TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 3, 2018

69 பதக்கங்களைக் குவித்த இந்தியாவுக்கு 8 –வது இடம் :

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 3, 2018

  • ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா, பாலேம்பங் ஆகிய நகரங்களில் கடந்த 15 நாட்களாக நடைபெற்றன.
  • இந்திய அணி 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என்று மொத்தம் 69 பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தை பிடித்துள்ளது.
  • பதக்கப்பட்டியலில் சீனா 132 தங்கம், 92 வெள்ளி, 65 வெண்கலங் களுடன் முதலிடத்தைப் பிடித்தது. ஜப்பான் 2-வது இடத்தையும், தென் கொரியா 3-வது இடத்தையும் பிடித்தது.
  • போட்டியை நடத்திய இந்தோனேஷியா 31 தங்கம் உள் பட 98 பதக்கங்களை வென்றது.அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டி 2022-ல் ஹாங்சவ்வில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் 3-நேஷன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 3, 2018

  • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஐரோப்பிய நாடுகளான சைப்ரஸ், பல்கேரியா மற்றும் செக் குடியரசு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
  • ஜனாதிபதியின் பயணம் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கும், இந்தியாவுக்குமான வர்த்தகம் மற்றும் தொழில்முறை உறவுகள் மேலும் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகிறார் ரஞ்சன் கோகோய்

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 3, 2018

  • உச்ச நீதிமன்றத்தின் இப் போதைய தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ராவின் பதவிக் காலம் முடிவடைகிறது. தீபக் மிஸ்ரா 45வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக 28 ஆகஸ்ட் 2017ல் நியமிக்கப்பட்டார்.
  • அடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதியாக மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாய் என்பவரை நியமிக்குமாறு தீபக் மிஸ்ரா குடியரசுத் தலைவரிடம் பரிந்துரை செய்துள்ளார்.

4வது சர்வதேச ஆயுர்வேத மாநாடு(IAVC) – 2018, நெதர்லாந்தில் நடைபெற்றது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 3, 2018

  • நான்காவது சர்வதேச ஆயூர்வேதா மாநாடு ஆயூர்வேத அமைச்சர் Shripad Yesso Naik (Minister of State For AYUSH) தலைமையில் நெதர்லாந்தில் நடைபெற்றுள்ளது.
  • இம்மாநாட்டில் “ஆயூர்வேதம் உட்பட, “சுகாதாரத்தில் ஒத்துழைப்பு” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு இந்திய தூதரகம் சார்பில் நடத்தப்பட்டது.

 பிரதமர் இந்தியா அஞ்சல் செலுத்துகை வங்கியை தொடங்கி வைத்தார் :

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 3, 2018

  • பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில்  தல்கட்டோரா அரங்கில் இந்தியா அஞ்சல் செலுத்துகை வங்கி(India Post Payments Bank (IPPB))யை தொடங்கி வைத்தார் .
  • IPPB சாதாரண மனிதனுக்கான எளிதில் அணுகக்கூடிய  குறைந்த கட்டணத்திலான நம்பிக்கை மிகுந்த வங்கியாக  உருவாக்கப்பட்டுள்ளது.
  • மத்திய அரசின்  நிதி சார்ந்த திட்டங்கள் மற்றும் பயன்களை  உரியவருக்கு சேர்த்தல் என்ற நோக்கத்தை விரைவாக அடைவதற்கென இந்த வங்கி உருவாக்கப்பட்டுள்ளது.

Dr.பசந்த் குமார் மிஸ்ரா பி. சி.ராய் தேசிய விருதினை பெற உள்ளார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 3, 2018

  • டாக்டர் பி.சி. ராய் தேசிய விருது நாட்டின் மிக உயர்ந்த மருத்துவ மரியாதை என்று கருதப்படுகிறது. இந்தியாவில் தேசிய மருத்துவ தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ம் தேதி அவரது நினைவகத்தில் கொண்டாடப்படுகிறது.
  • Dr.பசந்த் குமார் (‘Eminent Medical Person’of the year) 2018ம் ஆண்டிற்கான B.C.ராய் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்த விருதை இந்தியாவின் ஜனாதிபதி, ஸ்ரீ. ராம் நாத் கோவிந்த் வழங்க இருக்கிறார் .

Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here 



TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 3 ,2018


TNUSRB Police SI (Finger Print) 2018 Notification – 202 Posts

NABARD DEVELOPMENT ASSISTANT RECRUITMENT 2018 : NOTIFICATION RELEASED


RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 1 , 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 31, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 30, 2018