TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 14, 2018

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹாலெப் ‘சாம்பியன்’ :

  • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சிமோனா ஹாலெப் (ருமேனியா), 3-ம் நிலை வீராங்கனையான ஸ்லோனே ஸ்டீபன்சை (அமெரிக்கா) எதிர்கொண்டார்.
  • பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் சிமொனா ஹாலெப் 7-6 (8-6), 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்லோனே ஸ்டீபன்சை சாய்த்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
  • இந்த ஆண்டில் சிமோனா ஹாலெப் வென்ற 3-வது பட்டம் இது. ஒட்டுமொத்தத்தில் அவர் பெற்ற 18-வது பட்டம் இதுவாகும்.
  • பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் சிமோனா ஹாலெப் (ருமேனியா), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) ஆகியோர் முறையே முதல் 4 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர்.

இளம் இந்திய கோல்ப் வீரர் விராஜ் மடப்பா Asian Tour தலைப்பை வென்றார்:

  • Asian Tour தலைப்பை இந்திய கோல்ப் வீரர் விராஜ் மடப்பா வென்றார்.இது அவர் பெற்ற முதல் பட்டமாகும்.
  • முன்னதாக இந்த சாதனை ககன்ஜீத் புல்லரால் நடத்தப்பெற்றது.

ராஜ்நாத் சிங் NDMC ஸ்மார்ட் சிட்டி திட்டங்களைத் தொடங்குகி வைத்தார்:


  • மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.இது புது தில்லி ஒரு உலக வர்க்க நகரமாக உருவாக உதவுகிறது.
  • இந்த திட்டங்களை புது டெல்லி மாநகர கவுன்சில் (NDMC) நடத்தி வருகின்றன.

வரலாற்றை மாற்றியமைத்த பெண்கள் பட்டியலில் மேரி கியூரி முதல் இடத்திலும், மதர் தெரேசா 20 வது இடத்திலும் உள்ளனர்:

  • இந்த கருத்துக்கணிப்பில், இதுவரை பிரபலமானவர்களாகக் கருதப்பட்டவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார் விஞ்ஞானி மேரி க்யூரி.
  • இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களான, கணினி நிரல்களை உருவாக்கிய கணிதவியலாளர் அடா லவ்லேஸும் விஞ்ஞானி ரோசலின்ட் ஃபிரான்க்ளினும் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றிருக்கின்றனர்.
  • மார்கரெட் தாட்சர், விக்டோரியா ராணி, ஜேன் ஆஸ்டின், இளவரசி டயானாவும் முதல் இருபது இடங்களில் இருக்கிறார்கள். அல்பேனியாவில் பிறந்து இந்தியாவில் வாழ்ந்த அன்னை தெரசா இருபதாவது இடத்தைப் பெற்றிருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பல்ராம்ஜி தாஸ் டான்டன் காலமானர்:

  • சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பல்ராம்ஜி தாஸ் டான்டன் காலமானர்.உடல்நலக்குறைவால் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்ற மரணமடைந்தார்.

கேள்விகள்

Q.1) ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டத்தை வென்றார் .இவர் எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவர்?

a) ருமேனியா

b) அமெரிக்கா

c) பிரேசில்

d) பிரான்ஸ்

e) இத்தாலி

Click Here to View Answer
b) இந்தியா

Q.2)Asian Tour தலைப்பை கோல்ப் வீரர் விராஜ் மடப்பா வென்றார். இவர் எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவர்?

a) இத்தாலி

b) இந்தியா

c) பிரேசில்

d) பிரான்ஸ்

e) அமெரிக்கா

Click Here to View Answer
b) இந்தியா

Q.3) NDMC ஸ்மார்ட் சிட்டி திட்டங்களைத் தொடங்குகி வைத்தவர் யார் ?

a) அனந்திபென் பட்டேல்

b) பியூஸ் கோயல்

c) சுஷ்மா ஸ்வராஜ்

d) நரேந்திர மோடி

e) ராஜ்நாத் சிங்

Click Here to View Answer
e) ராஜ்நாத் சிங்

Q.4) வரலாற்றை மாற்றியமைத்த பெண்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவர் யார் ?

a) இளவரசி டயானா

b) ஜேன் ஆஸ்டின்

c) மேரி கியூரி

d) மார்கரெட் தாட்சர்

e) விக்டோரியா ராணி

Click Here to View Answer
c) மேரி கியூரி

Q.5) பல்ராம்ஜி தாஸ் டான்டன் காலமானர்.இவர் எந்த மாநில ஆளுநர் ஆவர்?

a) நாகலாந்து

b) சிக்கிம்

c) ஜார்கன்ட்

d) சத்தீஸ்கர்

e) தெலுங்கானா

Click Here to View Answer
d) சத்தீஸ்கர்


TNPSC GROUP II – INTERVIEW POSTS NOTIFICATION Released

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 13, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 10, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 9, 2018