TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 21, 2018
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 21, 2018
ஆசிய விளையாட்டு போட்டி மல்யுத்தத்தில் தங்கம் வென்று வினேஷ் போகத் சாதனை:
- 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் நடைபெற்று வருகிறது.
- ஆசிய விளையாட்டுப் போட்டி மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கம் வென்று சாதனை படைத்தார். துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் தீபக் குமார், லக்சய் ஷியோரன் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
துப்பாக்கிச்சூடுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார் சஞ்சீவ் ராஜ்புட்:
- ஆசிய விளையாட்டுப் போட்டியின் துப்பாக்கிச்சூடுதலில் இந்தியாவின் சஞ்சீவ் ராஜ்புட் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
- ஆண்களுக்கான 50 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் சஞ்சீவ் ராஜ்புட் வெள்ளி வென்று அசத்தியுள்ளார்.
- 16 வயதே ஆன சவுரப் சவுத்ரி ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
- பதக்கப்பட்டியலில் 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் வென்று இந்திய 7-வது இடத்தில் உள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டியிள் இந்திய மகளிர் கபடி அணி வெற்றி:
- 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது.
- இதில் இந்திய மகளிர் கபடி அணி 3-வது ஆட்டத்தில் 38-12 என்ற புள்ளிக்கணக்கில் இலங்கையை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது.
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் ஜோகோவிச் சாம்பியன்:
- அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
- இதன் மூலமாக ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 9 ஏடிபி உலக டூர் மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்று தங்கமான சாதனை படைத்தார்.
- மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் ஹாலெப்பின் சர்வீஸ் ஆட்டங்களை எளிதாக முறியடித்து புள்ளிகளைக் குவித்த பெர்டன்ஸ் 2-6, 7-6 (8-6), 6-2 என்ற செட் கணக்கில் 2 மணி, 5 நிமிடம் போராடி வென்று கோப்பையை கைப்பற்றினார்.
- நடப்பு சீசனில் அவர் வென்ற 2வது சாம்பியன் பட்டம் இது.
செப்டம்பர் 2018 தேசிய ஊட்டச்சத்து மாதமாக காணப்படும்:
- மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக செப்டம்பர் 2018 ஆம் ஆண்டை அறிவித்துள்ளது.
- நோக்கம் :reaching every household with message of nutrition — ‘har ghar posha.
எஸ்.கே. அரோராவுக்கு WHO உலக புகையிலை இல்லா நாள் 2018-க்கான விருது வழங்கப்பட்டது:
- ஹென்க் பேக்கிடம் எஸ்.கே. அரோராவுக்கு WHO உலக புகையிலை இல்லா நாள் 2018-க்கான(WHO World No Tobacco Day 2018 Award)விருதை வழங்கினார்.
- புகையிலை கட்டுப்பாட்டு பகுதியில் அவர்களின் சாதனைக்காக ஒவ்வொரு ஆண்டும் ஆறு WHO பிராந்தியங்களில் ஒவ்வொரு நிறுவனத்திலும் தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.