயில், பஸ், மெட்ரோ ரயில் என, அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் செல்ல முடியும்‘
- மத்திய அரசுக்கு திட்டங்களை வகுத்து தரும் அமைப்பான, ‘நிடி ஆயோக்‘ மற்றும், சி.ஐ.ஐ., எனப்படும், இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை சேர்ந்து, டில்லியில் நேற்று, இந்தியாவின் அடுத்த தலைமுறை போக்குவரத்து வசதிகள் தொடர்பான கூட்டத்தை நடத்தின.
அஞ்சும், அபூர்விக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை உறுதி செய்தனர்:
- தென் கொரியாவில் நடைபெற்று வரும் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் மூலமாக, இந்திய வீராங்கனைகள் அஞ்சும் முட்கில் , அபூர்வி சந்தேலா ஆகியோர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை உறுதி செய்தனர் .
- 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் அஞ்சும் 248.4 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளியை கைப்பற்ற , அபூர்வி 207 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடித்தார் .இதன் மூலமாக இருவருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பு உறுதியானது
ஆசிய விளையாட்டுகளில் ‘மிக மதிப்புமிக்க வீரர்‘ என பெயரிடப்பட்டார் Ikee Rikako
- ஜப்பானிய swimmer Ikee Rikako சமீபத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 18 வது பதிப்பில் மிக மதிப்புமிக்க வீரராக (Most Valuable Player(MVP)) பெயரிடப்பட்டுள்ளது.
- இந்த போட்டியில் ஆறு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களைப் பெற்ற 18 வயதான Ikee Rikako , MVP பட்டத்தை வென்ற முதல் பெண் தடகள வீரராக ஆனார்.
இத்தாலியன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில் லிவிஸ் ஹமில்டன் வெற்றி:
- பர்முலா-1 கார் பந்தயத்தின் இத்தாலியன் கிராண்ட் பிரிக்ஸ், சுற்றில் மெஸ்சிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லிவிஸ் ஹமில்டன் வெற்றிபெற்றுள்ளார்.
- நடப்பு ஆண்டின் 14ஆவது சுற்றான இத்தாலியன் கிராண்ட் பிரிக்ஸ், நேற்று ஒட்டோடோமோ நெஸியோனல் மோன்ஸா ஓடுதளத்தில் நடைபெற்றது. இதில் நடப்பு சம்பியனான மெஸ்சிடஸ் பென்ஸ் அணியின், இங்கிலாந்து வீரரான லீவிஸ் ஹெமில்டன் முதலிடத்தை பிடித்தார்.
- அவர் பந்தய தூரத்தை 1 மணி 16 நிமிடங்கள் 54.484 வினாடிகளில் இலக்கை கடந்தார். அத்தோடு முதலிடத்திற்கான 25 புள்ளிகளையும் பெற்றார். இந்த வெற்றியானது இந்த சீசனில் ஹெமில்டன் பெற்றுக் கொண்ட ஆறாவது வெற்றியாகும்.