TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 1, 2018
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 1, 2018
இந்திய ரயில்வேயும், இந்திய எரிவாயு ஆணையமும் புரிந்துணர்வு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன:
- ரயில்வே பணிமனைகளிலும், உற்பத்திப் பிரிவுகளிலும், டெப்போக்களிலும் இயற்கை வாயுவைப் பயன்படுத்தும் வகையில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இந்திய ரயில்வேயும், இந்திய எரிவாயு ஆணையமும் ரயில் பவனில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளன.
- ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி ரயில்வே வாரியத் தலைவர் திரு. அஷ்வானி லோகானி, மற்றும் இந்திய எரிவாயு ஆணைய தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் திரு. பி.சி. திரிபாதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அரசு மின்னணு சந்தை குறித்த தேசிய இயக்கம் துவக்கம்
- அரசு மின்னணு சந்தை (Government e Marketplace (GeM) ) குறித்த தேசிய இயக்கம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கப்படும்.
- முக்கிய மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், அவற்றின் முகமைகள் அரசு மின்னணு சந்தையை பயன்படுத்துவதை விரைவுபடுத்துவதற்காக இந்த இயக்கம் துவக்கப்படுகிறது.
- அரசுத்துறை கொள்முதலில் அனைத்தையும் உள்ளடக்கிய, வெளிப்படையான, திறம்பட்ட நடைமுறையை கொண்டு வருவதும், ரொக்கமில்லாத, காகிதமில்லாத பரிவர்த்தனை என்ற நிலையை அடைவதும் இதன் இலக்காகும்.
ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவு தலைவராக தருண் அகர்வாலா நியமனம்:
- நீதிபதி தருண் அகர்வால் மேகலாய உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி நீதிபதி வசிப்தருக்கு பதிலாக ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அடல் தரவரிசையை தொடங்கியுள்ளது:
- உயர்கல்வி நிறுவனங்களின் கண்டுபிடிப்பு மற்றும் சாதனைகளுக்கான அடல் தரவரிசை((Atal Ranking of Institutions on Innovation Achievements (ARIIA) ) என்றும் புதிய தரவரிசை முறையை மத்திய கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ((All India Council of Technical Education (AICTE)) , புது டெல்லியில் தொடங்கியுள்ளது.
வோடபோன் ஐடியா நாட்டின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனம்:
- வோடோபோன் – ஐடியா இணைப்பு நிறைவடைந்தது.இதன்மூலம் நாட்டின் மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை நிறுவனமாக வோடோபோன் ஐடியா மாறியுள்ளது.
- குமார் மங்கலம் பிர்லா இதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை செயல் அதிகாரியாக பாலேஷ் ஷர்மா நியமிக்கப்பட் டுள்ளார்.
- அதிக வாடிக்கையாளர்களை கொண்டிருந்த நிறுவனம் என்ற பெருமையை ஏர்டெல் நிறுவனம் இழந்தது.
குத்துச்சண்டையில் ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்திய இந்திய வீரருக்கு தங்கம்:
- ஜகார்த்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஒலிம்பிக் சாம்பியனும், உஸ்பெகிஸ்தான் வீரருமான ஹசன்பாய் டஸ்மட்டோவை வீழ்த்தி இந்திய வீரர் அமித் பங்கல் தங்கப்பதக்கத்தை வென்றார்.
- ஆசிய விளையாட்டில் குத்துச் சண்டைப் பிரிவில் தங்கம் வென்ற 8-வது வீரர் எனும் சிறப்பை அமித் பங்கல் பெற்றார். இதன் மூலம் ஆசிய விளையாட்டில் இந்தியாவின் பதக்கம் 67-ஆக உயர்ந்துள்ளது.
ஆசிய விளையாட்டு: ஸ்குவாஷ் போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு வெள்ளி
- ஜகார்த்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் பிரிவில் இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றது.
- ஒட்டுமொத்தமாக ஸ்குவாஷ் பிரிவில் இந்திய மகளிர் அணி ஒரு வெள்ளியும், ஆடவர் பிரிவில் ஒரு வெண்கலம், தனிநபர் பிரிவில் 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை இந்தியா வென்றது.